ஸ்பெல் செக் ட்யூனிங்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2012
00:00

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும், தாங்கள் உருவாக்கும் டெக்ஸ்ட்டில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து சரி செய்திடும் ஸ்பெல் செக் பயன்பாட்டை அடிக்கடி மேற்கொள்வார்கள். இமெயில் கிளையண்ட் உட்பட இது அனைத்து புரோகிராம்களில் கிடைத்தாலும், வேர்ட் புரோகிராமில், டாகுமெண்ட்களை உருவாக்கும் போதுதான் இது அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் இதனை அதிகப் பயன் தரும் வகையில் பயன்படுத்தப்படுகிறதா என்பது ஐயமே. இந்த வசதியைக் கூடுதல் பயன் தரும் வகையில் எப்படி பயன்படுத்தலாம் என இங்கு காணலாம்.

1. அனைத்தையும் மாற்று அல்லது விட்டுவிடு:


தவறாக எழுதப்பட்ட ஒவ்வொரு சொல்லிலும் ஸ்பெல் செக் நின்று எச்சரிக்கும். உடன் ரைட் கிளிக் செய்து மெனு பெற்று சரியான சொல்லை தேர்ந்தெடுக்கலாம். அல்லது நேரடியாகவே திருத்துமாறு ஆணை தரலாம். குறிப்பிட்ட சொல் ஏதேனும் பெயராக இருக்கும் பட்சத்தில், அதனைப் புறக்கணிக்க (ignore) கட்டளை தரலாம். எனவே அதே சொல்லை, ஸ்பெல் செக், அடுத்த முறை சந்திக்கையில் மீண்டும் அதே கட்டளையைத் தர வேண்டியுள்ளது. இதற்குப் பதிலாக Change All அல்லது Ignore All என்ற கட்டளையத் தந்துவிட்டால், அந்த டாகுமெண்ட்டில் காணப்படும் அனைத்து பிழைகளும் மொத்தமாக திருத்தப்படும்; அல்லது ஒதுக்கப்படும்.

2. நமக்கான அகராதி:


ஸ்பெல் செக், தன் பணிகளுக்கு, புரோகிராமுடன் இணைக்கப்பட்ட பெரிய அளவிலான டிக்ஷனரி ஒன்றின் அடிப்படையில் இயங்குகிறது. ஆனால், இந்த டிக்ஷனரி அனைத்து வகையான பயன்பாட்டுச் சொல்லையும் கொண்டிருக்காது. எனவே சரியான முறையில் பயன்படுத்தப்படும் சிறப்புச் சொற்களை, ஸ்பெல் செக் தவறாகவே காட்டும். இத்தகைய சொற்களை நமக்கான அகராதியில் (custom dictionary) சேர்க்குமாறு செய்துவிடலாம். அடுத்த முறை ஸ்பெல் செக், இந்த அகராதியில் நாம் சேர்க்கும் சொற்களை இந்த அகராதியில் உள்ளபடி சோதனை செய்திடும். அதற்காக இந்த தனி அகராதியில் நாம் சந்திக்கும் அனைத்து சொற்களையும் இணைக்கும் வழக்கத்தினை மேற்கொள்ளக் கூடாது. இதுவும் அளவில் அதிகமானால், ஸ்பெல் செக் பணி தாமதப்படுத்தப்படும்.

3. திருத்தத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டாம்:


ஸ்பெல் செக் மிகச் சரியாகவே, எழுத்துப் பிழைகளைத் திருத்திக் கொடுக்கும். இருப்பினும் பிழை எனக் காட்டித் திருத்தப்படும் சில சொற்கள், முற்றிலும் தவறாகவே உள்ளன. எடுத்துக் காட்டாக, please advise என டைப் செய்தால், ஸ்பெல் செக் please advise எனத் திருத்தும். இந்த திருத்தம் சரி அல்ல. எனவே, எழுத்துப் பிழை எனக் காட்டி மாற்றப்படும் சொற்களின் மீது ஒரு கண் இருப்பது நல்லது.

4. இலக்கண திருத்தம் வேண்டாமே:


ஸ்பெல் செக் டூல், இலக்கணப் பிழைகளையும் திருத்துமாறு காட்டும். ஆனால், நாம் பெரும்பாலும் ஸ்பெல்லிங் பிழைகளில் மட்டுமே கவனம் செலுத்துவோம். இலக்கண பிழைகள் இருக்காது. அல்லது அதனைப் பற்றிக் கவலைப்பட மாட்டோம். எனவே, இந்த செயல்பாட்டினை நிறுத்தி வைக்கலாம். இதன் மூலம் ஸ்பெல் செக் பணியும் வேகமாக நடைபெறும்.

5. இன்டர்நெட் முகவரி சோதனை வேண்டுமா?:


இன்டர்நெட் முகவரிகளை நாம் அமைப்பது இல்லை. மேலும் இவற்றின் சொற்கள் தனிப்பட்ட விருப்பங்களில் அமைக்கப் படுகின்றன. எனவே இவற்றை ஸ்பெல் செக் சோதனை செய்திடாமல் அமைத்துவிடலாம். அதே போல மின்னஞ்சல் முகவரிகளையும் தவிர்த்துவிடலாம். இதற்கு Tools சென்று Options தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Spelling & Grammar என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, Ignore internet and file addresses என்பதில் முன் உள்ள கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இனி, இன்டர்நெட் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் சோதனையிடப்பட மாட்டாது.

6. வேகமாக சோதனை:


ஸ்பெல் செக் மேற்கொள்ள எப்7 கீ அழுத்தினால் போதும். ஆனால், குறிப்பிட்ட ஒரு சொல்லின் ஸ்பெல்லிங் சரியா என அறிய, அதனைத் தேர்ந்தெடுத்து எப்7 அழுத்தினால், ஸ்பெல் செக் அதற்கான முடிவினைக் காட்டும்.

7. விதிகளை ட்யூன் செய்திடுக:


வேர்ட் ஸ்பெல் செக் செயல்பாட்டினை நம் விருப்பத்திற்கேற்ப அமைத்திடலாம். எழுத்துப்
பிழையுடன் இலக்கணப் பிழைகளையும் இது சோதனை செய்து அறிவித்திடும். இதனை நம் தேவைக்கேற்ப அமைக்கப் பல ஆப்ஷன்கள் தரப்படுகின்றன.
அவை அனைத்தையும் இங்கு காண வேண்டாம். முன்பு கூறிய Spelling & Grammar டேப் விண்டோ சென்றால், அதில் இரண்டாவாதாக Grammar என்று ஒரு பிரிவு கிடைக்கும். இதில் Settings என்பதில் கிளிக் செய்தால், இந்த ஆப்ஷன்கள் அனைத்தும் கிடைக்கும். ஒவ்வொன்றாகச் சென்று நமக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். இது போல பல செயல்பாடுகளை ட்யூன் செய்வதன் மூலம், ஸ்பெல்லிங் சோதனைப் பணியை விரைவாகவும் எளிதாகவும் மேற்கொள்ளலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சூரிய பிரகாஷ் - ஈரோடு,இந்தியா
19-செப்-201221:48:28 IST Report Abuse
சூரிய பிரகாஷ் டியர் சார், நான் சோனி vaio vpceh15en s y stem வைத்துள்ளேன். அதில் என்னுடைய லேப்டேபை VAIO கேர் 6.4 என்ற புரோக்ராம்மை ஓபன் செய்கையில் VAIO care has experienced an error. Please restart application என்ற வார்த்தை வருகிறது. எப்படி இதை அப்டேட் செய்வது. தீர்வு கூறவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X