பைல்களை எந்த மீடியாவில் சேவ் செய்து வைத்தாலும், அவை என்றாவது ஒரு நாள் நமக்குக் கிடைக்காத வகையில் கெட்டுப்போகின்றன. இந்நிலையில் இணையத்தில் பைல்கள் சேவ் செய்து பயன்படுத்தும் வசதிகள் குறித்த தகவல்கள் ஆறுதலைத் தருகின்றன. நான் இரண்டு தளங்களில் சேவ் செய்திடத் தொடங்கிவிட்டேன்.
கே.எஸ். பாண்டியன், திருப்பூர்.
நீங்கள் தகவல் தந்துள்ள இணைய தளங்களில், ஏ ட்ரைவ் தான் எல்லா வகை வசதிகளையும் கொண்டதாக உள்ளது. நான் ஏற்கனவே அதனைப் பயன்படுத்தி வருகிறேன். நீங்கள் தந்துள்ள அனைத்து தகவல்களும், இந்த வகையில் தங்க சுரங்கம் போல் உள்ளன. நன்றி.
சி. பிரகாஷ் மோகன், திருவண்ணாமலை.
வேர்டில் ப்ளு பேக் கிரவுண்டில் வெள்ளை எழுத்துக்களை, நீங்கள் எழுதியது போல அமைத்துப் பார்த்தேன். அதற்கு வழக்கமான கருப்பு வெள்ளை காம்பினேஷனே தேவலாம் போல் உள்ளது.
வித்யா சங்கர், சென்னை.
விண்டோஸ் 8 தொகுப்பினை பள்ளியில் படிக்கும் என் மகன் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். நீங்கள் குறிப்பிடும் பல டிப்ஸ்கள் உதவியாய் இருப்பதாகக் கூறுகிறான். ஆசிரியர் குழுவிற்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
என்.சரோஜா தேவநாதன், புதுச்சேரி.
விண்டோஸ் 8 சோதனைத் தொகுப்பின் பழகும் காலம் முடியப்போகிறது என்றாலும், அதற்கேற்ற ஹார்ட்வேர் சாதனம், விண்டோஸ் 8 விற்பனை செய்யப்படும்போது கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. தொடர்ந்து இதற்கான உதவிக் குறிப்புகளைத் தரவும்.
கே.எம். சுஜாதா ராணி, கோயம்புத்தூர்.
லினக்ஸ் தொகுப்பின் பயன்பாடு அமைதியாகவும், அதிக வசதிகளைத் தருவதாகவும் அதிகரித்து வருகிறது. தியாக மனப்பான்மை கொண்ட சில வல்லுநர்களால் இந்த சிஸ்டம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஹிஸ்டரியை நீங்கள் தந்தது அதற்கு ஒரு பாராட்டு போல உள்ளது.
ஜே. எம். அருண், திருப்பூர்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய இலச்சினையில் அப்படி ஒன்றும் கவர்ச்சியோ அல்லது புதுமையோ இல்லை. பழையதே நன்றாக இருந்தது. மாற்றப்பட்டதற்கு நாம் அறிய முடியாத காரணம் ஏதாவது இருக்கும் என நினைக்கிறேன்.
பேரா. சி. செல்வராஜ், சென்னை.
இணைய தளங்களைப் பார்வையிட்டது குறித்த புள்ளிவிபரங்கள் ஆச்சரியத்தைத் தரவில்லை. நம்மைப் போலவே மற்றவர்களும் இயங்குகின்றனர் என்று அறிய பெருமையாக இருந்தது. இது போல இந்திய நகரங்கள் மற்றும் கிராமங்களில் இணையப்பயன்பாடு எப்படி உள்ளது எனத் தகவல் தரவும்.
டாக்டர் என்.ராமசேகர், விருத்தாசலம்.
விண்டோஸ் லைசன்ஸ் குறித்த தங்கள் தகவல், காப்பி செய்து இதனைப் பயன்படுத்துவோருக்கும், திட்டமிடுவோருக்கும் நல்ல நெத்தியடி. வர்த்தகப் பயன்பாடு களுக்கு பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பவர்கள் மட்டுமின்றி, தனி நபர்களும் விண்டோஸ் தொகுப்பிற்கு லைசன்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது சரியான பாடம். இதை நம் மக்கள் பின்பற்ற வேண்டும்.
சி. ஜெயப்பிரகாஷ், மதுரை.
விண்டோஸ் திரையுடன் கைவிலங்கினைச் சேர்த்து காட்டிய படம், தவறைச் சுட்டிக் காட்டுவதுடன் தண்டனையையும் நினைவு படுத்துகிறது. பொதுவாகவே கம்ப்யூட்டர் மலரில் வெளியாகும் படங்களே, கட்டுரை மற்றும் தகவல்களின் பொருளைக் காட்டும் வகையில் அமைந்துள்ளன. ஆசிரியருக்குப் பாராட்டுக்கள்.
என். ஷாலினி, விஸ்காம் மாணவர், சென்னை.
டேப்ளட் பிசியில் பெரிய மாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே இது குறித்த டிப்ஸ் மற்றும் தகவல்களை அன்பு கூர்ந்து தரவும். நீங்கள் தந்தால் அவை நிச்சயம் நம் வாசகர்களின் டேப்ளட் பிசி சார்ந்த எண்ணம் மற்றும் செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
சி. ப்ரதீப் குமார், சென்னை.