இதப்படிங்க முதல்ல...
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2012
00:00

ஷங்கர் போட்ட கண்டிஷன்!



"ஐ' படப்பிடிப்பை தொடங்கியுள்ள இயக்குனர் ஷங்கர், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற, சில கண்டிஷன்களை போட்டுள்ளார். சரியான நேரத்தில் ஸ்பாட்டிற்குள் ஆஜராகி விட வேண்டும். தேவை இல்லாமல் யாரும் அரட்டையடிக்கக் கூடாது போன்ற கண்டிஷன்களை போட்டுள்ளார். இதனால், யூனிட் நபர்கள் ஆடிப் போயிருக்கின்றனர்.
சினிமா பொன்னையா

சிவகார்த்திகேயனின் டெக்னிக்!



தனுஷ் தயாரிக்கும், "எதிர்நீச்சல்' மற்றும் "கேடி பில்லா கில்லாடி ரங்கா' ஆகிய படங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன், அடுத்து முன்னணி டைரக்டர்களின் படங்களில் நடிக்கவே விரும்புகிறார். அதனால், யாராவது புதுமுக இயக்குனர்கள் கால்ஷீட் கேட்டு துரத்தினால், 40 லட்சம், 50 லட்சம் என்று சொல்லி அவர்களை ஓட வைக்கிறார்.
சி.பொ.,


கிளாமரில் அசத்தும் தமன்னா!



தெலுங்கில் அதிகப்படியான படங்கள் இருந்தும், பாலிவுட்டில் அஜய்தேவ்கானுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் தமன்னா. அப்படத்தில், இதுவரை எந்த தென்னிந்திய படங்களிலும் நடிக்காத அளவுக்கு, அதிரடி கிளாமர் ஹீரோயினாக களமிறங்குகிறார். முதல் படத்திலேயே முத்திரை பதிக்க வேண்டும் என்பதற்கே இந்த பிரவேசம். வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா!
எலீசா

மிஷ்கின் பாடிய குத்துப்பாட்டு!



தன், "முகமூடி' படத்தில், "குடிமகன்' களுக்காக ஒரு பாடல் பாடியுள்ள இயக்குனர் மிஷ்கின், தற்போது குருநாதர் வின்சென்ட் செல்வா இயக்கியுள்ள, "துள்ளி விளையாடு' படத்திலும், ஒரு தத்துவ பாட்டு பாடியிருக்கிறார். "செம ரகளையான இந்த பாடல், நான் முன் இயக்கிய, "யூத்' படத்தில் இடம் பெற்ற, "ஆல் தோட்ட பூபதி நானடா' பாடல் போன்று ஹிட்டாகும்...' என்கிறார் வின்சென்ட் செல்வா.
சி. பொ.,

வெயிட்டான வேடங்களில் அனுஷ்கா!



செல்வராகவனின், "இரண்டாம் உலகம்' படத்தில், டாக்டர் வேடத்தில் நடிக்கும் அனுஷ்கா, "தாண்டவம்' படத்தில், "ரா' பிரிவு அதிகாரியாக நடிக்கிறார். இவ்விரு வேடங்களுமே, சம்பந்தப்பட்ட படங்களின் ஹீரோக்களுக்கு இணையான வெயிட்டான வேடங்கள். பிடித்தாலும் பிடித்தாய், புளியங்கொம்பை!
எலீசா

சானாகான் துணிச்சல்!



தென்னிந்திய நடிகைகள், மது, புகை பழக்கத்திற்கு, அதிகமாக அடிமையாகியிருப்பதாக, சானாகான் சொன்ன கருத்துக்கு, பல நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், சானாகானோ, நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை. மும்பை ஓட்டல்களில், தென்னிந்திய நடிகைகள், அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு தள்ளாடியபடி நடப்பதை, அடிக்கடி நான் பார்க்கிறேன் என்று மீண்டும் துணிச்சலாக கூறி வருகிறார். உள்ளதைச் சொன்னவள் ஊருக்குப் பொல்லாதவள்!
எலீசா

ஷாருக்கான் மீது வழக்கு!



ஏற்கனவே, கிரிக்கெட் மைதானத்துக்குள் குடிபோதையில், புகைபிடித்தபடி சென்று சர்ச்சையை ஏற்படுத்தியவர், இந்தி நடிகர் ஷாருக்கான். இவர் தற்போது, தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் போஸ் கொடுத்து நிற்பது போன்ற புகைப் படங்கள், இணைய தளங்களில் வெளியாகி யுள்ளன. இதன் காரணமாக, ஷாருக்கான் மீது வழக்குத் தொடரப் பட்டுள்ளது.
சினிமா பொன்னையா

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manohar - Trichy,இந்தியா
10-செப்-201203:10:34 IST Report Abuse
Manohar ஷங்கர் கடைசியாக எடுத்த இரண்டு படங்கள் மொக்கையாகி விட்டது. அதான் அடுத்த படத்தையாவது ஹிட்டாக்கி விட வேண்டும் என்று துடிக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X