மேன்மை அடைய வேண்டுமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2012
00:00

தெய்வ வழிபாடு, மனித வாழ்க்கையில் ஒரு முக்கிய அம்சமாக சொல்லப் பட்டுள்ளது. தெய்வ பக்தி இல்லாத மனித வாழ்க்கை, மிருகங்கள், தாவரங்களுக்குச் சமமானது. மனிதர்களுக்கு ஆடை எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியமானது தெய்வ பக்தியும்.
எவ்வளவு தான் பணமும், செல்வாக்கு மிகுந்தாலும், தெய்வம், தெய்வ வழிபாடு என்ற எண்ணமும் இருந்தால் தான், மனிதன் ஓரளவுக்காவது பாவ புண்ணியங்களுக்கு பயந்து, நடந்து கொள்வான். நாகரிகம் மிகுந்த நாடுகளில் கூட, தெய்வ வழிபாடு நடைபெறுகிறது. பல கோவில்கள், கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்படுகின்றன. அவர்களது வழிபாட்டு முறை, ஆசார அனுஷ்டானங் களில் மாற்றம் இருக்கலாம்; ஆனால், உள்ளத்தில் ஏற்பட்டுள்ள பக்தியில், வித்தியாசம் இருக்காது.
பகவானிடம் உள்ள பக்தியின் காரணமாகவும், நம்பிக்கையின் காரணமாகவும் தான், அந்த காலத்து மன்னர்கள் கூட, பகவானுக்கு பெரிய அளவில் கோவில்கள் அமைத்து, தினசரி வழிபாட்டுக்கும் வழி செய்து வைத்தனர். நாமும், அவற்றைப் பயன்படுத்தி நலம் பெற வேண்டும்.
தெய்வங்களில் ஆண் உருவமும் உண்டு, பெண் உருவமும் உண்டு. உருவம் தான் மாறுபடுகிறதே தவிர எல்லாமே, "சக்தி' என்பதிலிருந்து ஏற்பட்டது தான். சிவனை வழிபட்டாலும் சரி, பரமேஸ்வரியை வழிபட்டாலும் சரி, அந்த பரம்பொருளை வழிபடுவதாகத் தான் அர்த்தமாகிறது. அருள் செய்வதும் அந்த பரம் பொருள் தான்.
"என்னை யார் எந்த உருவத்தில் வழிபடுகின்றனரோ, அந்த உருவத்தில் நான் தோன்றுகிறேன்...' என்றார் கண்ணன். ஆண் உருவில் உள்ள தெய்வங் கள், பெண் உருவில் உள்ள தெய்வங்கள் என்று இரண்டு வகை உள்ளது.
இவ்விரண்டையுமே ஆண்களும், பெண்களும் வழிபடலாம். வழிபாட்டு முறையில் வித்தியாசம் இருப்பதால், சில தெய்வங்களை ஆண்களும், சில தெய்வங்களை பெண்களும் வழிபாடு செய்யும்படி ஏற்பாடு செய்து கொண்டுள்ளனர். அந்த தெய்வங்களுக்கான விசேஷ தினங்களையும் குறிப்பிட்டுள்ளனர்.
மனிதன் மேன்மை அடைய பல மார்க்கங்களைக் காட்டியிருக்கின்றனர். மேன்மை என்பது, எதை முக்கியமாகக் குறிக்கும் என்றால், இந்த வழிபாடு களினால் புண்ணியம் கிடைக்கும். புண்ணியம் செய்த ஜீவன், பகவானை அடைகிறது. மீண்டும் பிறவி இல்லை என்றுள்ளது.
இதே போல, சில ஷேத்திரங்களுக்குப் போய், அங்குள்ள தெய்வங்களை தரிசித்தாலும், மறுபிறவி இல்லை என்று சொல்லப்படு
கிறது. மறுபிறவி வேண்டாம் என்பது தான் பலருடைய வேண்டுகோள். அதற்காகத்தான் பாடுபட வேண்டும். இதற்கு, பக்தி தான் சிறந்த மார்க்கம். பக்தியே முக்திக்கு வித்தாகும்.
***

ஆன்மிக வினா-விடை!விரத நாட்களில் எண்ணெய் தேய்த்து தலைக்குக் குளிக்கலாமா?
தீபாவளி தவிர, மற்ற விரத நாட்களில், எண்ணெய் தேய்த்து தலைக்குக் குளிக்கக் கூடாது. ஆனால், சூரிய உதயத்திற்கு முன், தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து, விநாயகரை வணங்கிய பின், விரதத்தை, அதற்குரிய தெய்வத்தை வணங்கி துவங்கலாம்.
***

வைரம் ராஜகோபால்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ச.Dharmaraj - chennai,இந்தியா
10-செப்-201218:03:50 IST Report Abuse
ச.Dharmaraj அனைவருக்கும் அன்பு வணக்கம் !! வெகு காலம் கழித்து என் நண்பர் ஒருவரை சந்தித்தேன். நாங்கள் பேசிகொண்டிருக்கும்போது சென்னையில் மைலாப்பூரில் உள்ள மிகவும் பழைமைவாய்ந்த வெள்ளீச்வரன் கோயிலில் உள்ள தூய்மை இன்மையை பற்றி என்னிடம் சொல்லி வருத்தப்பட்டபோது என் மனதில் எழுந்த வேதனையை தெரியப்படுத்த விரும்புகிறேன். நம் வீட்டை தூய்மையாக வைத்திருப்பது போல சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அதை நாம் செய்வதில்லை. அது கூட பரவாயில்லை, ஆனால் இறைவன் குடிகொண்டிருக்கும் கோயிலை அசுத்தமாக வைத்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது . இறைவன் மீது பக்தியுள்ள யாரும் இதை செய்ய மாட்டார்கள். புதிய புதிய கோயில்களை கட்டுவதில் ஈடுபடும் அன்பர்கள் முதலில் பழைய கோயிலை நன்றாக வைத்திருக்க முயலுங்கள். நல்ல காற்று, நல்ல தண்ணீர், நல்ல எண்ணம் ( நிர்மலமான நெருப்பு ), நல்ல நிலம், நல்ல ஆகாயம், எதையும் நாம் தூய்மையாக விட்டு வைக்கவில்லை. நல்ல, தூய்மையான கோயில்களையவது புதிய தலைமுறைக்கு விட்டு விட்டு செல்வோம். ஒவ்வொருவரும் கோயிலை தூய்மையாக வைத்திருக்க முனைவோம். யார் யார் கோயிலில் விளக்கு ஏற்றுகிறார்களோ சிந்தின எண்ணையை உடனே துடைத்துவிடுங்கள். இது போன்று சிறிய சிறிய வேலைகளை தொண்டுகளாக செய்து கோயிலையும் தூய்மையாக வைத்திருங்கள். இதை ஒவ்வொருவரும் உறுதிமொழியாக எடுத்துகொள்ளவும், எடுத்துகொள்வோம். நம்நாட்டு கோயிலும் அதை பற்றிய பாரம்பரியத்தின் அருமையும் அறிவதால் வெளிநாட்டில் வசிக்கும் எம்மை போன்ற இந்தியருக்கு மிகவும் வருத்தமளிக்கின்றது. TEMPLE IS THE PLACE WHERE GOD DWELLS.
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - denhelder,நெதர்லாந்து
09-செப்-201203:27:00 IST Report Abuse
GOWSALYA மிக்க நன்றி சகோதரரே. வளர்க உங்கள் உதவி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X