வை-பி அலைவரிசை இணைப்பில் ஏற்படும் பிரச்னைகள் அதன் இயற்கையானவை என்று எண்ணியிருந்தோம். உங்கள் கட்டுரையில் எழுதப் பட்டிருக்கும் தீர்வுகள், அதிக பட்ச திறனுடன் இதனைப் பயன்படுத்த வழி நடத்தும் டிப்ஸ்களாக உள்ளன.
என்.பங்கஜ் குமார், சென்னை.
ரௌட்டர் இயங்குவதில் இத்தனை தொழில் நுட்ப சங்கதிகள் இருக்கின்றன என்பதை நன்கு விளக்கியுள்ளது பல விஷயங்களைத் தெளிவு செய்திட வைத்தது.
பேரா. என்.சிவஷண்முகம், மதுரை.
டாகுமெண்ட்டிற்குள்ளாக ஹைப்பர் லிங்க் ஏற்படுத்தி, தொடர்புள்ள கட்டுரைகளைப் படிக்க வைப்பது நல்ல உத்தி. ஆய்வில் பயன்படுத்த எளிதான ஒரு வசதி. நன்றி.
டி.கார்த்திக் சிவராஜா, திருச்சி.
அரசு கிராமப்புற இன்டர்நெட் வளர்ச்சிக்கு உதவி செய்தாலும், பலமுறை சரியான வகையில் இணைப்பு கிடைப்பதில்லை. தொலை தொடர்பு துறை மற்றும் சேவை நிறுவனங்கள், தங்கள் சாதனங்களை அப்டேட் செய்திட வேண்டும். ரேடியோ போல இன்டர்நெட் பயன்பாடு, கிராமப்புறங்களில் பெருகி வருவது மகிழ்ச்சியான ஒரு மாற்றம் தான்.
ஆ.நல்லதம்பி, சோழபுரம்.
மைக்ரோசாப்ட் நிறுவனமே வடிவமைத்துத் தருவதால், சர்பேஸ் டேப்ளட் பிசி நிச்சயம் மார்க்கட்டில் நல்ல இடத்தைப் பிடிக்கும். ஆனால் பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாட்டினை மாற்றுமா என்பது சந்தேகமே.
கா.இளவரசி, கோவை.
ஆபீஸ் 2013 தொகுப்பின் அனைத்து முக்கிய புரோகிராம் தொகுப்புகளையும் சுருக்கமாக தந்து, வாசகர்களைத் தயார் செய்துவிட்டீர்கள். தொடர்ந்து இப்போதே டிப்ஸ்களையும் பட்டியலிடுங்கள்.
தி.காந்திராஜ், தாம்பரம்.
மொபைல் ஸ்பேர் பேட்டரிகளுக்கான அதிக விலையே, மக்களை அதே போன்ற வேறு விலை குறைந்த பேட்டரிகளை நாடும்படி செய்கிறது. பெரிய நிறுவனங்கள் இதனை உணர்ந்து பேட்டரியின் விலையைக் குறைத்தால், நன்றாக இருக்கும். நீங்கள் அளித்துள்ள பராமரிப்பு டிப்ஸ், நூற்றுக்கு நூறு கடைப்பிடிக்க வேண்டியவையாகும்.
என்.ஆர். மகேந்திரன், புதுச்சேரி.
முக்கியமான தகவல் இல்லாமல் கேள்வி அனுப்பியும், விபரமாக பதில் தந்தமைக்கு நன்றி. விரிவான விளக்கங்களைப் பின்பற்றி, இப்போது முறையாக அன் இன்ஸ்டால் செய்து, கம்ப்யூட்டரை பிரச்னை இன்றி இயக்குகிறேன். மனதார்ந்த நன்றி.
கா. செந்தமிழ்ச் செல்வி, சென்னை.
புக்மார்க்கிங் செய்வது குறித்த சுருக்கு வழி டிப்ஸ் ஓகே. ஆனால், பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. இதில் குரூப் ஏற்படுத்துவது குறித்து விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஆ. மதுமதி, திருப்பூர்.
டி.டி.ஆர் பற்றி விளக்கம் அளித்துள்ளது போல, ஹார்ட் டிஸ்க், பிளாஷ் ட்ரைவ், சிடி, டிவிடிக்களின் வகை குறித்தும் விளக்கவும். இவற்றை எப்படி தேர்ந்தெடுப்பது எனவும் குறிப்பிடவும்.
என். மரிய அற்புதம், திருவண்ணாமலை.
தொழில் நுட்ப சொற்கள் பட்டியலில், மொபைல் போன் குறித்த சொற்கலையும் இணைத்து வெளியிடவும். நிறைய சொற்களுக்கு பொருள் தெரியாமலேயே புழங்கிக் கொண்டிருக்கிறோம்.
கா. சம்சுதீன், புதுச்சேரி.