எக்ஸெல் தொகுப்பில் நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசைகளை (Column, Row) முழுமையாகத் தேர்ந்தெடுக்க அந்த வரிசையில் கர்சரை வைத்து கீழாகவோ அல்லது பக்க வாட்டிலோ கர்சரை இழுத்து ஹைலைட் செய்கிறீர்கள் அல்லவா? இந்த இழுபறி வேலையை இரண்டு கீகள் எளிதாக்குகின்றன. எந்த நெட்டுவரிசையினை (Column) ஹைலைட் செய்திட வேண்டுமோ அல்லது தேர்ந்தெடுக்க வேண்டுமோ அதில் உள்ள செல்கள் ஒன்றில் கர்சரை வைத்துப் பின் கண்ட்ரோல் கீயுடன் ஸ்பேஸ் பாரினை (Ctrl + Spacebar) அழுத்தவும். இப்போது அனைத்து செல்களும் தேர்ந்தெடுக்கப்படும். இதே போல படுக்கை வரிசையில் ஹைலைட் செய்திட Shift + Spacebar அழுத்தவும்.