டிப்ஸ்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2012
00:00

விண்டோஸ் 7ல் பைல் ரெஸ்டோர்:


விண்டோஸ் 7 சிஸ்டத்தில் பைல்களை எளிதாக அழிக்கலாம். அதே சமயத்தில் அழிக்கப்பட்ட பைல்களை மீட்கவும் சில வழிகளை இந்த சிஸ்டம் தருகிறது. கீழ்க்காணும் நிலைகள் வழி செயல்பட்டால், அழித்த பைல்களை மீண்டும் பெறலாம்.விண்டோஸ் லோகோ அமைந்த கீயினை தொடர்ந்து ஓரிரு விநாடிகள் அழுத்தவும். அடுத்து E கீயினை அழுத்தவும். E இங்கு விண்டோஸ், எக்ஸ்புளோரரைக் குறிக்கிறது. எனவே இதனை அழுத்தியவுடன், விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும். விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோவில், recycle bin என டைப் செய்தால், அதனைப் பெறலாம்.
உடன் கிடைக்கும் recycle binல், அழிக்கப்பட்ட அல்லது நீக்கப்பட்ட பைல் மற்றும் போல்டர்களைக் காணலாம். இவை Unwanted Files and Folder என்ற போல்டரில் காணப்படும். இதனைத் திறந்து பிரவுஸ் செய்து, நாம் விரும்பும் அழிக்கப்பட்ட பைலைக் கண்டறியலாம்.மீட்கப்பட வேண்டிய பைலைத் தேர்ந்தெடுத்து ரைட் கிளிக் செய்திடவும். கீழாக விரியும் மெனுவில் restore என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இனி பைல் மீட்கப்பட்டு, முன்பு அது இருந்த ஒரிஜினல் போல்டருக்குச் செல்லும். அந்த போல்டருக்குச் சென்று பைல் மீட்கப்பட்டுவிட்டதா என அறியவும்.

இன்டர்நெட் இன்ஸெர்ட்:


இன்டர்நெட் தளங்களில் உலா வருகையில் சில படங்களைப் பார்த்து அவற்றை உங்கள் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனில் பயன்படுத்த எண்ணினால், உடனே அப்படியே காப்பி செய்து பிரசன்டேஷன் பைலில் பேஸ்ட் செய்திட வேண்டாம். அதற்குப் பதிலாக காப்பி செய்த படத்தை ஒரு பிக்சர் சாப்ட்வேரில் (பெயிண்ட், அடோப் போட்டோஷாப்) பேஸ்ட் செய்து அதனை உங்கள் வசதிக்கேற்ற பார்மட்டிற்கு மாற்றி பின் Insert, Picture, From File என்ற கட்டளைகளைக் கொடுத்து படத்தை அமைத்திடுங்கள். நேரடியாக இன்டர்நெட்டில் காப்பி செய்து, பிரசன்டேஷன் பைலில் ஸ்லைடில் பேஸ்ட் செய்தால், பின் ஒவ்வொரு முறை அந்த ஸ்லைடிற்குச் செல்லும் போதெல்லாம், கம்ப்யூட்டர் உடனே இணையத்தைத் தொடர்பு கொள்ளத் துடிக்கும். மேலும் இந்த படத்தை நீக்க வேண்டும் என திட்டமிட்டால் அதனை நீக்குவதும் கடினமாகிவிடும்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சு.ஜோதி. - abha,சவுதி அரேபியா
12-செப்-201217:22:28 IST Report Abuse
சு.ஜோதி. மிகவும் நன்றாக உள்ளது ,நான் எல்லா வாரமும் தொடர்ந்து படிப்பேன் ,ரொம்பவும் நன்றாக உள்ளது ,நெரிய விசியங்கள் நான் தெரிந்து கொண்டேன் மிகவும் நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X