எக்ஸெல் ஒர்க்ஷீட் ஒன்றில், நூறு செல்களில் ஒரே எண்ணை அமைக்க விரும்புகிறீர்கள். அந்த ஒர்க்ஷீட்டில் மேற்கொள்ளப்படும் கணக்கீட்டில் அந்த எண் பயன்படுத்தப் படுவதாக இருக்கலாம். ஆனால் இதற்காக, ஒவ்வொரு செல்லாக அந்த எண்ணை அமைக்க முடியுமா? இதற்கான சுருக்கு வழி என்ன? எண் வர வேண்டிய எல்லா செல்லுகளையும் முதலில் தேர்வு செய்யுங்கள். எண்ணை டைப் செய்து கன்ட்ரோல்+என்டர் கீகளை அழுத்துங்கள். அந்த எண், தேர்வு செய்யப்பட்ட எல்லா செல்லுகளிலும் வந்து விடும்.