சிடி ஒன்றை எழுதி முடிக்கிறீர்கள். இறுதியில் இதன் ஐ.எஸ்.ஓ. இமேஜ் உருவாக்க எண்ணுகிறீர்களா? என்று ஒரு கேள்வி கேட்கப்படும். பலர் இது என்ன? என்று புருவத்தினை சுழித்து கேன்சல் செய்துவிட்டு எழுதிய சிடியை எடுத்து வேலையை முடிப்பார்கள். எதற்கு இந்த இமேஜ் உருவாக்கம் தெரியுமா? ஐ.எஸ்.ஓ. இமேஜ் என்பது ஒரு சிடி அல்லது டிவிடியில் பேக் செய்யப்பட்ட பைல்கள் அனைத்தின் இமேஜ் ஆகும். சிடியில் எழுதப் பயன்படும் சாப்ட்வேர் அனைத்தும் இந்த இமேஜ் பைலை எடுத்து நேரடியாக இன்னொரு சிடியில் எழுதப் பயன்படுத்திக் கொள்ளும். எனவே குறிப்பிட்ட பைல் தொகுதியினை நிறைய சிடிக்களில் எழுத வேண்டுமானால் ஐ.எஸ்.ஓ. இமேஜ் வேண்டுமா என உங்கள் சிடி பர்னிங் சாப்ட்வேர் கேட்கும்போது யெஸ் கொடுத்து அந்த பைலை உருவாக்கி அடையாளம் காணும் வகையில் பெயர் கொடுத்துப் பின் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.