பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பதவி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2012
00:00

இந்திய பாதுகாப்புப் படைகளின் எலக்ட்ரானிக்ஸ் தொடர்புடைய தேவைகளை நிறைவேற்றுவதற்காக 1954ல் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பி.இ.எல்., நிறுவனம் நிறுவப்பட்டது. துவங்கப்பட்ட ஆண்டிலிருந்து இந்த நிறுவனம் பல்வேறு பொருட்கள், பல்வேறு தொழில் நுட்பம், பல்வேறு பிரிவு சார்ந்த நிறுவனமாக வளர்ச்சி கண்டுள்ளது. ரேடார்கள், மிலிடரி கம்யூனிகேஷன், நேவல் சிஸ்டம்ஸ், எலக்ட்ரானிக் வெல்பேர் சிஸ்டம், டெலி கம்யூனிகேஷன், சவுண்ட் அண்டு விஷன் பிராட்கேஸ்டிங், ஆப்டோ- எலக்ட்ரானிக்ஸ், டேங்க் எலக்ட்ரானிக்ஸ், சோலார் வோல்டாயிக் சிஸ்டம்ஸ், எம்பெட்டட் சாப்ட்வேர் அண்டு எலக்ட்ரானிக் காம்போனென்ட்ஸ் போன்ற துறைகளில் பல்வேறு சேவைகளை பெல் நிறுவனம் வழங்கி வருகிறது. இவ்வளவு பிரசித்தி பெற்ற பெல் நிறுவனத்தில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவில் 80 காலி இடங்களையும், மெக்கானிகல் இன்ஜினியரிங்கில் 25 காலி இடங்களையும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 45 காலி இடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

தேவைகள்:



பெல் நிறுவனத்தின் இன்ஜினியரிங் பணி இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை முதல் வகுப்பில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் அல்லது மெக்கானிகல் இன்ஜினியரிங் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் முடித்திருக்க வேண்டும். இத்துடன் இந்த நிறுவனத்தில் விண்ணப்பிப்பதற்கான கேட் 2013 தேர்வையும் எழுதி வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற வேண்டும்.
கேட் மதிப்பெண் அடிப்படையிலும், அதன் பின்னர் இந்த நிறுவனம் நிர்ணயிக்கும் இதர தேர்ச்சி முறைகளையும் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்று பதவி வழங்கப்பட்டால் இந்த நிறுவனத்தின் இந்தியாவில் உள்ள எந்த ஒரு மையத்திலும் பணி புரியத் தயாராக இருக்க வேண்டும்.

மற்றவை:



பெல் நிறுவனத்திற்கான ஆன்-லைன் கேட் 2013 தேர்வு வரும் ஜனவரி 20 அன்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து விண்ணப்பிப்பவர்கள் Gate.iitm.ac.in என்ற இணையதளத்திலிருந்து விபரங்களை அறியலாம். கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க பல்வேறு நிலைகள் உள்ளதால் பின் வரும் இணையதளத்தைப் பார்த்து முழுமையான விபரங்களை அறியவும்.

இணையதள முகவரி:



http://bel&india.com/images/itm&pdfs/13&Sept&2012&GATE_2013.pdf

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva raj - Tamilnadu,இந்தியா
30-செப்-201217:46:51 IST Report Abuse
Siva raj Tamil
Rate this:
Share this comment
Cancel
s karthikeyan - coimbatore,இந்தியா
24-செப்-201209:07:45 IST Report Abuse
s karthikeyan இன்னும் கூட பல GOVT கம்பெனீஸ் IRRUKU ட்ரை பண்ணலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X