கிராமங்களில் இணையப் பயன்பாடு | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements
கிராமங்களில் இணையப் பயன்பாடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 செப்
2012
00:00

இணையம் என்னும் தகவல் பெருஞ்சாலையில் பயணிக்கும் கிராமப்புற மக்களின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருவதாக, இந்திய இன்டர்நெட் மற்றும் மொபைல் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது, கிராமங்களில் 3 கோடியே 80 லட்சம் பேர் இன்டர்நெட் இணைப்பிற்கான பதிவாளர்களாக இருக்கின்றனர். இவர்களில் தொடர்ந்து இணையத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தி வருபவர்கள் 3 கோடியே 10 லட்சம் பேர். 2010 ஆம் ஆண்டில் 2.6% ஆக இருந்த இவர்களின் எண்ணிக்கை, 2012ல் 4.6% ஆக உயர்ந்துள்ளது. வரும் டிசம்பருக்குள், கிராமப்புறங்களில் இன்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 4 கோடியே 50 லட்சமாக உயரும் என்று உறுதியாக எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு 2 லட்சத்து 50 ஆயிரம் கிராமங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு வழங்கும் திட்டத்தினை அமல்படுத்தி வருவதால், இது சாத்தியமே என அனைவரும் கூறுகின்றனர்.
ஆப்டிக் பைபர் கேபிள் இணைப்பு, அனைவரும் வாங்கக் கூடிய விலையில் ஸ்மார்ட் மொபைல் போன், இணையம் மற்றும் மொபைல் போன்களில் மாநில மொழி பயன்பாடு ஆகியவை கிராமப் புற மக்களிடையே இன்டர்நெட் பயன்பாட்டை அதிகப்படுத்தும் காரணிகளாகத் தற்சமயம் உள்ளன. குறிப்பாக மொபைல் போன் வழி இன்டர்நெட் பயன்படுத்துவது வேகமாக வளர்ந்து வருகிறது. சென்ற ஜூன் மாதம் 36 லட்சம் பேர் இந்த வகை இன்டர்நெட் பயனாளர்களாக இருந்தனர். தொடர்ந்து இது 7.2 மடங்கு அதிகரித்து வருவதாக இன்டர்நெட் மற்றும் மொபைல் ஆணையம் அறிவித்துள்ளது.
கிராமப்புறங்களில் சமுதாய சேவை மையங்கள் (Community Service Centres) மற்றும் இன்டர்நெட் சேவை மையங்களைத்தான், அதிகமாக மக்கள் இன்டர்நெட் தொடர்பிற்குப் பயன்படுத்துகின்றனர். 57.7% மக்கள் இந்த வகை தொடர்பை மேற்கொள்கின்றனர். 12% பேர் தங்கள் மொபைல் போன்கள் வழி இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர்.

இவர்களின் பயன்பாடு குறித்த விபரங்கள்:


1.கிராமங்களிலிருந்து 10 கிமீ மேலான தொலைவு சென்று சமுதாய சேவை மையங்களைப் பயன்படுத்துபவர்கள் 29%
2. 10 கி.மீ.க்குள்ளான தொலைவில் இன்டர்நெட் மையங்கள் வழியாக 27%
3. வீடுகளில் 19%
4. மற்ற பொது இடங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் 17%
5. நண்பர்களின் வீடுகளில் 16%
6. மொபைல் 12%
7. கிராம அலுவலர்கள் பணி இடம் 10%
8. கல்வி நிலையங்கள் 7%
9.மாவட்ட அலுவலகங்கள் 3%
10. பஞ்சாயத்து அலுவலகங்கள் 2%
கிராமப் புறங்களில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில் 81% பேர் கல்வி, பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் சார்ந்த தகவல் களைத் தேடுகின்றனர். இது இவர்களின் வேகமான முன்னேற்றத்திற்கான ஓர் அறிகுறியாகும்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X