திண்ணை!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2012
00:00

கேள்வி : பக்தர்களுக்குள் ஏழை - பணக்காரன் என்ற பாகுபாட்டை, ஏன் இறைவன் உண்டாக்கி வைத்துள்ளான்?
காஞ்சி பெரியவர் பதில்: அவனல்ல; நாம் தான் உண்டாக்கி வைத்துள்ளோம். எல்லாரும் பணக்காரர்களாக ஆகி விடுவதாலேயே நிர்பயமாக, சாந்த மாக, நிம்மதியாக இருக்க அது உதவுமா? எல்லாருக்கும் நிறைய பணம் வந்து விட்டாலும், ஒவ்வொருவனுக்கும் மற்றவனை விட அதிகம் இருக்க வேண்டும் என்ற ஆசையும், அதனால், போட்டியும், சச்சரவும் இருந்து கொண்டே தான் இருக்கும்.
நமக்கு வேண்டிய சவுகரியம் இருந்தால் மட்டும் போதாது. இன்னொருத்தனை விட, அதிகம் இருக்க வேண்டும் என்ற போட்டி மனப்பான்மையே மனித சுபாவம்.
எல்லாருக்கும் எல்லா சவுகரியங்களும் சமமாய் கிடைக்கும் என்றால் கூட, அது, தனக்கே முதலில் கிடைக்க வேண்டும் என்று, ஒவ்வொருத்தரும் போட்டி போடுகின்றனர்.
போட்டி இருக்கிற வரையில், பணத்தால் யாருக்கும் மன நிறைவு உண்டாகாது. பொருளாதார வசதி மட்டும் உண்டாவதால், இந்த போட்டி குறையாது.
***

திராவிட நாடு திராவிடர்களுக்கே என்பது, நம் லட்சிய கீதம். இதை ஏற்றுக்கொள்ளாத சிலர், "ஒரே நாடு இந்தியா' என்று ஒய்யாரம் பாடுகின்றனர். யார் அந்த, "அவர்கள்?'
தி.மு.க.,வின் பிரசாரத்தாலும், இன்னமும் மனம் மாறாமலும், போக்கை மாற்றிக் கொள்ளாமலும் உள்ளவர்கள்! அய்யர்களா, தீட்சிதர்களா, சாஸ்திரிகளா, காங்கிரஸ்காரரா, கம்யூனிஸ்ட்களா, தமிழரசுக் கட்சிக்காரர்களா என்று பிரித்துப் பிரித்துப் பார்த்துப் பகை மூட்டிப் பயனில்லை.
அவர்களில், "சர்' பட்டம் பெற்றோரும் உண்டு; சர்மாக்களும் உண்டு. சம்மட்டி அரிவாள் பொறித்த கொடியினர் உள்ளனர். அரசியல் சர்க்கஸ்காரர்களும் உள்ளனர். வேதாந்தியும் இருக்கிறார்; வெந்ததைத் தின்றதற்காக, தொந்தினம் பாடுவோரும் இருக்கத்தான் செய்கின்றனர்.
அந்த, "அவர்கள்' பட்டியலில், முதலியார் இருக்கிறார்; செட்டியார் இருக்கிறார்; முப்புரி அணிந்த வேதியர் இருக்கிறார்; தற்குறித் தனத்தை மறைக்கத் தடி தூக்கும் தாண்டவராயரும் இருக்கிறார்!
— "இன்ப திராவிடம்' நூலில், அண்ணாதுரை எழுதியது.
— இப்படி எழுதிய அண்ணாதுரை, பின் சென்னை மாகாணம் மொழி வாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஆந்திரா, கன்னடம், கேரளா, தமிழகம் என்று தென்னிந்தியா நான்கு துண்டுகளாகி விட்டதும், இனியும், "திராவிட நாடு' பேசுவதில் பயனில்லை என்று புரிந்து கொண்டு, திராவிடநாடு கொள்கையைக் கழற்றிவிட சரியான சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டு இருந்தார். வந்தது, சீன - இந்தியப் போர்!
"இது தான்டா சந்தர்ப் பம்!' என்று கருதி, "நாட்டுக்கு ஆபத்தான சூழ்நிலை; அதனால், தற் காலிகமாக பிரிவினைக் கொள்கையைக் கைவிடு கிறோம்...' என்று அறிவித்தார். தற்காலிகமே பின், நிரந்தரம் ஆகி விட்டது!
***

எல்லாரும் உண்டு, உறங்கப் போய் விட்டனர். அவனும் உண்டான்; ஆனால், பட்டியைக் காவல் காக்கப் போக வேண்டியவன் அவன். இப்போது மணி, இரவு ஒன்பது இருக்கும். அவன் புறப்படுகிறான். அவன் புறப்படும் அந்த நேரத்தை, "பட்டியாள் நேரம்' என்று கூறும் வழக்கமானது, பல காலமாக கோவை மாவட்டக் கிராமங்களில் இருந்து வருகிறது. இரவு நெடு நேரம் பேசிக் கொண்டிருந் தால், "பட்டியாளு நேரம் ஆச்சு; தூங்கப் போகலாம்...' என்று சொல்வதைக் கேட்கலாம்.
***

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மூர்த்தி - கரூர்,இந்தியா
11-செப்-201220:17:08 IST Report Abuse
மூர்த்தி பட்டியால் நேரம் என்பது பட்டிக்கு செல்லும் நேரம் அல்ல. பட்டியல் ஆடுகளை அடைத்து விட்டு வீட்டிற்கு வரும் நேரம். மீண்டும் பட்டிக்கு போகும் நேரம் அல்ல. இது சுமார் 7 மணியில் இருந்து 8 மணி வரை
Rate this:
Share this comment
Cancel
தி. சௌந்தரராஜன். - சிட்னி.,ஆஸ்திரேலியா
11-செப்-201212:48:45 IST Report Abuse
தி. சௌந்தரராஜன். நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆறோர கிராமம் என் தந்தைக்கு. தஞ்சை மாவட்ட வெண்ணாறு கரையில் என் தாய் கிராமம். இரண்டு இடத்திலும் இரவு உணவுக்குப்பின் வீட்டுத்திண்ணையில் பெரியவர்கள் கூடி பேசுவர். உலக அறிவே அங்குதான் பெறுவோம் சிறுவர்களாகிய நாங்கள் அப்போது.வாரமலர் திண்ணை வாரா வாரம் அதை வாசகனுக்குத்தருகிறது. நன்றி நாராயணன் அவர்களே!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X