விண்டோஸ் 7 சிஸ்டத்தில் பைல்களை எளிதாக அழிக்கலாம். அதே சமயத்தில் அழிக்கப்பட்ட பைல்களை மீட்கவும் சில வழிகளை இந்த சிஸ்டம் தருகிறது. கீழ்க்காணும் நிலைகள் வழி செயல்பட்டால், அழித்த பைல்களை மீண்டும் பெறலாம்.விண்டோஸ் லோகோ அமைந்த கீயினை தொடர்ந்து ஓரிரு விநாடிகள் அழுத்தவும். அடுத்து E கீயினை அழுத்தவும். E இங்கு விண்டோஸ், எக்ஸ்புளோரரைக் குறிக்கிறது. எனவே இதனை அழுத்தியவுடன், விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும். விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோவில், recycle bin என டைப் செய்தால், அதனைப் பெறலாம். உடன் கிடைக்கும் recycle binல், அழிக்கப்பட்ட அல்லது நீக்கப்பட்ட பைல் மற்றும் போல்டர்களைக் காணலாம். இவை Unwanted Files and Folder என்ற போல்டரில் காணப்படும். இதனைத் திறந்து பிரவுஸ் செய்து, நாம் விரும்பும் அழிக்கப்பட்ட பைலைக் கண்டறியலாம்.மீட்கப்பட வேண்டிய பைலைத் தேர்ந்தெடுத்து ரைட் கிளிக் செய்திடவும். கீழாக விரியும் மெனுவில் restore என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இனி பைல் மீட்கப்பட்டு, முன்பு அது இருந்த ஒரிஜினல் போல்டருக்குச் செல்லும். அந்த போல்டருக்குச் சென்று பைல் மீட்கப்பட்டுவிட்டதா என அறியவும்.
இன்டர்நெட் இன்ஸெர்ட்:
இன்டர்நெட் தளங்களில் உலா வருகையில் சில படங்களைப் பார்த்து அவற்றை உங்கள் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனில் பயன்படுத்த எண்ணினால், உடனே அப்படியே காப்பி செய்து பிரசன்டேஷன் பைலில் பேஸ்ட் செய்திட வேண்டாம். அதற்குப் பதிலாக காப்பி செய்த படத்தை ஒரு பிக்சர் சாப்ட்வேரில் (பெயிண்ட், அடோப் போட்டோஷாப்) பேஸ்ட் செய்து அதனை உங்கள் வசதிக்கேற்ற பார்மட்டிற்கு மாற்றி பின் Insert, Picture, From File என்ற கட்டளைகளைக் கொடுத்து படத்தை அமைத்திடுங்கள். நேரடியாக இன்டர்நெட்டில் காப்பி செய்து, பிரசன்டேஷன் பைலில் ஸ்லைடில் பேஸ்ட் செய்தால், பின் ஒவ்வொரு முறை அந்த ஸ்லைடிற்குச் செல்லும் போதெல்லாம், கம்ப்யூட்டர் உடனே இணையத்தைத் தொடர்பு கொள்ளத் துடிக்கும். மேலும் இந்த படத்தை நீக்க வேண்டும் என திட்டமிட்டால் அதனை நீக்குவதும் கடினமாகிவிடும்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.