ரைட்ஸ் நிறுவனத்தில் காலி இடங்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2012
00:00

நம் அனைவராலும் ரைட்ஸ் என்ற பெயரில் அறியப்படும் ரயின் இந்தியா டெக்னிகல் அண்டு எகனாமிக் சர்வீஸஸ் லிமிடெட் நிறுவனம் (RITES ) போக்குவரத்து உள்கட்டுமானம் தொடர்புடைய இன்ஜினியரிங் கன்சல்டன்சி நிறுவனமாகும். இந்தியாவின் ரயில் போக்குவரத்திற்கான கன்சல்டன்சி சேவைகளை வழங்குவதற்காக 1974ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது. பின்னர் சர்வ தேச நாடுகளுக்கும் இந்த நிறுவனத்தின் சேவை விஸ்தீகரிக்கப்பட்டது. தற்சமயம் 30 சர்வதேச நாடுகளில் இந்த நிறுவனத்தின் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வளவு பிரசித்தி பெற்ற ரைட்ஸ் நிறுவனத்தில் கிராஜூவேட் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பதவிக்கான 67 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

பிரிவுகளும் காலி இடங்களும்:



ரைட்ஸ் நிறுவனத்தின் கிராஜூவேட் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பதவியில் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் 26 இடங்களும், மெக்கானிகல் இன்ஜினியரிங் பிரிவில் 8 இடங்களும், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் பிரிவில் 16 இடங்களும், ஆர்க்கிடெக்சர், ஐ.டி., சிக்னல் அண்டு டெலிகம்யூனிகேஷன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவுகளில் தலா 4 இடங்களும், மெட்டலர்ஜி அண்டு கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 5 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
தேவைகள்: மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தொடர்புடைய இன்ஜினியரிங் பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்தியக் குடியுரிமை பெற்றவராக இருப்பதும் கட்டாயத் தேவையாகும்.
உடல் ஊனமுற்ற பிரிவிற்காக விண்ணப்பிப்பவர்கள் குறைந்த பட்சம் 40 சதவிகித உடல் ஊனமுடையவராக இருக்க வேண்டும்.

வேறு என்ன தகவல்கள்:



ரைட்ஸ் நிறுவனத்தின் கிராஜூவேட் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.500/-ஐ டி.டி., மூலமாக கட்டணமாக செலுத்த வேண்டும். உடல் ஊனமுற்றோருக்கு கட்டண விலக்கு சலுகை உள்ளது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ.100/- மட்டும் செலுத்தினால் போதுமானது. எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
எழுத்துத் தேர்வை பெங்களூரு உள்ளிட்ட இதர மையங்களில் எழுதலாம். இந்தப் பதவிக்கு ஆன்-லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பித்த பின்னர் கிடைக்கும் ரெஜிஸ்ட்ரேஷன் ஸ்லிப்புடன் சில உரிய இணைப்புகளை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். முழுமையான விபரங்களை இந்த நிறுவனத்தின் இணையதளத்திலிருந்து அறியவும்.

ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் :



13.10.2012

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:



The Advertiser (RITES),
Post Box No : 9248,
Krishna Nagar Head Post Office,
Delhi - 110051.

இணையதள முகவரி:



www.rites.com/web/images/stories/uploadVacancy/GET&sept12_website.pdf

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X