என்ன வளம் இல்லை நம் திருநாட்டில் (19)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2012
00:00

செம்மறி ஆட்டு மந்தை என்பார்களே... ஓரிடத்தில் கூட்டம் கூடினால், ஏன், எதற்கு, நமக் கென்ன ஆச்சு... நம் வேலையைப் பார்த்துக் கொண்டு போவோம் என்றிருப்பதில்லை. என்னதான் இருக்கிறது பார்ப்போமே என்ற அரிப்பு, நமக்கு மட்டுமே சொந்த மில்லை போலிருக்கிறது.
அங்கும் அப்படித்தான். வெயிலில் கால் கடுக்க நின்று கூடாரத்திற்குள் நுழைந் தால்... எதுவும் விளங்க வில்லை. ஜீபூம்பா போல தொப்பி - குஞ்சம், ஜரிகை பைஜாமா, குர்தா, தாடியோடு ஒருவர் நடுநாயகமாய் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி, பொது டாய்லெட் போல் க்யூ. காத்திருப்போருக்கு அங்கேயே ஜூஸ், பாப்கார்ன், ஐஸ்கிரீம் விற்கப்படுகிறது. வாசல் வரவேற்பு மங்கையிடம் விசாரிக்க...
"அட... ஜோதிடம், கைரேகை சாஸ்திரம்!'
அதற்காக மேஜையிலும், அலமாரியிலும் செம்பழுப்பாக காதிதங்களை அடுக்கி வைத்திருக் கின்றனர். அங்கங்கே நெட் கபே போல, திரைச் சீலை மறைப்புகள். ஜோதிடத்திற்கா இத்தனை நேரம் நின்றோம், இதுக்கா செலவு செய்து அமெரிக்கா வந்தோம்?
மகா கடுப்பு!
வந்ததற்குச் சும்மா போகாமல், "படமெடுத்துக் கலாமா?' என்று கேட்க, அதற்காகக் காத்திருந்தது போல, திரும்பி மகிழ்வுடன் போஸ் கொடுத்தது ஜீபூம்பா!
ஆர்லேன்டோவிலிருந்து, மூன்று மணி நேர கார் பயணத்தில், மியாமியும் இரண்டு மணி நேரத்தில் கோக்கோ பீச்சும் அழைத்துக் கொண்டேயிருந்தன.
கோகோவின் பெயரில் உள்ள கிக் நேரில் இல்லை. அங்கங்கே படுக்கை விரித்தும், பலகை பரப்பியும் மல்லாந்திருக்கின்றனர். குடை அமைத்து, அமர்ந்து, கொரிக்கின்றனர், சொச்ச உடையுடன். வண்ணத் திரவம் அருந்தி, எழுந்துபோய் அலையில் மிதக்கின்றனர். திரும்ப வந்து குப்புறப் படுக்கை!
யார் வருகின்றனர், கவனிக்கின்றனர், ஜொள்ளு விடுகின்றனர், படமெடுக்கின்றனர் என்பது பற்றி, யாருக்கும் எந்த கவலையும் இல்லை; கண்டு கொள்வதுமில்லை. நாம் அப்படியிருக்க முடியுமா? முழு உடை நனை வதற்கே கூசி, குளிக்கிற மாதிரியும், கிளிஞ்சல் பொறுக்குகிற மாதிரியும் எல்லாவற்றையும் கண்டும், படமெடுத்தும், "கிளிக்' கலாம்.
அங்கேயே உடை மாற்ற அறைகள் வைத்திருக்கின்றனர். மியாமி பீச்சிற்கு, நிச்சயம் ஒருநாள் போதாது; குறைந்தது, ஒரு வாரமாவது தங்கணும். நீண்ட தொலைவு கடலோரம் நடக்கலாம்; மூழ்கலாம். கடலுக்குள், ஆங்கிலப் படங்களில் பார்த்ததைப்போல, முழு உபகரணங்களுடன் நீந்தலாம்.
அங்கே மூன்றுவித பீச்கள். பொது, அரை, முழு (நிர்வாண) பகுதிகள். உடைகள் மட்டும் பிரச்னை. கூலிங்கிளாஸ், இயர்போன், மேக்-அப் எல்லாம் பலம். முழு உடையோடு சுற்றிப் பார்க்கச் செல்லும் நமக்குத்தான் சங்கோஜம். நம்மை வேற்றுக் கிரகவாசியாகப் பார்க்கின்றனர். அப்படியே திரிகிறோமே... என்ற லஜ்ஜை இல்லை.
எப்படியிருக்கும்! அதற்காகத்தானே செலவு செய்து, அறை போட்டுத் தங்குகின்றனர். கடல் பத்தாது என்று, பெரும் பொருட்செலவில் நீச்சல் குளங்கள் வேறு. அங்கங்கே திருவிழாவிற்குச் செல்பவர்கள் பாய் விரித்து, மூட்டை முடிச்சுடன் படுப்பதுபோல இவர்களும்! டென்ட், வண்ணக்குடையின் கீழ்! உலக இசை வாத்தியங்களெல்லாம் அங்கே ஒலிக்கின்றன. அகில உலக நடனங்கள் அரங்கேறுகின்றன. இது பகல் கூத்து.
புகை, மது, மாது என, எல்லாம் அமர்க்களம்; இந்தப் பகுதிகளுக்கு எல்லாருக்கும் அனுமதி இல்லை; அதற்குத் தனிக் கட்டணம்.
சினிமா மட்டுமின்றி, விளம்பர ஷூட்களும் அங்கே சகஜம். குளிக்கின்றனர், குடிக்கின்றனர், மணலில் கவிழ் கின்றனர், எழுகின்றனர். மறுபடி குளியல், குடி... அங்கே பத்தாது என்று, அறைக்கு வந்த பின்பும், இவைகள் தொடர்கின்றன.
நயாகரா பற்றி, நமக்கெல்லாம் மனதிற்குள் ஒரு மாதிரி எதிர்பார்ப்பு இருக்கும். <உலக அளவில் பெரிய அருவி என்கின்றனரே... பெரிய பெரிய மலைகள், தீவு, அதிலிருந்து கொட்டும் என்ற கற்பனை. நாம் பார்க்காத எதைப் பற்றியுமே, நம் வசதிக்கு, நம் விருப்பத்திற்கு உ<ருவகப்படுத்துவது வழக்கம்.
நயாகரா அப்படி ஒன்றும் மலையிலிருந்து உற்பத்தியாகவில்லை. ஆறு என்கின்றனர். ரோட்டில் நமக்கருகிலேயே ஆறும், துணையாய் நீண்டுகொண்டே போய், ஓரிடத்தில் பொத்தடீ ரென்று கிடுகிடு பள்ளத்தில் கொட்டுகிறது. அந்த நீர்வீழ்ச்சி எப்படி உருவானது என, ஆதிகாலத்து ஆதிவாசிகளின் காதல் சில்மிஷங் களுடன், சினிமா ஓட்டிக் காட்டுகின்றனர். இலவச ÷ஷா. அதுவும்கூட பிரமாண்டம்.
குற்றாலத்திற்குப் போகும்போது, 4 கி.மீ., தொலைவிலேயே, சாரலும், தூரலும் நம்மை வரவேற்கும். இங்கே அதைவிட அதிகத் தூவானம். எங்கிருந்தோ ஓடிவரும் ஆறு, கீழே கோ... வென விழுகிறது. அந்த ஆற்றுக்கு இந்தப் பக்கம் அமெரிக்கா; அடுத்த பக்கம் கனடாவின் டொரென்டா.
வல்லவர்கள், ஒவ்வொன்றையும் திட்டமிட்டு, செதுக்கி, செதுக்கி உருவாக்கியிருக்கின்றனர். நீர் வீழ்ச்சியின், ஆழத்தை நெருங்க முடியாது என்பதால், மினி கப்பலில் ஆட்களை ஏற்றிச் சென்று, அருவியின் அருகே கொண்டுபோய் நனைத்து, திரும்ப அழைத்து வந்து கரை சேர்க்கின்றனர்.
இதற்கும் பெரிய வரிசை நிற்கிறது. உடைமை, <உடை எல்லாம் நனையாமலிருக்க, பிளாஸ்டிக் கவர் தருகின்றனர். அதைப் போர்த்திக்கொண்டு நனையலாம். அருவியின் அருகே, உரசும் போது, நிச்சயம் ஆனந்தம். பரமானந்தம்! ஓ... என்ற இரைச்சல். குதூகலம்!
அருவியைப் பார்க்க வரும் எல்லாரும், குளிக்கச் செல்வதாய் தெரியவில்லை. குளிக்கத் தனி வழி. தனி கட்டணம்! நம் பொருட்களைப் பாதுகாக்க லாக்கர்கள் தருகின்றனர்.
அப்புறம் குகைபோல நடந்து நடந்து, குளிர்ந்து, மரப்படிகளில் வளைந்து, வளைந்து ஏறி, அருவியின் வேகமும், அது விழும் பாறைகளும் ஆபத்து என்பதால், ஒரு மூலையில் மட்டும் மேடை அமைத்து, கொஞ்சமே கொஞ்சமாய் நம்மேல் விழுகிற மாதிரி செய்திருக்கின்றனர் செயற்கையாய்.
அருவி பிரமாண்டம், ராட்சஷம், பார்வைக்குப் பரவசம் என்றாலும் கூட, என்னதான் சொல்லுங்கள், நம் குற்றால சுகம் அங்கே இல்லை. குற்றாலத்தில் இயற்கையாய் மலைகளி லிருந்து செடி, கொடிகள், மூலிகைகளுடன் வந்து விழும் நீரின் சுதந்தரம், அங்கு இருப்பதாகத் தெரியவில்லை.
ஆனாலும் கூட இத்தனை மெனக்கெட்டு, பிரயாசப் பட்டு அருவியை உருவாக்கி, ஆட்களை ஈர்த்துக் கொண்டிருப்பதைப் பாராட்டியே ஆக வேண்டும். ஓஹியோ மற்றும் இன்னும் சில நதிகள் சேர்ந்து, கூட்டணி வைத்துத்தான் நயாகராவாக உருவெடுத் திருக்கிறது என்கின்றனர்.
ஓஹியோ என்றதும், சம்பவம் ஒன்று ஞாபகத் திற்கு வருகிறது. மறக்க முடியுமா... பிட்ஸ்பர்க் நகரின் மத்தியில், ஓஹியோ ஆறு பாய்கிறது. பார்க்க ரம்மியம். ஒரு மாலைப்பொழுதில், சும்மா நடந்து வரலாம் என்று நகர்வலம் கிளம்பினேன்- தனியாக!
ஓஹியோவின் பக்கவாட்டிலேயே, அந்தப் பழைய நகரத்தின் கட்டடங்கள், அமைப்பு, வனப்பு என, நேரம் போயிற்று. நடந்த களைப்பில் டீ குடிக்கலாம் என்று தேடினால்... தேநீர் விரும்பி களுக்கு அமெரிக்கா உகந்த இடமல்ல. எங்கும் காபி மயம்.
அகப்பட்ட ரெஸ்டாரென்டில் டீயும், அதற்குத் துணையாய் பன்னும் சாப்பிட்டு, வெளியே கொஞ்ச தூரம் வந்திருப்பேன்.
"ஏ மேன்!' என்று முதுகுக்கு பின் ஒரு கத்தல். என்னவென்று திரும்பிப் பார்த்தால், ஒருவன் என்னைப் பின்தொடர்வது புரிந்தது. இவன் எதற்கு என்னை... அக்கம் பக்கம் வேறு எவரும் இல்லை. என்ன செய்யலாம்? இவன் எதற்கு என்னைத் துரத்த வேண்டும்?
தொடரும்.

என்.சி. மோகன்தாஸ்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரெங்கசாமி Santhanam - Srirangam,இந்தியா
13-செப்-201216:38:52 IST Report Abuse
ரெங்கசாமி Santhanam நயாகராவைப் பற்றி இப்படி ஒரு கருத்தை எழுதிய உங்கள் பத்திரிக்கைக்காரர் கருத்து ஒருதலைப் பட்சமானது. குற்றாலத்துடன் இதை ஒப்பிட்டிருக்கிறார். சிரிப்புத்தான் வருகிறது. காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு என்ற அடிப்படையில் வேண்டுமானால் அவர் கருத்து ஏற்கப்படலாம். நயாகராவைப் போன்ற ஒரு அருவி இந்தியாவில் இருக்குமானால் அதை நாம் பராமரிக்கும் லக்ஷணம் குற்றாலத்தை நாம் பராமரிப்பதிலிருந்தே அறியலாம். நயாகராவை அவ்வளவு தூய்மையாக இவர்கள் வைத்திருப்பதற்கே இந்த மனிதர்களை நாம் வணங்க வேண்டும். இந்த பிரம்மாண்டம் இயற்கையின் வரம். அதை பாதுகாப்பது இன்னாட்டினரின் பெருமை.
Rate this:
Share this comment
Cancel
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
10-செப்-201214:22:24 IST Report Abuse
சகுனி நீண்ட நாட்களுக்குப் பிறகு மீனவன் ரீ-என்ட்ரி .... என்னாச்சி சார் ??? ..... ஆளையே காணம் ??
Rate this:
Share this comment
Cancel
N .C .மோகன்தாஸ் - kuwait,இந்தியா
10-செப்-201209:07:23 IST Report Abuse
N .C .மோகன்தாஸ் டியர் மிஸ்டர் மீனவன்..சாரி .It is purely a personal thing.Even the concern husband is not ready to take action what is the use of telling this ugly story outside? Frontliners kuwait services to community and the real need. Better let us do not waste time for this type of matters.-NCM
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X