அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2012
00:00

** ஜி.தினேஷ், ராஜபாளையம்: தன்னம்பிக்கை வேண்டுவோருக்கு நீங்கள் கூற விரும்பும் உதாரண மனிதர் யார்?
பெரிய, பெரிய மனிதர்கள் பக்கமெல்லாம் போக வேண்டாம்... வீட்டு வேலை செய்யும் அஞ்சலை; காய்கறி விற்கும் குப்பம்மாள்; ஆப்பக்கடை அலமேலு இவர்கள் போதாதா... வீட்டு செலவுக்கு பைசா தராத, "குவாட்டர்' கிராக்கி கணவர்களை சமாளித்து, எவ்வளவு தன்னம்பிக்கையுடன் குடும்பம் நடத்துகின்றனர்.
***

* சி.கல்யாணராமன், சென்னை: நிலம் பார்த்து நடக்கும் பெண்கள் இன்னமும் இருக்கின்றனரா?
சுற்றும், முற்றும் பார்த்து நடந்தாலே, செயினை பறித்துக் கொண்டு ஓடுகின்றனர்; இடி ராஜாக்கள் இடித்துத் தள்ளுகின்றனர்... இத்தனையும் நடக்கும் போது, இப்படி ஒரு கேள்வி தேவையா?
***

** இ.நல்லத்தம்பி, மதுரை: உண்மையே பேசி கஷ்டப்படுவதை விட, சமயத்திற்கு தகுந்தாற்போல பொய் பேசி, மிக வசதியாக வாழலாமே!
வசதியாக வேண்டுமானால் வாழலாம்; ஆனால், மன நிம்மதியோடு வாழவே முடியாது! மன நிம்மதி இல்லாமல், பொருள் இருந்து என்ன பயன்? இரவில் உறக்கம் கூட வராதே... நிம்மதியான தூக்கம் இல்லாத வாழ்வு ஒருவனுக்கு தேவையா?
***

*எல்.ஷ்யாம் செல்வராஜ், நத்தம்: எனக்கு பல கஷ்டங்கள்... கஷ்டங்களை குறைக்க என்ன வழி?
அனாவசிய தேவைகளை, "கட்' செய்யுங்கள்; கஷ்டங்கள் குறைந்து விடும். தேவைகள் அதிகமாக, அதிகமாகத்தான் கஷ்டம் அதிகரிக்கிறது; துன்பம் வந்து சேருகிறது.
***

*மா.தமிழரசி, புதுச்சேரி: மனம் முழுவதும் குழப்பத்தில் இருக்கும் போது, என்ன செய்வீர்கள்?
பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை, தற்காலிகமாக மூட்டை கட்டி வைத்து விட்டு, பிடித்த இசையை கேட்டு கொண்டே சைக்கிளை மிதித்து, நீண்ட தூரம் செல்வேன். குழப்பம் தன்னால் மறந்து போகும்; தெளிவு கிடைக்கும். பேனாவும், பேப்பரும் எடுத்து, குழப்பத்திற்கான காரணத்தை எழுதி, எது, எதுக்கு முன்னிலை எனக் குறித்து வைத்துக் கொள்வேன். மனபாரம் இறங்கி விடும்.
***

** பி.ராம்பிரபு, கவரப்பேட்டை: வாழ்க்கைக்கு வரையறுத்த நெறிமுறைகள் தேவையா?
கண்டிப்பாக... அவை இல்லாவிட்டால், மனிதனுக்கும், மிருகத்துக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும்.
***

*வே.ஹரிகிருஷ்ணன், கீழ்ப்பாக்கம்: ஒரு முறைக்கு, நூறு முறை சிந்தித்து செய்த செயலும் கூட தோல்வி அடைந்தால்...
நூறு முறை செய்த சிந்தனையிலும், ஓட்டைகள் கண்ணில் படவில்லை என்பதே பொருள்.
***

*ச.சத்தியமூர்த்தி, சமயநல்லூர்: ஒரு குடும்பத்தில் அதிகம் உழைப்பது ஆணா, பெண்ணா?
சந்தேகமில்லாமல் பெண் தான்! சம்பாதித்து போடுவதுடன் தன் கடமை முடிந்து விட்டதாகவே பெரும்பாலான ஆண்கள் கருதுகின்றனர். சமைப்பதில் ஆரம்பித்து, பிள்ளைகளின் கல்வி - எதிர்காலம் வரை நெடுந்தூர சிந்தனையுடன் உழைப்பது பெண்கள் தான்!
***

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திசௌந்தரராஜன் - சிட்னி,ஆஸ்திரேலியா
11-செப்-201211:59:18 IST Report Abuse
திசௌந்தரராஜன் அன்றாடம் சந்திக்கிற பிரச்னைகள் பற்றிய கேள்விகள் தான் என்றாலும் பதில்கள் கூர்மையாகவும் சாணக்கியத்தனமாகவும் ஜொலிக்கின்றன. ஒரு அன்பான யோசனை. அந்துமணி என்ற பெயரை ஏன் சாணக்கியன் என மாற்றக்கூடாது?
Rate this:
Share this comment
Cancel
malan - newdelhi,இந்தியா
09-செப்-201215:57:01 IST Report Abuse
malan பதில்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
karthikeyapandian - madurai  ( Posted via: Dinamalar Android App )
09-செப்-201213:33:27 IST Report Abuse
karthikeyapandian super answer...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X