கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2012
00:00

கேள்வி: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில், அட்ரஸ் பாரில் கிளிக் செய்து பின்பு வெப் தள முகவரியை டைப் செய்கிறேன். இந்த சுற்று வழி இல்லாமல், கீ போர்டு மூலமாக அட்ரஸ் பாரில் அமர என்ன கீகளை அழுத்த வேண்டும்?
பழ. சோமசுந்தரம், பள்ளத்தூர்.
பதில்:
Alt + D கீகள் மற்றும் F6 கீயை அழுத்தலாம். இவற்றின் மூலம் அட்ரஸ் பாருக்குச் செல்ல முடியும். கூகுள் டூல்பார் போன்ற இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்குத் தொடர்பில்லாத டூல்பார் எதுவும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் காணப்பட்டால், F6 கீயை அழுத்தியவுடன் அந்த டூல்பாரில் நிற்பீர்கள்.

கேள்வி: விண்டோஸ் 2007 சிஸ்டம் என் அலுவலகக் கம்ப்யூட்டரில் போட்டு கொடுத்துள்ளனர். இதில் சிங்கிள் கிளிக் செயல்பாட்டினை எப்படி அமல்படுத்துவது?
பழ.மாணிக்கம். பள்ளத்தூர்.
பதில்:
ஸ்டார்ட் பட்டன் அழுத்தி கண்ட்ரோல் பேனல் பெறவும். கண்ட்ரோல் பேனல் திறக்கப்பட்டு அதில் பல பிரிவுகளுக்கான ஐகான்கள் கிடைக்கும். இல்லை எனில் வலது மேல் புறத்தில் View By Category என்பதில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து Small Icons என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் ஐகான்களில், Folder Options என்பதற்கான ஐகான் மீது கிளிக் செய்திடவும். அடுத்து Click Items as Follows என்ற பிரிவில் Single click to open an item (point to select) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை சேவ் செய்திட Apply என்பதில் கிளிக் செய்து, அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இறுதியாக கண்ட்ரோல் பேனலின் வலது மேல் மூலையில் உள்ள கட்டத்தில் X என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: குறிப்பிட்ட ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதுகையில், நிறுவனம் ஒன்று என் கம்ப்யூட்டரில், நிறைய ஆட்டோ டெக்ஸ்ட் என்ட்ரிகளை உருவாக்கிக் கொடுத்தனர். இப்போது அவை தேவை இல்லை. இவற்றை எப்படி நீக்குவது? நான் வேர்ட் 2007 பயன்படுத்துகிறேன்.
டாக்டர் நீ. சுந்தர் பிரகாஷ், மதுரை.
பதில்:
வேர்ட் 2007ல் கீழ்க்காணும் செயல் முறைகளை மேற்கொள்ளவும். ரிப்பனில் Insert டேப்பினை தேர்ந்தெடுக்கவும். Text குரூப்பில் Quick Parts tool என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் நீங்கள் தேர்ந்தெடுக்க பல ஆப்ஷன்களைக் காட்டும். இவற்றில் Building Blocks Organizer என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். (வேர்ட் 2007ல் இந்த Building Blocks ஒரு “super Auto Text” போல அறிமுகம் செய்யப்பட்டது.) அடுத்து, பெயர்ப் பட்டியலில் இருந்து நீங்கள் நீக்க விரும்பும் Auto Text entry ஐத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுப்பது சரியானதுதானா என்பதனை, அருகே உள்ள பிரிவியூ கட்டத்தில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். உறுதி செய்தவுடன், அடுத்து பட்டனை அழுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட Auto Text entryஐ நீக்கவும். இவ்வாறு நீங்கள் விரும்பிய அனைத்தையும் நீக்கியவுடன், ஓகே கிளிக் செய்து Building Blocks Organizerஐ விட்டு வெளியே வரவும்.
இதே செயல்பாட்டினை வேர்ட் 2007க்கு முன்பு வந்த தொகுப்பில் மேற்கொள்ள கீழ்க்காணும் வழிகளைக் கையாளவும். Insert மெனுவில் இருந்து Auto Text ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் துணை மெனுவில் இருந்து Auto Text ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். வேர்ட் இப்போது Auto Correct, டயலாக் பாக்ஸில், Auto Text டேப்பினைத் திறந்து காட்டும். இங்கு கிடைக்கும் பட்டியலில் Select the Auto Text option from என்பதன் கீழாக நீங்கள் நீக்க விரும்பும் அனைத்து ஆட்டோ டெக்ஸ்ட் என்ட்ரிகளைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின்னர் டெலீட் பட்டனை அழுத்த, அவை அனைத்தும் நீக்கப்படும்.

கேள்வி: நான் வெகு காலமாக விண்டோஸ் எக்ஸ்பி கம்ப்யூட்டர் ஒன்றினை 512 எம்பி ராம் மெமரியுடன் பயன்படுத்தி வருகிறேன். அதிகக் கொள்ளளவுடன் ஹார்ட் டிஸ்க் மாற்றலாம் என்றால், அந்த வகை ஹார்ட் டிஸ்க் மார்க்கட்டில் இல்லை என்கின்றனர். புதிய கம்ப்யூட்டர் வாங்குமாறு கூறுகின்றனர். தங்களுடைய அறிவுரை என்ன?
சா. ஞானராஜ், கோவை.
பதில்:
நீங்கள் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் பணிகள் குறித்துக் குறிப்பிடவில்லை. இணையப் பயன்பாடு இல்லாமல், சில டாகுமெண்ட்கள் தயாரித்தல் மற்றும் படித்தல், எக்ஸெல் ஒர்க்ஷீட் பயன்பாடு, படங்கள் பார்த்தல், பாட்டு மற்றும் வீடியோ கேட்டல் என கிட்டத்தட்ட ஓய்வுப் பணி எனில், இந்த கம்ப்யூட்டரையே பயன்படுத்தலாம். ஆனால், ஒன்றை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். நம்மைச் சுற்றி உள்ள தொழில் நுட்பம் மாறி உயர்ந்து வருகிறது. 1988ல் வெளிவந்து மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட வாக்மேன் இப்போது இல்லை. கேசட் பிளேயர்கள் இல்லை; தகவல் தொடர்பில் பெரிதான வியப்பைத் தந்த பேஜர்கள் போன இடம் தெரியவில்லை. பிளாப்பி டிஸ்க்குகள் அறவே இல்லை; விரைவில் சிடி, டிவிடிக்களும் மறைந்துவிடும். கூடுதல் வசதிகளை நவீன தொழில் நுட்பம் தருவதால், நாம் நம் சாதனங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டும். எனவே நவீன ப்ராசசர், மானிட்டர் கொண்ட கம்ப்யூட்டருக்கு மாறிக் கொள்ளுங்கள். உலகத்தோடு ஓடுங்கள்; தொடர் வெற்றி பெறலாம்.

கேள்வி: பிரவுசருக்கான ஆட் ஆன் தொகுப்பு என்பதன் முக்கிய பணி என்ன? அதனைக் கட்டாயம் இன்ஸ்டால் செய்திட வேண்டுமா? கம்ப்யூட்டருக்கு அதனால், அபாயம் ஏற்படும் வழி உண்டா?
டி.சி.கரன்சந்திரன், திருப்பூர்.
பதில்:
பிரவுசர் ஆட் ஆன் அல்லது எக்ஸ்டன்ஷன் (தமிழில் இதனை நீட்சித் தொகுப்பு என அழைக்கின்றனர்) என்பது நம் பிரவுசருக்குப் புதிய தோற்றத்தைத் தருகின்ற அல்லது கூடுதல் பயன்பாட்டினைத் தருகின்ற சிறிய சாப்ட்வேர் தொகுப்புகள். குறிப்பிட்ட தளங்களைத் தேடிப்பெற டூல்பாரில் வசதிகள், டவுண்லோட் மேனேஜரை மாற்றி, ஒரே சமயத்தில் பல தளங்களில் இருந்து டவுண்லோட் செய்திடும் வசதிகள், படங்களை நேரடியாக குறிப்பிட்ட தளங்களுக்கு அனுப்புதல், இணைய தளங்களின் டெக்ஸ்ட்டை பிற மொழிகளில் மொழி பெயர்த்தல் போன்ற வசதிகளையும் இந்த ஆட் ஆன் தொகுப்புகள் தருகின்றன. இந்த பிரவுசரில் இப்படிப்பட்ட வசதி தந்திருக்கலாமே என்று நாம் எண்ணக் கூடிய பல வசதிகளைத் தரும் ஆட் ஆன் தொகுப்புகள் இன்று நமக்குக் கிடைக்கின்றன. இவற்றை இன்ஸ்டால் செய்த பின்னர், தேவை இல்லை எனில் நீக்கிக் கொள்ளும் வசதியை அனைத்து பிரவுசர்களும் தருகின்றன. இவை பெரும்பாலும் எந்த தீங்கும் விளைவிக்காது. ஆனால், ஆட் ஆன் தொகுப்பு போல வைரஸ் அல்லது மால்வேர் இருந்தால், நிச்சயம் அது நம் கம்ப்யூட்டருக்குத் தீங்கு விளைவிக்கும். எனவே ஆட் ஆன் தொகுப்பு ஒன்றை டவுண்லோட் செய்திடுகையில், அது சரியான தளத்திலிருந்து கிடைக்கிறதா என உறுதி செய்து கொண்டு டவுண்லோட் செய்து பயன்படுத்த வேண்டும்.

கேள்வி: கதிர்வீச்சு அலைகளின் பாதிப்பு பற்றி நிறைய எச்சரிக்கைகள் வருகின்றன. நீங்களும் எழுதி இருக்கிறீர்கள். ஆனால், அதற்காக மொபைல் போன் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. இதனை அதிகபட்சம் தவிர்க்க என்ன செய்திட வேண்டும்?
என். உமையாள், சிதம்பரம்.
பதில்:
மொபைல் போன் பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்பது நாமாக ஏற்படுத்திக் கொண்டது. ஓரளவிற்கு இதன் கதிர் வீச்சு நம்மைப் பாதிக்காமல் இருக்க பின் குறிப்பிடும் வழிகளைப் பின்பற்றவும். லேண்ட் லைன் போன் அருகில் இருந்தால், அதனைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுங்கள். லவுட் ஸ்பீக்கர் போட்டு, போனைக் காதில் வைக்காமல் பேசுங்கள். எந்த அளவிலான தூரத்தில் மொபைல் போனை வைத்துப் பயன்படுத்துகிறோமோ, அந்த அளவிற்கு கதிர்வீச்சு குறையும். ஹெட்செட் பயன்படுத்தி, கிடைத்தால் வயர்லெஸ் புளுடூத் ஹெட்செட் பயன்படுத்திப் பேசவும். நீண்ட நேரம் பேசுவதனைத் தவிர்க்கவும். முடிந்தால், டெக்ஸ்ட் மெசேஜ் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும்.
சிக்னல் சரியாகக் கிடைக்கவில்லை என்றால், பேசுவதற்கு சிரமப்படாமல், பேசுவதையே தவிர்க்கவும். ஏனென்றால், சிக்னல் எளிதில் கிடைக்காத போது, கதிர்வீச்சு அதிகமாகும். எனவே சிக்னல் வலுவாகக் கிடைக்கும் இடத்தைத் தேடிச் சென்று பேச்சினைத் தொடரவும். இந்த ஆலோசனைகளை அரசின் தொலைதொடர்பு துறையே தந்துள்ளது. மேலும் சிலவற்றையும் பரிந்துரைத்துள்ளது. உலோகத்தினால் ஆன பிரேம் கொண்ட கண் கண்ணாடிகளைப் போட்டுக் கொண்டும், ஈரத் தலையுடனும் மொபைல் பேச வேண்டாம். இவை கதிர்வீச்சினை அதிகம் ஈர்க்கும். மிகவும் அதிர்ச்சி தரும் செய்தி என்னவெனில், சட்டை மற்றும் பேண்ட் பாக்கெட்களில், மொபைல் போனைக் கொண்டு செல்லக் கூடாது. ஏன் என்றால், ஒவ்வொரு ஒன்று அல்லது இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை மொபைல் போன் நெட் வொர்க் சோதனை செய்திட ரேடியோ அலைவீச்சினை வெளிப்படுத்தும். இந்த அலை வீச்சு உடம்பை, குறிப்பாக இதயத்தை பாதிக்கலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X