இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2012
00:00

குதியுயர்ந்த செருப்பா, பேர் சொல்லப் பிள்ளையா?திருமணமாகி, 12 ஆண்டுகள் குழந்தையின்மையால், புகுந்த வீட்டாரின் குத்தல் பேச்சுக்கு ஆளாகி, மனமொடிந்திருந்தாள் என் தோழி. அவள் கணவனிடம் எந்தக் குறையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறி விட்டனர். குழந்தை வரம் வேண்டி, அவள் போகாத கோவிலும் இல்லை, செய்யாத மருத்துவப் பரிசோதனையும் இல்லை. நாங்கள் படிக்கும் காலத்தில், நாளொரு சிரிப்பும், பொழுதொரு கலகலப்புமாக இருந்த அவள், மெல்ல மெல்ல நடைப்பிணமாகி வருவதைக் காண சகிக்காமல், அவளை மிகவும் வற்புறுத்தி, ஒரு பெண் மருத்துவரிடம் கடைசி முயற்சியாக அழைத்துச் சென்றேன்.
மருத்துவரின் அறைக்குள் நானும், என் தோழியும் நுழைந்தவுடன் நலம் விசாரித்து, இருக்கையில் எங்களை அமரச் செய்து, அவர் , என் தோழியை பார்த்துக் கேட்ட முதல் கேள்வி, என்னை அதிரச் செய்து விட்டது. "எத்தனை ஆண்டுகளாக உங்களுக்கு குழந்தை இல்லை?' என்பது தான் அது.
என் தோழியைப் பற்றி நான் எதுவும் கூறாமலே, அவள் குறையை எப்படிக் கண்டுபிடித்தார் என்று ஆச்சரியமாகக் கேட்டேன்.
"உன் தோழி, என் அறைக்குள் நடந்து வரும் போதே கவனித்தேன். குதியுயர்ந்த செருப்புகளை, ஸ்டைலாக அணிந்து வந்தார். இப்படிப்பட்ட செருப்புக்களை அணியும் போது, பாதங்களின் முன் பகுதிக்கு அழுத்தமும், இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் சில மாற்றங்களும் ஏற்படுகின்றன. நீண்ட காலமாக இதே போன்று நடக்கும் போது, கர்ப்பப்பை தன் இயல்பான இடத்தை விட்டு, இசகுபிசகாக நகர்வதும், குழந்தையின்மைக்கு சில நேரங்களில் காரணமாகிறது. இதை சரி செய்வது, அவ்வளவு சுலபமல்ல என்றாலும், முயற்சிக்கிறேன்...' என்று தன், "ட்ரீட்மென்ட்டை' அன்றைக்கே துவங்கி விட்டார். குற்ற உணர்வுடன் வெளியே வந்த என் தோழி செய்த முதல் காரியம் என்ன தெரியுமா? 1,800 ரூபாய் மதிப்புள்ள செருப்புக்களை குப்பையில் வீசிவிட்டு, வெறும் கால்களுடனே வீறு நடைபோட்டு வந்ததுதான்.
இயல்பான நம் உயரத்தை அதிகப்படுத்திக் காட்டுவதை விட, குடும்ப நிம்மதி தான் முக்கியம் என்பதை அவள் உணர்ந்து விட்டாள். குதிகால் செருப்பு போடும் நாகரிகத் தோழிகளே... நீங்களும் உஷார்!
முனைவர். சங்கமித்ரா நாகராஜன், கோவை.

வாழ விடுங்கள், திருநங்கையரை!நான் ரயில் நிலையத்தில், ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்போது, நான் கண்ட காட்சி மிகவும் வேதனையை அளித்தது. திருநங்கையர், மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து ஆபாசமாக பேசி, கேலி செய்தனர் சில இளைஞர்கள். அவர்களுக்கு வந்ததே கோபம்; தகாத வார்த்தைகளால் திட்டவும், அனைவரும் பயந்து, அங்கிருந்து ஓடினர்.
திருநங்கையர் செய்த குற்றம் என்ன? கடவுள் படைத்த படைப்புக்கு, யாரை குறை சொல்ல முடியும். ஒவ்வொரு வரிடமும் குறை, நிறை இருப்பது இயற்கையே. அவர்களை மட்டும் ஏன் இழிவு படுத்த வேண்டும்.
அவர்களும் மனிதர்கள் தானே! அவர்களுக்கும் மனது இருக்கிறது. நாம் உதவி செய்யாவிட்டாலும், உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும். அவர்களில் எவ்வளவோ பேர் படிப்பிலும், வாழ்க்கையிலும் முன்னேறிக் கொண்டு தான் இருக்கின்றனர்.
அப்படி, ஒருவர் நம் குடும்பத்தில் அல்லது நம்முடைய நண்பராக இருந்திருந்தால் நாம் கேலி செய்வோமா?
திருந்துங்கள் இளைஞர்களே... திருநங்கையரை வாழ விடுங்கள்!
வி.வாசுகி, சென்னை.

கை குலுக்காதே!நான் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் பணிபுரிபவன். எனக்கு மேலே ஒரு நிர்வாக பொறியாளர் இருந்தார். அவர் அரசுப் பணியிலிருந்து டெபுடேஷனில் வந்தவர். முதல் நாள், அவர் பணியில் சேர்ந்த போது, அவரின் கைகளை பற்றி கைகுலுக்கி, திட்டு வாங்கினேன். "என்னமேன் கேடுகெட்ட இங்கிலீஷ்காரன் பழக்கத்தை செய்ற... நம்மாளு, முன்ன நோண்டு வான், பின்ன நோண்டுவான், மூக்கை நோண்டுவான், நகம் வெட்ட மாட்டான், கை கழுவ மாட்டான், வாய்க்குள்ள ஆட்காட்டி விரலை விட்டு குடைவான். அவனது கைப் பிடித்து குலுக்கினா, ஆயிரம் வியாதி தொத்தும். தமிழ் பண்பாடு, வணக்கம் தானே சொல்லச் சொல்லுது. உன் இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்லி விட்டு போ. மரியாதைக்கு மரியாதை, எஸ்கேப்புக்கு எஸ்கேப்...' என்றார். தலையாட்டி அசடு வழிந்தேன்.
சில ஆண்டுகளில், வேறு டிபார்ட்மென்டுக்கு போய் விட்டார். இருபது ஆண்டுகளுக்கு பின், நான் மார்க்கெட்டில் காய்கறி வாங்கும் போது அதே பொறியாளர் தென்பட்டார். ஆள் உருமாறியிருந்தார். "என்னைத் தெரிகிறதா<<?' என கேட்டார். எனக்கு தெரியவில்லை; தெரிந்த மாதிரி நடித்தபடி, "ஹிஹி-ஹவ் ஆர் யூ?' என்று கை குலுக்கப் போனேன். "நான்சென்ஸ் இன்னும் நீ திருந்தலையா? கைகூப்பி வணக்கம் சொல்லு மேன்...' என்றார். "ஆஹா இவரா?' ஞாபகம் வந்து, இளித்தேன். எல்லா இடங்களிலும் சுகாதாரக் காரணம் காட்டி கைகுலுக்குவதை தவிர்க்க முடியுமா? ஊரோடு ஒத்து வாழ வேண்டுமே என நினைத்தபடி, "சாரி சார்...' என்றேன்.
கைக்குலுக்குவது சரியா தவறா என்று வாரமலர் வாசகர்கள் தான் சொல்ல வேண்டும்.
சோலைமலை சீனிவாசன், காரியாபட்டி.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (23)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ammu - djibouti,இந்தியா
17-செப்-201217:24:56 IST Report Abuse
ammu இது உங்கள் இடம் : கை குலுக்குவது பற்றி என் அபிப்ராயம் அது தான். 1 நாம் நமது கலாச்சாரத்தை பின்பற்றுவதில் ஏன் இந்த தாழ்வு மனப்பான்மை 2 வேற்று நாட்டவர் நம் கலாச்சாரத்தை பின்பற்றுவதில்லையே
Rate this:
Share this comment
Cancel
தி. சௌந்தரராஜன். - சிட்னி.,ஆஸ்திரேலியா
11-செப்-201212:24:35 IST Report Abuse
தி. சௌந்தரராஜன். இங்கே தரப்பட்டவை மூன்றிலும் பேசப்படுவபை. சில தவறான செய்கைகள் என்றாலும் நமக்குத் தோதாக வக்கணையான காரணங்களை அடுக்கி மற்றவர் வாயை அடக்க நமக்கா தெரியாது,ஹ ஹ.
Rate this:
Share this comment
Cancel
ராஜா - nagapattinam,இந்தியா
10-செப்-201219:05:23 IST Report Abuse
ராஜா please treat them as human beings like ours. they are all another kind of ger people.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X