யூசர் இன்டர்பேஸ் என்ற சொல் தொடரை அடிக்கடி இந்த பக்கத்தில் எழுதப்படுகின்ற குறிப்புகளிலும் கம்ப்யூட்டர் தொடர்பான நூல்களிலும் படித்திருப்பீர்கள். ஆனால் அது சரியாக எதனைக் குறிக்கிறது என்று ஒரு நேரமும் நாம் சிந்தித்ததில்லை. இதன் பின்னணியில் என்ன உள்ளது என்றும் எண்ணியதில்லை. கம்ப்யூட்டரில் ஒவ்வொரு முறை நீங்கள், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர், புதிய புரோகிராம் ஒன்றைப் பயன்படுத்தும் போது யூசர் இன்டர்பேஸ் ஒன்றைப் பயன்படுத்துகிறீர்கள். அடிப்படையில் ஒரு புரோகிராமோடு அல்லது கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்ட சாதனத்தோடு உங்களை இணைக்கும் வேலையை அறிமுக அடிப்படையில் செயல்படுவதே யூசர் இன்டர்பேஸின் வேலை. அந்த புரோகிராமுடன் வரும் சிறிய கண்ட்ரோல்கள் (எ.கா. மெனு, லிங்க், பட்டன், பைல், சவுண்ட் போன்றவை) அனைத்தும் இந்த யூசர் இன்டர்பேஸில் தான் காட்டப்படுகின்றன. ஒரு புதிய புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுகையில் உங்களுக்குக் கிடைக்கும் முதல் திரை ஒரு யூசர் இன்டர்பேஸ். அல்லது புதிய ஹார்வேர் சாதனம் ஒன்றை நீங்கள் கம்ப்யூட்டரில் இணைத்தால் கிடைக்கும் முதல் திரை ஒரு யூசர் இன்டர்பேஸ் ஆகும். அந்த புரோகிராம் உள்ளே செல்ல உங்களுக்கு ஒரு லைட் ஹவுஸ் போல செயல்படுவதே யூசர் இன்டர்பேஸ்.
பெரும்பாலும் அனைத்து புரோகிராம்களும் எளிய பயன்படுத்த இலகுவான இன்டர்பேஸையே அளிக்கின்றன. அதனை பயன்படுத்துவது எளிதாக இருப்பின் அதுவே அதனுடைய சிறப்பு தன்மை ஆகும். இன்டர்பேஸ்களில் பல வகை உண்டு. கிராபிகல் இன்டர்பேஸ், வெப் அடிப்படியிலான இன்டர்பேஸ், கட்டளை வரிகளில் செயல்படும் இன்டர்பேஸ் போன்ற வகைகளை எடுத்துக் காட்டுக்களாகக் கூறலாம். இது எத்தகைய புரோகிராமுடன் நீங்கள் செயல்படுகிறீர்கள் என்பதனைப் பொறுத்து மாறும். புதிய புரோகிராம் ஒன்றின் இன்டர்பேஸுடன் பழக சில நாட்கள் ஆகும். அது நீங்கள் அந்த புரோகிராமினைப் பயன்படுத்தும் நேரம் மற்றும் செயல்பாடுகளைப் பொறுத்தது ஆகும்.