சில தொழில் நுட்ப சொற்கள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements
சில தொழில் நுட்ப சொற்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 செப்
2012
00:00

தகவல் தொழில் நுட்பம் தொடர்ந்து வளர்ந்து வரும் இந்நாளில், பல கலைச் சொற்களை நாம் சந்திக்கிறோம். அவை எதனைக் குறிக்கின்றன என்று நாமாக சிலவற்றை எண்ணிக் கொள்கிறோம். சில சொற்கள் மிகச் சரியாக எதனைக் குறிக்கின்றன என்று அறியாமலேயே பயன்படுத்துகிறோம். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

Application


நம் கம்ப்யூட்டரை ஒரு குறிப்பிட்ட சாதனமாக மாற்றும் புரோகிராம். எடுத்துக் காட்டு வேர்ட் ப்ராசசர், போட்டோ எடி ட்டர், பிரவுசர். பொதுவாக நாம் இந்த புரோகிராம்களை இயக்கி நம் தேவைகளை நிறைவு செய்திடத்தான், கம்ப்யூட்டர் வாங்குகிறோம். சிலர் கேம் விளையாடுவதற்கும் கம்ப்யூட்டர்களை வாங்குகின்றனர். ஆனால் game என்றால் என்ன என்று தான் உங்களுக்குத் தெரியுமே!

Utility:


கம்ப்யூட்டரைப் பாதுகாப்பது அல்லது வேகமாக,எளிதாக, நம்பிக்கை தரும் வகை இல் இயக்குவது என்ற வேலைகளை மேற்கொள்ளும் பயன்பாட்டு புரோகிராம். இவற்றை மட்டும் இயக்க என யாரும் கம்ப்யூட்டர் வாங்குவதில்லை. கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கிய பின்னரே, இதனை வாங்க முடியும்.

Suite:


பல அப்ளிகேஷன்கள் அல்லது Utility புரோகிராம்களின் தொகுப்பு. அனைத்தும் சேர்த்து விலையிடப்பட்டு ஒரு தொகுப்பாக விற்பனை செய்யப்படும். ஒருவர் மட்டுமே பயன்படுத்தும் வகையிலேயே இவை கிடைக்கும். இதில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் போன்றவையும் அடக்கம். பலமுனை பாதுகாப்பு வசதிகளைத் தரும் நார்ட்டன் இன்டர்நெட் செக்யூரிட்டி புரோகிராமினையும் இவ்வகையில் சேர்க்கலாம்.

Addin, Addon, Plugin, Extension:


ஒரே வகையான செயல்பாட்டினை மேற்கொள்ளும் புரோகிராமிற்கான நான்கு பெயர்கள் இவை. இன்னொரு புரோகிராமிற்குள்ளாக இயங்கி அதனைக் கூடுதல் வேகம் அல்லது செயல்பாட்டினை மேற்கொள்ளும் வகையில் உதவிடும் புரோகிராம் அல்லது அப்ளிகேஷன் ஆகும். பிரவுசர், ஆபீஸ் தொகுப்பு அல்லது போட்டோ எடிட்டர் ஆகியவற்றிற்கான ஆட் இன் தொகுப்புகள் நிறைய கிடைக்கின்றன.

App:


இது என்ன சுருக்கமாக ஒரு சொல் என்று வியக்க வேண்டாம். மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் ஒரு புரோகிராமினை இந்த சொல் குறிக்கிறது. iOS அல்லது ஆண்ட்ராய்ட் போன்றவற்றிற்காக உருவாக்கப்படும் புரோகிராம்களை இப்படிக் குறிப்பிடுகின்றனர். இவை கேம்ஸ், utilities, or suite ஆக இருக்கலாம்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X