அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2012
00:00

அன்புள்ள அம்மாவிற்கு வணக்கம்—
நான் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம். 1983 முதல், இன்று வரை சவுதி அரேபியாவில், வேலை செய்து வருகிறேன்.
கடந்த 2006ம் ஆண்டு முதல், என் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் இங்கு இருந்து வருகிறேன். மகன் 10ம் வகுப்பும், மகள் 6ம் வகுப்பும் படிக்கின்றனர். என் தகப்பனார், முன்னாள் அரசு ஊழியர், தற்போது ஓய்வு பெற்று விட்டார். அவர், ஊரின் தலைவராகவும், அரசு ஊழியர் சங்கத்தின் தலைவராகவும், மாநில அளவில் செயலராகவும் மற்றும் லயன்ஸ் கிளப்பில் செயலராகவும், ரோட்டரி கிளப்பில் பொருளாளராகவும், நன்கு படித்த கல்வியாளராகவும் இருந்து வருகிறார்.
எனக்கு ஒரு தம்பி. நல்ல வேலையில், அதிக பட்ச சம்பளத்தில், சவுதியில் குடும்பத்துடன் இருந்து வருகிறார். மற்றொரு தங்கை மட்டும் ஊரில் வசித்து வருகிறாள். அவர் கணவரும், இங்கு தான் வேலை செய்து வருகிறார். என் அப்பாவும், அம்மாவும், என் தங்கை பையன்கள் இருவரையும், படிக்க வைத்தும், தனியாக வசிக்கின்றனர். எல்லாரும் தனி, தனியாக சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருகிறோம். எங்களை, வருடம் ஒரு முறை இங்கு வந்து பார்த்து செல்வார் என் தகப்பனார்.
இங்கு வீட்டு வாடகை அதிகம் என்பதால், தமிழ் தெரிந்த குடும்பங்கள் பெரும்பாலும், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, இரு குடும்பமாக ஷேர் செய்து இருந்து வருகின்றனர். இது போலவே, நானும், ஒரு வீட்டை ஆறு வருடமாக எடுத்து, தமிழகத்தில் இருந்து வரும் குடும்பத்தை, ஷேரிங்கில் வைத்து வருகிறேன்.
கடந்த ஆறு வருடத்தில், ஐந்து குடும்பங்கள் நல்ல விதமாக தங்கி சென்றுள்ளனர். தற்போது, ஒரு முஸ்லிம் நண்பர், வீடு தேடிக் கொண்டு இருந்தார். என்னுடைய வீட்டில் தங்குவதற்காக கேட்கவே, நானும் சரி என்றேன்.
மார்ச் 1, 2011 முதல் என்னுடன் இருந்து வருகிறார். குடும்பத்தை அழைத்துவர முயற்சி செய்து வருவது போல் பாவ்லா காட்டுவார். ஆனால், அழைத்து வந்தபாடில்லை. என் மனைவி தான், அவர் வந்த நாள் முதல், சமைத்து கொடுக்கிறாள். ஒன்றாக தான் சாப்பிடுகிறோம்.
என் மனைவி எட்டாம் வகுப்பு வரை படித்தவள். நல்ல அறிவாளி, குடும்பத்தை பொறுப்பாகவும், நேர்த்தியாகவும் நடத்திச் செல்வாள். எந்த ஒரு சிறு குறையும் இல்லாமல் என்னையும், என் பிள்ளைகளையும் பார்த்து கொள்வாள். நான் காலையில் வேலைக்கு சென்றால், இரவுதான் வீட்டிற்கு வருவேன். என் வீட்டில் <உள்ள நண்பரோ, காலையில் எனக்கு முன்பாக வேலைக்கு சென்று விடுவார். மாலை எனக்கு முன்பாக, நான்கு மணிக்கு வீட்டிற்கு வந்து விடுவார். அவர் வரும் நேரங்களில், பிள்ளைகள் வீட்டில் இருப்பர். எனவே, எவ்வித அச்சமும், பயமுமின்றி வாழ்ந்து வந்தேன். என் பிள்ளைகளிடமும், என் மனைவியிடமும் மிகவும் அன்பாக நடந்து கொள்வார். நான் வேலையில் இருந்து வருவது வரை, பிள்ளைகளுடன் கேரம் விளையாடுவது, "டிவி' பார்ப்பது என்று இருந்து வந்தார்.
என் நண்பருக்கும் மூன்று பிள்ளைகள், இரண்டு பையன், ஒரு பெண், முதலாவது பையன், 11வது படிக்கிறான். இரண்டாவது பையன், 5வது படிக்கிறான். ஒரு பெண் குழந்தை, முதல் வகுப்பு படிக்கிறாள்.
எப்படியோ அந்த நண்பர், என் மனைவியை மயக்கி விட்டார்.
இடையில், இரண்டு மாத விடுமுறையில் ஊருக்கு போய் விட்டார். அந்த நேரங்களில், என் மனைவி பைத்தியம் பிடித்தவள் போல், என்னிடமும், பிள்ளைகளிடமும் நடந்து கொண்டாள். அப்போது தான், அவளை, அன்போடு அரவணைத்து, என்ன விவரம் என்று கேட்டதற்கு, அவன் வந்தது முதல், ஊர் செல்லும் வரை நடந்த விவரங்கள் அனைத்தும் கூறி, கதறி அழுதாள். அப்போது தான் எனக்கே விவரம் தெரியும்.
சரி நடந்தது நடந்து விட்டது, இனிமேல் நல்லவளாக நடந்து கொள் என்று கூறியதற்கு, "அவன் இல்லாமல் என் வாழ்க்கை இல்லை. உயிரை மாய்த்து கொள்வேனே தவிர, அவனை விட மாட்டேன்...' என்று கூறுகிறாள். அவனும், ஊரில் இருந்து திரும்பி வந்து விட்டான். புது பெண்ணை போல், அலங்கரித்து, "என் மாப்பிள்ளை வருகிறார், வா ஏர்போட்டுக்கு போகலாம்...' என கூட்டி சென்றாள்.
அவள் எதையும் மறைக்கவில்லை. என்னிடம் சொல்லிவிட்ட விவரத்தை, அவனிடமும் கூறி விட்டாள். என்னிடம் கூறிய பின், என் முன்னாலேயே அவனை கட்டிப் பிடிக்கிறாள், முத்தமிடுகிறாள். எனக்கு தெரிந்து விட்டது என்ற பின், அவன், என்னை பார்க்கவே பயப்படுகிறான். அவளிடம் அன்பாகவும், பாசமாகவும் இருக்கிறான்; என்னிடம் பேசும் போது மட்டும், அவளை வெறுப்பது போல் பேசுகிறான். எனக்கு கடிதத்தில் எப்படி எழுதுவது என்று புரியவில்லை. தாங்களாக புரிந்து கொண்டு மேற்கொண்டு நான், என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறுங்கள்.
என் மனைவியிடம் எவ்வளவோ சொல்லி பார்த்து விட்டேன். அவள் கேட்பதாக இல்லை. அவனது காலை பிடித்து கெஞ்சி கேட்டு விட்டேன். "<உன் மனைவி இப்படி இருக்கும் போது, நான் என்ன செய்ய முடியும். நீ வெளியே போகச் சொன்னால், இப்போதே போய் விடுகிறேன். அவள் உயிருக்கு நீதான் பொறுப்பு...' என்கிறான்.
வாரம் ஒரு முறை, அவனிடம் உறவு கண்டிப்பாக வேண்டும் என்று என்னிடமே சொல்கிறாள். அதற்கும் ஒத்து கொண்டு தான், ஒரே வீட்டில் இருந்து வருகிறோம். குடும்ப மானம் வெளியில் செல்லக்கூடாது என்று தான் இவ்வளவையும், மனதுக்குள் புதைத்து, உயிரற்ற உடம்பாக சுற்றி வருகிறேன். இன்று வரை குழந்தைகள் இருவருக்கும், எதுவும் தெரியாது. 1993 முதல் 2011 வரை ஒரு சிறிய சண்டை கூட என் மனைவி போட்டது கிடையாது. ஆனால், இந்த கயவன் வந்து வீட்டில் நுழைந்த பின், நாங்கள் இருவரும் சண்டை போடாத நாளே இல்லை. சிறு சிறு விஷயத்திற்கு கூட, சண்டை போடுகிறாள்.
தவறு செய்பவள் அவள், ஆனால், நான் தவறு செய்வது போல், தினம் என்னை வாட்டி வதைக்கிறாள். இரு பிள்ளைகளையும், தமிழகத்தில் ஹாஸ்டலில் கொண்டு சேர்த்து விடுங்கள் என்று கூறுகிறாள். என்ன செய்வது, எப்படி செய்வது, என்று புரியவில்லை. என் மன ஆதங்கங்களை புரிந்து கொண்டு இருப்பீர்கள் என நம்புகிறேன்.
எனக்கு வயது 45, என் மனைவிக்கு வயது 36, நண்பருக்கு வயது 47, அவளுக்கு தற்போது என்னை விட்டால் யாரும் இல்லை. பத்து வருடங்களுக்கு முன்பே, பண விவகாரத்தினால், அம்மா வீட்டுக்கும், அவளுக்கும் உறவே இல்லாமல் போய் விட்டது. அவளை என்னால் வெறுக்கவும் முடியவில்லை. எப்படி இதைத் தடுப்பது என்றும் புரியவில்லை. நான் சம்பாதித்த சொத்துகள் எல்லாம், அவளின் பெயரில் தான் உள்ளது. தாங்கள் தயவு செய்து, எனக்கு நல்ல அறிவுரையை வழங்க அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
இப்படிக்கு தங்கள் அன்பு மகன்.

அன்புள்ள மகனுக்கு—
உங்கள் கடிதம் கிடைத்தது. விக்கிரமாதித்தனுக்கு, வேதாளம் கதை சொல்லி, முடிவு கேட்பது போலிருந்தது உங்கள் கடிதம். குளிருக்கு நடுங்கும் ஒட்டகத்திற்கு, கூடாரத்திற்குள் சிறு இடம் கொடுக்க, அது முழு இடத்தையும் ஆக்கிரமித்து, உரிமையாளனை வெளியே தள்ளி விட்டது போலிருக்கிறது உங்கள் கதை.
நீங்கள் செய்த முதல் தவறு, திருமணமாகியும், பிரம்மசாரியாக இருப்பவனை கொண்டு வந்து, நீங்கள் வாடகைக்கு இருக்கும் வீட்டில் குடி வைத்தது. ஐந்து வேளை தொழும் முஸ்லிமாக அவன் இருந்தது, உங்கள் மனைவிக்கு கூடுதல் ஈர்ப்பு.
அவன் பணி நேரமும், உங்கள் பணி நேரமும் முன்பின்னாக அமைந்திருந்தது, அவனுக்கு வசதியாக போய் விட்டது. உங்கள் மனைவியை புகழ்ந்து, தன் வசப்படுத்தியிருக்கிறான்.
இனி, உங்கள் பிரச்னைக்கான தீர்வை யோசிப் போம்.
தவறு செய்யும் உங்கள் மனைவியையும், நண் பரையும் தனியே அழைத்து பேசுங்கள். இனிமேல் ஒரு நொடியும் அவர்களின் கள்ளக்காதலுக்கு பார்வை யாளனாக இருக்க தயாரில்லை என கூறி விடுங்கள். உங்கள் மனைவியிடம், "உனக்கு முத்தலாக் கொடுத்து விலகுகிறேன். நீ விரும்பியவரோடு சேர்ந்து வாழ்...' என கூறுங்கள்.
நண்பருக்கு இரு விஷயங்களை தெளிவுபடுத்துங்கள்: ஒன்று, "வீட்டை காலி செய்துவிட்டு, எங்காவது, என் மனைவியின் கண்களுக்கு தென்படாமல் வாழ்...' என கூறுங்கள். அல்லது, "என் மனைவியுடனான தகாத உறவை, உன் மனைவிக்கு தெரிவித்து விடுவேன். உன் மனைவியை தலாக் சொல்லி விட்டோ, அவளின் அனுமதியுடனோ, என்னுடையவளை, இரண்டாவது திருமணம் செய்து கொள்...' என கூறுங்கள்.
அவர்களின் கள்ள உறவு தகாதது. உங்களின் இரு குழந்தைகள் மற்றும் நண்பரின் மூன்று குழந்தைகளின் எதிர் காலத்தை, அவர்களின் கள்ள உறவு, சீரழித்து விடும் என விளக்குங்கள். "நீங்கள் தூங்கச் செல்லும் நேரத்தில், உங்களுடைய வீடுகளில் நெருப்பை (அணைக்காமல்) விட்டு விடாதீர்கள்' என்ற நபிமொழி, உங்களுக்கும், உங்கள் நண்பருக்கும் தெரிந்திருக்கும்.
இந்த நபிமொழிக்கு, நேரடி அர்த்தம் ஒன்றிருக்கிறது... வாழும் வீட்டை, பாழும் நெருப்புக்கு இரையாக்கி விடக் கூடாது. மறைமுக அர்த்தம் என்னவென்றால், இரவில் நிம்மதியாக தூக்கம் பெற, உள்ளத்தில் புகைந்து கொண்டிருக்கும் தீமைகளை, தூங்கும் முன், மனிதன் அணைத்து விட வேண்டும். பொறாமை, வெறுப்பு, சண்டை, சச்சரவுகள், ஊடல், பூசல், மனசாட்சிக்குப் புறம்பான செயல்கள் அனைத்திலும், தீ இருக்கிறதே, அதை பாவமன்னிப்பு எனும் நீர் ஊற்றி, அணைத்துவிட்டு, தூங்கினால், மனிதன் மறுநாள் புத்துணர்ச்சியுடன் எழ முடியும் என்பதே.
உங்கள் மனைவியை இந்தியாவுக்கு அழைத்து வாருங்கள். ஒஸ்தாத் பி போன்ற மதப்பெண்மணி களை விட்டு, கவுன்சிலிங் கொடுங்கள். சவுதி வாசம் போதும் என குடும்பத்தோடு, இந்தியா திரும்பி, புது வாழ்க்கை வாழப் பாருங்கள். கடைசி ஆயுதமாக, முத்தலாக் என்ற ஆயுதத்தை பிரயோகியுங்கள்.
நல்ல திருமண உறவு என்பது, கணவன், மனைவிக்கு ஆடையாகவும், மனைவி, கணவனுக்கு ஆடையாகவும் இருப்பதுதான்.
என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (111)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜின்னாஹ் - துபாய்,இந்தியா
15-செப்-201223:56:09 IST Report Abuse
ஜின்னாஹ் இது ஒரு தினமலரின் அருமையான படைப்பு.
Rate this:
Share this comment
Cancel
நாகராஜ் - covai,இந்தியா
15-செப்-201223:46:39 IST Report Abuse
நாகராஜ் முதல்ல மனைவியை பிரிந்துவிடுங்க
Rate this:
Share this comment
Cancel
டாக்டர்.எ.ஜோசப்.லண்டன் - லண்டன்,இந்தியா
15-செப்-201221:56:47 IST Report Abuse
டாக்டர்.எ.ஜோசப்.லண்டன் மரியாதைக்குரிய சகோதரி மீரா சென்னை அவர்களுக்கு, உங்களின் உயர்ந்த எண்ணத்திற்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.ஒரு தாயாக அந்த அம்மையார் தங்களிடம் கேட்டுகொண்டது சரியே! மரணம் குறித்த எண்ணங்களையும்,திருமணம் குறித்த சிந்தனைகளையும் ஒதுக்கிவிட்டு மிக நீண்ட தொலைவிற்கு பணிமாறுதல் வாங்கி கொண்டு சென்றுவிடுங்கள் . உங்களுக்கு மரணம் மிக அருகில் உள்ளது ஒரு மருத்துவர் எப்படி நேரடியாக உங்களிடம் சொன்னார் என்பது புரியவில்லை."சாவை தெரிந்து கொண்டு வாழ்வது கொடுமையிலும் கொடுமை"உங்களின்மூலம் ஒரு குழந்தை இந்த உலகத்திற்கு வந்தால் அதன் எதிர்காலம்......................?கல்லூரி ஆசிரியையான உங்களுக்கு அதிக விளக்கம் தேவை இல்லை என எண்ணுகிறேன்.பணத்தின் மூலம் பாசத்தை விலைக்கு வாங்கிவிட முடியாது.இது என்மனதில் பட்ட விஷயம்.எந்த முடிவையும் நீங்கள்தான் எடுக்க வேண்டும்.நிறைந்த அன்புடன் ...........................................டாக்டர்.எ.ஜோசப்.லண்டன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X