எக்ஸெல் புரோகிராம் நிறுவனங்களால் அதிகம் பயன்படுத்தும் ஒரு புரோகிராம் ஆகும். பலமுறை இவற்றை நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடையே பரிமாறிக் கொள்கையில், ஒர்க்புக்கை உருவாக்கியவர், குறிப்பாக தொலைபேசி எண் ஆகியவற்றை, ஒர்க்புக்கிலேயே குறித்தால் நல்லது என எண்ணுகிறோம். ஆனால், செல்களில் அவற்றைக் குறித்து வைத்தால், சரியாக இருக்காது. இதற்கு ஒரு தீர்வு உள்ளது. பைல் மெனுவில் இருந்து, ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். இப்போது பைல் ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ கிடைக்கும். இதில் உள்ள கட்டங்களில், யார் ஒர்க் புக்கினைப் பயன்படுத்தியது மற்றும் நாட்கள் குறித்த தகவல்களை எக்ஸெல் புரோகிராம் அமைத்திருக்கும். இவற்றையும் நீங்கள் மாற்றி அமைக்கலாம். கமென்ட்ஸ் என்ற பகுதியில் அல்லது மற்ற இடங்களில் தொலைபேசி எண்ணை அமைக்கலாம். இதனால், இந்த ஒர்க்புக்கினைக் காணும் மற்றவர்கள், இதனை அமைத்தவர்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.