கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 செப்
2012
00:00

கேள்வி: என் லேப்டாப் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்துகிறேன். இதில் ஸ்லீப் மோட் கிடைக்கவில்லை. அது காட்டப்படுகிறது. ஆனால், இயக்கத்தில் இல்லாத நிலையில், கலர் மங்கிப் போய் காட்சி அளிக்கிறது. இதனை எப்படி இயக்கத்திற்குக் கொண்டு வருவது?
சி. ராஜேந்திரன், மேலூர்.
பதில்:
உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் மீடியா சென்டர் அப்ளிகேஷன், ஸ்லீப் மோடினையே தூங்கச் (!) செய்து விட்டது. அதனால் தான் அந்த மோட் காட்டப்பட்டும், அது வண்ணத்தை இழந்து கிரேயாகக் காட்சி அளிக்கிறது. கவலைப்பட வேண்டாம். இதனை இயக்கத்திற்குக் கொண்டு வரலாம். கீழே தரப்பட்டுள்ள செட்டிங்ஸ் செயல்முறைகளை விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் மேற்கொள்ளலாம்.
Start கிளிக் செய்து, கிடைக்கும் தேடல் கட்டத்தில் பவர் ஆப்ஷன்ஸ் (“Power Options”) என டைப் செய்திடவும். பின் Enter தட்டவும். இப்போது “Change when the computer sleeps” என்பதில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் “Change advanced power settings” என்பதில் கிளிக் செய்திடவும். இனி கீழாகச் சென்று Multimedia settings என்று தலைப்பிட்ட இடத்திற்கு வரவும். இங்கு “When sharing media” என்று இருப்பதை விரிக்கவும். இங்கு கிடைக்கும் கீழ்விரி மெனுவினைப் பயன்படுத்தி “Allow the computer to sleep” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இனி ஷட் டவுண் மெனுவில், உங்களுக்கு ஸ்லீப் மோட் தரப்படும்.

கேள்வி: ஜிமெயிலில் சில வாரங்களுக்கு முன்னர்அழித்த மின்னஞ்சல் செய்திகளை மீண்டும் பெற முடியாதா? ஒரு சில மெயில்கள் கிடைக்கின்றன. சில கிடைக்கவில்லை. செட்டிங்ஸ் எங்கு அமைப்பது?
ஆ. சி. ராஜ்குமார், கம்பம்.
பதில்:
சில வாரம் என்றால் எத்தனை வாரம்? ஜிமெயிலில் அழிக்கப்பட்ட செய்திகள், trash என்னும் பெட்டிக்கு (பிரிவிற்கு) அனுப்பப்படுகின்றன. இவை அங்கு முப்பது நாட்கள் மட்டுமே வைக்கப்படுகின்றன. அதன் பின்னர், தானாகவே அவை நீக்கப்படும். அதற்கு முன்னர், நீங்களாகவே ட்ராஷ் பாக்ஸிலிருந்தும் மெயில்களை நீக்கி இருந்தாலும், அவற்றை மீண்டும் பெற முடியாது. நீங்கள் தேடும் மெயில், ட்ரேஷ் பெட்டியில் இருக்கிறதா என அறிய, உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டில் லாக் இன் செய்து, in:trash எனத் தேடல் கட்டத்தில் கொடுக்கவும். இப்போது ட்ரேஷ் பெட்டி காட்டப்படும். இதில் நீங்கள் அழித்த மெயில் உள்ளதா எனப் பார்த்து, அவை நிலையாக உங்களுக்குத் தேவை எனில், மீண்டும் அதனை Inbox க்கு அனுப்பலாம். இதற்கு மெயில்களின் மேலாக உள்ள பாரில் காணப்படும் move பட்டனைப் பயன்படுத்தலாம்.
சில வேளைகளில், இந்த மெயில்கள் வேறு ஒரு பிரிவிற்கு அனுப்பப்பட்டிருக்கலாம். அவ்வாறு செட் செய்யப்பட்டிருந்தால், நிச்சயம் அனுப்பப்பட்டிருக்கும். எனவே அனைத்து மெயில் பெட்டிகள் (All Mail folder) என்பதனைத் தேடிப் பெற்று அங்கு உள்ளதா எனப் பார்க்கவும். எங்கும் கிடைக்கவில்லை எனில், இறுதியாக இன்னொரு வழியும் உள்ளது.
இதற்கான அமைப்பு ஒன்று இயங்கி வருகிறது. இதன் தள முகவரி
http://productforums.google.com/forum/#%21categories/gmail/accountaccessandsafety ஆகும். இங்கு சென்று ஒரு விண்ணப்பம் பதிந்து அனுப்பவும். ஒருவேளை வழி கிடைக்கலாம்.

கேள்வி: வேர்டில் டாகுமெண்ட் பைல்களைத் தயாரிக்கையில், அதன் ப்ராப்பர்ட்டீஸ் தானாக, சிஸ்டத்திலிருந்து தகவல்களை (பைல், உருவாக்கியவர் பெயர் போன்றவை) அமைத்துக் கொள்கிறது. இவற்றை டாகுமெண்ட் உருவாக்கியவர் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியாதா?
பேரா. சி. நாகராஜ், நாகமலைப் புதுக்கோட்டை.
பதில்:
வேர்டில் டாகுமெண்ட்களைத் தயாரிக்கையில் மட்டுமல்ல, கம்ப்யூட்டரில் எந்த பைலைத் தயாரித்தாலும், இந்த தகவல்கள் பைல் ப்ராப்பர்ட்டியாக அமைக்கப்படும். நீங்கள் கேட்கும் உரிமையையும் பெற முடியும். ஒவ்வொரு முறை டாகுமெண்ட் சேவ் செய்யப்படுகையில், நீங்கள் ப்ராப்பர்ட்டீஸ் பகுதியில் தகவல்களைத் தந்த பின்னர், அவற்றுடன், அதன் பின்னரே, சேவ் செய்திடும் வகையில் அமைக்கலாம். வேர்டில் இதனை எப்படி அமைப்பது எனப் பார்க்கலாம். Tools மெனுவில் இருந்து Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் இப்போது டயலாக் பாக்ஸைக் காட்டும். இதில் Save என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இந்தப் பிரிவில் Prompt for Document Properties என்று உள்ள இடத்தில் கிடைக்கும் செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இன்னொரு வழியும் உண்டு. பைல் பெயர் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் கட்டத்தில் உள்ள டேப்களைக் கிளிக் செய்து, இருக்கும் தகவல்களை எடிட் செய்திடலாம்.

கேள்வி: விண்டோஸ் பயன்படுத்த லைசன்ஸ் வேண்டும்; இல்லை என்றால், தண்டனை பெற்றுத் தரும் வரை செல்லலாம் என்று கூறுகிறார்கள். இது உண்மையா? இந்த லைசன்ஸை யார் தருவார்கள்? எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்?
ஆ. லஷ்மண பாண்டி, ஆண்டிபட்டி.
பதில்:
ஆஹா! நல்ல கேள்வி கேட்டீர்கள். தனிநபர் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் சிறிய ஊர்களில் விற்பனை செய்யப்படுகையில், விண்டோஸ் நகலெடுத்துப் பதிந்து விற்பனை செய்வதால், விண்டோஸ் லைசன்ஸ் என்றால், அது உண்மையா? என்று கேட்கும் அளவிற்குப் போய்விட்டது. இதற்கான சரியான விளக்கத்தைத் தருகிறேன்.
கம்ப்யூட்டர்களில் இயங்கும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மைக்ரோசாப்ட் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதனைக் கட்டணம் செலுத்தி வாங்கி, இன்ஸ்டால் செய்து பயன்படுத்த வேண்டும். இல்லை எனில், ட்ரெயினில் டிக்கட் இல்லாமல் செல்வது போல ஆகிவிடும். டி.டி.ஆர். பிடித்தால், தண்டனை அல்லது அபராதம் உண்டு. லைசன்ஸ் ஒப்பந்தம் என்பது உங்களுக்கும் மைக்ரோசாப்ட் கார்ப்பரேசனுக்கும் ஏற்படுத்தப்படும் காண்ட்ராக்ட். நீங்களே ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சில்லரை விற்பனையாளரிடம் வாங்கினால், இந்த வகையில் காண்ட்ராக்ட் மற்றும் லைசன்ஸ் தரப்படும். அல்லது கம்ப்யூட்டரைத் தயாரித்து வழங்கும் நிறுவனம், இதற்கான ஒப்பந்தத்தினை, மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் மேற்கொண்டு, உங்கள் கம்ப்யூட்டரில் சிஸ்டத்தினைப் பதிந்து கொடுக்கும். அப்போது Certificate of Authenticity (COA) எனப்படும், உரிமத்திற்கான சான்றிதழ் வழங்கப்படும். கம்ப்யூட்டரின் சிபியுவில் இது ஒட்டித் தரப்படும். கம்ப்யூட்டருக்கான பில்லிலும் இது சில வேளைகளில் காட்டப்படும். கட்டணம் பெற்றுக் கொண்டு நீங்களாக வாங்கும் விண்டோஸ் பதிப்பிற்கு ஒரு ப்ராடக்ட் கீ வழங்கப்படும். அதனைப் பயன்படுத்தியே நீங்கள் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை பதிய முடியும்.
பின்னர், நீங்கள் கம்ப்யூட்டரை இயக்கி இணையத்தில் செல்கையில், கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் தானாகவே, மைக்ரோசாப்ட் தளத்தினை, அப்டேட் பைல்களுக்காகவும், உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கும் விண்டோஸ் சிஸ்டம் கட்டணம் செலுத்திப் பெற்ற உண்மையானதுதானா என்ற சோதனையை நடத்துவதற்காகவும் அணுகும். அப்போது உண்மை நிலையை அது கண்டறியும். எந்த அப்டேட் பைல்களும் இறங்காது.
""உங்கள் சிஸ்டம் உண்மையானது அல்ல; பக்கத்திலிருக்கும் விண்டோஸ் டீலரிடம் இதற்கான கட்டணத்தைச் செலுத்தவும்'' என கேட்டுக்கொள்ளும். விண்டோஸ் சிஸ்டம் இயங்குவது கட்டுப்படுத்தப்படும்.
சட்டவிதிமுறைகளின் படி, விற்பனை செய்யப்படும் எந்த சாப்ட்வேர் தொகுப்பினையும் முறையான உரிமம் இல்லாமல் பயன்படுத்துவது குற்றமாகும். ஒரு நிறுவனத்தினர், கம்ப்யூட்டரைப் பயன்படுத்து பவரிடம் இந்த சோதனையை நடத்தி, தவறு இருப்பதாகத் தெரிந்தால், காவல்துறையின் உதவியுடன், பயன்படுத்துவோரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.
மற்றவர்களின் உழைப்பைத் திருடிப் பயன் அடைவது குற்றம்; பெரிய பாவம். எனவே கட்டணம் செலுத்திப் பெறுவதே நல்லது. விண்டோஸ் சிஸ்டத்தினை புதுப்பிக்க வேண்டி யதில்லை. அடுத்த பதிப்பிற்கு மாற எண்ணம் இருப்பின், அதற்கான கட்டணத்தை செலுத்தி அப்டேட் செய்து கொள்ளலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாலாஜி - ராஜபாளையம்,இந்தியா
09-செப்-201212:10:46 IST Report Abuse
பாலாஜி முல்டிமீடியா ப்ராஜெக்ட் பற்றி தளங்கள் குறுக
Rate this:
Share this comment
Cancel
Rajeshkumar - வேடசந்தூர்,இந்தியா
07-செப்-201215:06:18 IST Report Abuse
Rajeshkumar நான் அரசு இலவச மடிக்கணினி வைத்துள்ளேன் எந்த வகையான ஆண்டி வைரஸ் அதில் நான் இன்ஸ்டால் செய்ய வேண்டும் . ஏதேனும் இலவச பதிப்புக்கான வெப்சைட் அட்ரஸ் தரவும்.
Rate this:
Share this comment
Cancel
gowri - tirupur,இந்தியா
03-செப்-201209:35:01 IST Report Abuse
gowri நான் விண்டோஸ் 7 use பண்ணிடு இருக்கேன்..நான் லேப்டாப்பை 2 or 3 times on செய்தால் மட்டுமே on ஆகிறது..what problem..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X