அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2012
00:00

கடந்த சில வாரங்களாக கொல்... கொல்... என இரும ஆரம்பித்திருந்தார் லென்ஸ் மாமா. அத்துடன் சளியாக துப்ப துவங்கியதும், "மாமா, ஓவரா நீங்க சிகரட் பிடிக்கிறீங்க... அதனால வந்த கோளாறு தான் இது! இந்த சளி, நுரையீரலில் கட்டிக்கிச்சுன்னா ரொம்ப டேஞ்சர்! வாங்க, டாக்டரை பார்க்கலாம்!' எனக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றேன்.
ஏகப்பட்ட டெஸ்ட் எழுதிக் கொடுத்தார் டாக்டர். டெஸ்ட் முடிந்து, ரிசல்டுடன் டாக்டரை சென்று பார்த்த போது, "மிஸ்டர் லென்ஸ்... சிகரட் பிடிப்பதை உடனே நிறுத்துங்கள்... இந்த மாத்திரையை ஆறு வாரம் சாப்பிடுங்கள்...' எனக் கூறி அனுப்பினார்.
அலுவலகம் வந்து, இந்த பாழாய்ப் போன சிகரட் தோன்றிய விதம் பற்றி லைப்ரரியில் தேடினேன். இதோ, அதன் தொகுப்பு...
இளைஞர்கள் முதல், கிழம் லென்ஸ் மாமா வரை நண்பனாகத் திகழும் சிகரட், 19ம் நூற்றாண்டில் தான் முதன் முதலில் தயாரிக்கப்பட்டதாம், அமெரிக்க செவ்விந்தியர்கள் புகையிலைச் செடிகளை எரித்து, சுற்றிலும் இருந்து புகையை நுகர்ந்தனராம்.
இவர்களே, காலப் போக்கில் வெள்ளியாலும், களிமண்ணாலும், மரக்கட்டையாலும் செய்யப் பட்ட குழாய்களில், புகையிலையை அடைத்துப் புகைக்கத் துவங்கினராம்.
பிறகு, சுருட்டு என்னும் வடிவம் தோன்றிற்றாம். இங்கிலாந்தில் கைத்தொழிலாக இருந்த சுருட்டு, காலமாற்றத்தால் இயந்திரத் தொழிலாக மாறியதாம். இத்தகைய வளர்ச்சித் திட்டத்தின் உச்சநிலையே, காகிதத்தில் சிகரட் செய்யப்பட்டதாம். அப்பொழுது அதன் திருநாமம் பிரேசிலில், "பாபிசிட்டோஸ்' எனப்பட்டதாம்.
இன்றைய வளர்ச்சியை சிகரட், கி.பி.1855ல், இங்கிலாந்தில் பெற்றதாம்.
காண்பதற்கு சிகரட் சிறியதாக இருந்தாலும், இதன் உடல் பகுதியில், 270 வகையான ரசாயனப் பொருட்கள் கலந்துள்ளனவாம்.
அவற்றில் சில: நிக்கோடின், பர்பரோஸ், கார்பன் டை ஆக்சைட், ஆர்செனிக், பிரஸ்லிக் அமிலம், மீத்தேன், பார்மிக் அமிலம், கோலிடைன், பைரடின், கிரிசால், பைரான், ரூபிடின், பார்மோலின், பிரிடின், காரிடின், லெண்டிடின், மைதிலின், பைக்கோலின், ஏட்டி டைன், விரிடைன், மெதிலைபின், பென்ஸ்பிரின், பார்மால்டி ஹைட், பார்மிக் ஆல்டிஹைட், வெடியுப்பு, மார்ஜுவானா, அக்ரோலின் ஆகியவை.
இவற்றில் நிக்கோடின் என்ற நச்சுப் பொருள் தான் மிகவும் ஆபத்தானதாம். இது மூளைப் பகுதியில் உள்ள நுண் துளைகளைப் பாதிக்கும் ஆற்றல் பெற்றதாம். ஒரு சிகரட்டிலிருக்கும் நிக்கோடினை தனியே பிரித்தெடுத்து, ஒருவரின் ரத்தத்தில் செலுத்தினால், அது அவரை மரணமடையச் செய்யும் அளவிற்கு நச்சுத்தன்மை பெற்றதாம்.
புகைக்கும் போது, முழுப் புகையும் உடலுக்குள் செல்வது இல்லையாம். இது, இதயத்திலுள்ள ரத்தக் குழாய்களை சுருங்க வைத்து, இதயத்திற்குத் தேவையான ரத்த ஓட்டத்தைத் தடை படுத்துகிறதாம். இதனால், இளமையிலேயே மாரடைப்பு வரும் நிலைமை ஏற்படுகிறதாம்.
இத்தகைய சிகரட்டைப் புகைக்கும் போது, புகைப்பவரின் உடலினுள், 2000 டிகிரி பாரன் ஹீட் வெப்பம் செல்கிறதாம். இவ்வெப்பத்தினால் சுவாசப் பை சுவர்கள் பாதிக்கப்படுகின்றனவாம். இதனால், புற்றுநோய் எளிதில் தாக்கும் அபாயம் உண்டாகிறதாம்...
இப்பொழுதெல்லாம் புகைப்பதை லென்ஸ் மாமா குறைத்து விட்டார். சிகரட்டை இரண்டாக உடைத்து, இரண்டு இழுப்பு இழுத்து விட்டுப் போட்டு விடுகிறார்.
"பீடி புகைப்பது, சிகரட் புகைப்பதை விட ஆபத்தில்லாதது...' என எவரோ சொல்லக் கேட்க, "பீடிக்கு மாறி விடவா?' என பார்ப்பவரை எல்லாம் கேட்டு வருகிறார்!
***

"என்ன ஓய் நாராயணன்... என்னாங்காணும் என்னமோ பெரிய சிந்தனையில் ஆழ்ந்து உட்கார்ந்திருக்கிறீர்?' என்று, நடுத்தெரு நாராயணனிடம் கேட்டபடியே மேல் துண்டால் நாற்காலி தூசியைத் தட்டி விட்டு, உட்கார்ந்தார் குப்பண்ணா.
"வேறொண்ணுமில்லை. பெண்களின் அழகான விரல்களை, "காந்தள் விரல்கள்' அப்படின்னு உவமை சொல்றாங்களே... பொதுவா, பெண்ணின் விரல்களை வெண்டைக்காயோடு ஒப்புமை சொல்வாங்க. இங்கிலீஷ்லே கூட வெண்டைக்காய்க்கு, "லேடீஸ் பிங்கர்'ன்னுதானே பேரு... இந்த காந்தள் காய் எப்படி இருக்கும்? பார்த்ததில்லையே... அதைதான் யோசிச்சுகிட்டு இருக்கேன்!' என்றார் நாராயணன்.
"போச்சுடா... ரெண்டு பெரிசுகளும் இன்றைக்கு பிளேடு போட்டு தள்ளப் போகின்றனர்...' என, எண்ணியபடியே பெரிசுகளைப் பார்த்தேன்.
"காந்தள் என்பது காயும் இல்லே; பழமும் இல்லே; அது ஒரு பூ...' என்றார் குப்பண்ணா. "இது, குறிஞ்சி நிலத்துக்குரிய மலர். மலைச்சாரலில் அருவியின் அருகே காந்தள் மிகுதியாக வளரும். மலை முழுவதும் இதன் மணம் கமழும். இது கொத்துக் கொத்தாக மலரும் இயல்பு உள்ளதால், "குலைக்காந்தள்' அப்படின்னும் சொல்வாங்க.
"இந்தப் பூவிலுள்ள நறுந்தாதில், தும்பி என்னும் வண்டு ஊரும். நடு நிலைமையிலிருந்து பிறழாத சான்றோரைக் கண்டதும், நன்மக்கள் அவர்களுக்கு இடம் கொடுத்து, ஆதரவு செய்து உபசரிப்பதுபோல, வண்டு வாய் திறக்கும் போது, காந்தள் மலரின் முகை மலருகிறது என்று ஒரு புலவர் பாடியிருக்கிறார்.
"தலைவிக்கு தலைவன் அளிக்கும் கையுறைப் பொருட்களில், காந்தள் மலரும் ஒன்று. ஊர் பொதுவிடத்தில் துறுகல்லில் படிந்த காந்தள் மலர், யானை முகத்தில் உள்ள புண்ணைப் போல இருக்கிறது என்கிறார் ஒரு கவிஞர். நீண்ட காம்போடு கூடிய மலரை, படத்தை விரித்த பாம்புக்கும், கை விரலுக்கும் உவமையாகக் கூறுவர்.
"தலைவனுடைய மலையிலிருந்து அருவியில் வந்த காந்தள் கொடியின் கிழங்கை, தலைவி, தன் இல்லத்துக்கு எடுத்து வந்து, நட்டு, வளர்த்துப் பாதுகாத்தாள் எனும் செய்தி, சங்க இலக்கியத்திலிருந்து தெரிகிறது.
"வெண்காந்தள், செங்காந்தள் என்று இதில் இருவகை உண்டு. செங்காந்தளை குருதிப் பூ என்றும் கூறுவர். இது கோழியின் சிவந்த கொண்டை போல தோற்றம் அளிக்கிறது என்று ஒரு புலவர் சிறப்பித்துப் பாடியிருக்கிறார்.
"காந்தள் மலரோடு, முல்லையையும், குவளையையும் இடையிடையே கோர்த்து, மாலையாகக் கட்டுவது உண்டு. தலைவியின் மேனி மணத்துக்கும், நுதலின் மணத்துக்கும், காந்தள் மலரின் வாசனையை உவமையாகச் சொல்வது மரபு...' என்று சொல்லி முடித்தார் குப்பண்ணா.
கேட்ட எனக்கு மூச்சு வாங்கியது.
***

அரேபியன் இரவுகள், இதன் மறுபெயர் ஆயிரத்தொரு இரவுகள். இது பண்டைய நாட்டுக் கதைகளின் தொகுப்பு. இக்கதைகள் யாவும் இந்தியாவில்இருந்து அரபு நாட்டுக்குச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
பலர் கூறிய கதைகளின் தொகுப்பாக இருப்பினும், இவை யாவும், ஒரே ஒருவரால் கூறப்பட்டது போல் எழுதப்பட்டிருக்கிறது.
ஒரு பெண்ணை மணந்தார் ஷெக்ரியார் என்ற மன்னர். அவள், மன்னனை ஏமாற்றி விட்டாள். சினமுற்ற மன்னன், பின், மணம் செய்து கொண்ட ஒவ்வொரு பெண்ணையும் அடுத்த நாள் காலையில் கொன்று விடுவது வழக்கம்.
கடைசியில் ஷெக்ரசாத் என்பவளை மணந்தார். அடுத்த நாள் காலையில் அவள் கொலை செய்யப்படுவதற்கு முன், தன் தங்கையை ஏவி விட்டுக் கடைசி கதை ஒன்று தங்கைக்குச் சொல்ல, ஷெக்ரசாத்திற்கு அனுமதி தரவேண்டுமென்று கேட்கச் சொன்னாள்; அரசனும் அனுமதித்தார்.
கதையை ஆரம்பித்தாள் ஷெக்ரசாத். அரசனும் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தார். கொலை செய்யும் நேரம் வந்தது. கதை முடியவில்லை. கதை கேட்கும் ஆர்வத்தில் மூழ்கி இருந்த அரசன், அடுத்த நாள் காலை வரை கொலை செய்வதை தள்ளிப் போட்டான்.
கதையை ஒன்றன்பின் ஒன்றாகப் பின்னி, 1001 இரவுகள் கடத்தி விட்டாள் ராணி ஷெக்ரசாத். மன்னனும் கொலை செய்வதை ஒவ்வொரு நாளும் தள்ளிப் போட்டு வந்தான். ஷெக்ரசாத்தின் கதைகளில் மனம் லயித்த அரசன், கொலை செய்யும் கட்டளையைத் திருப்பிப் பெற்று, ஷெக்ரசாத்தை ராணியாக்கிக் கொண்டான்.
இக்கதைகள் யாவும் அரசர்களின் வீரச் செயல்களையும், அவர்களுடைய பிரபுக்கள், அடிமைகள், வியாபாரிகள், நடன மாதுகள், அபூர்வ மிருகங்கள் ஆகியவற்றைப் பற்றி கூறுபவை. அலிபாபாவும், 40 திருடர்களும் என்பது இக்கதைகளில் ஒன்று. இக்கதைகள் பல ஆசிய, ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
***

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskar - Tindivanam,இந்தியா
12-செப்-201218:01:36 IST Report Abuse
Bhaskar I want an apointment to meet Mr.Andhumani to say to him the most important scamble next to Granite scamble, which leads to the inflation. Here Thousands of crores rupees are involved.
Rate this:
Share this comment
Cancel
gulf.yogi@gmail.com - gulf,இந்தியா
12-செப்-201216:33:22 IST Report Abuse
gulf.yogi@gmail.com உங்களையெல்லாம் நாடுகடதனும்யா ...
Rate this:
Share this comment
Cancel
தி. சௌந்தரராஜன் - சிட்னி,ஆஸ்திரேலியா
11-செப்-201211:48:49 IST Report Abuse
தி. சௌந்தரராஜன் சும்மா சொல்லக்கூடாது. லென்ஸ் மாமாவுக்கு சளி வந்ததும் சரி, நடுத்தெரு நாராயணனுக்கு சிந்தனை வந்ததும் சரி.. வாசகனுக்கு ஒரு தகவல் சுரங்கமே கிடைச்சுடுச்சே.ஆகா பெரியவங்க சம்மந்தப்பட்டது எல்லாம் நன்மைக்கே! குவளை எழில்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X