அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2012
00:00

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

போரும் சினிமாவும்!சினிமா தோன்றிய காலத்தில் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் போட்டிபோட்டு புதுப்புது சினிமாக்களை எடுத்து தள்ளின. ஆனால், இந்த பரபரப் பிலும், மோதலிலும் சிக்காமல் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் வேலையைத்தான் ஜெர்மனி செய்து கொண்டிருந்தது. அதற்கு காரணமும் இருந்தது.
சினிமா என்பது அடித்தட்டு மக்களின் பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமே இருப்பதாக ஜெர்மனி எண்ணியிருந்ததுதான்.
பிரான்சில் 1910ல் "சினிமா டி ஆர்ட்!' என்ற திரைப்பட இயக்கம் உருவானது. அதை தொடர்ந்து ஜெர்மனியிலும் 1912ம் ஆண்டு ஒரு இயக்கம் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பாக ஜெர்மனியில் நிக்கோலடியன் என்ற மவுனமொழி துண்டுப் படத்தை திரையிடும் தியேட்டர்கள் வரவேற்பு இல்லாமல் காற்றாடிக் கொண்டிருந்தன. இந்த சினிமா இயக்கத்தில் நாடக நடிகர்கள், எழுத்தாளர்கள், டைரக்டர் கள் உறுப்பினர்களாயினர். இதன் காரணமாக, பால் லிண்டா என்பவரின் சில நாடகங்கள் சினிமாவாக எடுக்கப்பட்டன. சில ரீல் கொண்ட படங்களாகத்தான் வந்து கொண்டிருந்தன.
1913-ல் டேனிஷ் இயக்குனரான ஸ்டெல்லா ரை என்பவர் "தி ஸ்டூடன்ட் ஆப் பராக்' என்ற படத்தை எடுத்தார். திகிலும், மர்மமும் நிறைந்த இந்த படமே ஜெர்மனியின் முதல் சினிமாவாக கருதப்படு கிறது. தொடர்ந்து 1914ல் ஐரோப்பாவில் முதல் உலகப்போர் வெடித்த போது, சினிமா தொழில் ஒட்டுமொத்தமாக நசிந்தது. போர் காரணமாக என்றாலும், மற்றொரு காரணமும் இருந்தது. பிலிம்ரோல் தயாரிக்க பயன்படும் ரசாயனமும், வெடிமருந்துகள் தயாரிக்க பயன்படும் ரசாயனமும் ஒன்றே என்பதுதான்.
எனவே, வெடிபொருட்கள் தயாரிக்க ரசாயனம் தேவைப்பட்டதால் சினிமா முற்றிலும் ஒதுக்கி வைக்கப்பட்டது. அந்த கால கட்டத்தில் போரினால் எந்த பாதிப்பும் அடையாத அமெரிக்கா, 1918ல் உலகப்போர் முடியும் போது ஒட்டுமொத்த உலகவர்த்தகத் தையும் தன்னுடையதாக்கிக் கொண்டது.

புரதம்... புரதம்!இன்று உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பிரச்னைகளுள் புரதப் பற்றாக்குறை முக்கியமானது. மனிதனின் இயல்பான வளர்ச்சிக்கு இந்தப் புரதச் சத்து மிகவும் அவசியம். புரதப் பற்றாக்குறை முக்கியமாக, வளரும் நாடுகளில் அதிலும் சமூகத்தின் கீழ்நிலையில் உள்ளவர்களிடம் அதிகம் காணப்படுகிறது. இந்தப் புரதப் பற்றாக்குறை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியையே பாதிக்கிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
உணவில் புரதச் சத்து குறைவதால், ஒருவரின் உடல் வளர்ச்சியும், மூளை வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. இதனால், அவரிடம் சோம்பேறித்தனம் அதிகமாகிறது; உழைப்பு குறைகிறது. எனவே, தேசிய வருமானமே பாதிக்கப்படுகிறது.
வளரும் குழந்தைகளுக்கு புரதச் சத்து மிகவும் அவசியம். குழந்தை கருவாக தாயின் வயிற்றில் வளர ஆரம்பித்த நாளில் இருந்து, பிறந்து எட்டு ஆண்டுகள் வரை ஒரு குழந்தையின் உணவில் புரதச்சத்து அதிகமாகச் சேர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் குழந்தையின் மூளை வளர்ச்சியும், உடல் வளர்ச்சியும் சீராக இருக்கும்.
புரதப் பற்றாக்குறையால் இன்று நம் நாட்டில் அதிகமான குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அசைவ உணவில் புரதம் அதிகமாக இருக்கிறது. ஆனால், நம் நாட்டில் குறைவான சதவீதம் பேர் அதுவும் குறைந்த அளவில்தான் அசைவ உணவு சாப்பிடு கின்றனர்.
மீன், முட்டை, இறைச்சியைப் போல பயறு வகைகள், காளான் போன்றவற்றில் புரதச் சத்து அதிகமாக உள்ளது. ஆனால், காளான் கூட பெரும்பாலான மக்களால் சாப்பிடப்படு வதில்லை. இன்று நம் நாட்டில் உள்ள பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் காளான் வளர்ப்பதை தீவிரமாக விளம்பரப்படுத்தி வந்தபோதிலும், உணவு வகைகளில் காளான் இன்னும் அதிக அளவில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
பயறு வகைகளை எடுத்துக் கொண்டால் அவற்றின் உற்பத்தி குறைவுதான். நம் நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் தொகையின் தேவையை தற்போதைய பயறு வகைகளின் உற்பத்தியால் பூர்த்தி செய்ய முடியாது. இந்த தேசியப் பிரச்னைக்குத் தீர்வு காண இன்னொரு வழி இருக்கிறது. அதுதான் கடலில் பயிரிடுதல்.
பாசி இனத்தைச் சேர்ந்த தாவரங்கள் கடலில் நிறைய வளருகின்றன. இவை, அதிவேகமாக வளரக்கூடியவை. எனவே, கடலில் பயிரிடுவதன் மூலம் உணவுப் பற்றாக்குறைக்கு ஒரு முடிவு கட்டிவிடலாம் என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்த முயற்சியில் முதன்முதலில் ஈடுபட்ட நாடு ஜப்பான் தான். தற்போது பல்லாயிரம் எக்டேர் கடல் பரப்பில் ஜப்பான் பயிர் செய்து வருகிறது.
ஜப்பானியர்கள் பயிர் செய்யும், "போர்பைரா' என்ற பாசி புரதச் சத்து நிறைந்தது. இறைச்சிக்கு இணையான புரதச்சத்து இந்தப் பாசியில் உள்ளது. இது இன்று ஜப்பானியர்களின் தினசரி உணவு வகைகளில் முக்கியமான ஒன்றாகிவிட்டது.
அமெரிக்கர்கள் பயிர் செய்யாவிட்டாலும் ஆண்டுக்கு 40 ஆயிரம் டன்களுக்கு மேல் கடல் தாவரங்களை அறுவடை செய்கின்றனர். அங்கு இந்தக் கடல் தாவரங்கள் கால்நடை களுக்குத் தீவனமாகவும், பயிர்களுக்கு உரமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. நம் நாட்டிலும் மிக நீண்ட கடல்பரப்பு இருப்பதால் கடலில் பயிர் செய்வதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. 50 கிராம் மீன் கிடைப்பதற்கு 5 ஆயிரம் கிலோ தாவர உணவு தேவைப்படுகிறது. எனவே, நாம் தாவர உணவையே நேரடியாகப் பயன்படுத்திக் கொண்டால் இவ்வளவு உணவு வீணாகாது. ஆனால், உணவுக்காக கடல் தாவரங்களை அறுவடை செய்வது நம் நாட்டில் இன்று வரை பெருமளவில் நடைபெறவில்லை. இவ்விஷயத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்பதே நிபுணர்கள் கூறும் ஆலோசனை.

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!இது ஒரு "மில்க் ஷேக்'
தேவையான பொருட்கள்: விதை நீக்கிய தரமான பேரீச்சம்பழம்-கால் கப், பால்-ஒன்றரை கப், தேன்-அரை டீஸ்பூன்.
செய்முறை: பேரீச்சையை சிறிது பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, மீதி பால் சேர்த்து அடித்துக் கொள்ளவும். இத்துடன் தேனையும் சேர்த்து, அடித்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும். தேன் இல்லாமலும் குடிக்கலாம். இதை செய்த உடனேயே குடித்து விட வேண்டும். கால் மணி நேரத்திற்கு மேல் வைத்திருக்க கூடாது.
அபார ருசியுடன் இருக்கும் இந்த மில்க் ஷேக் அதிகமான இரும்புச் சத்து உடையது.
என்றென்றும் அன்புடன்,
அங்குராசு

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X