ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு பெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் பதவி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2012
00:00

ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு பெர்டிலைசர்ஸ் லிமிடெட் என்ற ஆர்.சி.எப்., நிறுவனம் கடந்த 2011 ஆம் ஆண்டு நேஷனல் எனர்ஜி கன்சர்வேஷன் விருதைப் பெற்ற நிறுவனமாகும். இந்த நிறுவனம் முக்கியமான வேதிப் பொருட்கள் மற்றும் உரங்களைத் தயாரிப்பதற்காக இந்தியா எங்கும் அறியப்படுகிறது. இந்த நிறுவனத்திலுள்ள 41 பிரிவுகளிலான பல்வேறு காலி இடங்களை அப்ரெண்டிஸ் அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

முக்கிய பிரிவுகளும், காலி இடங்களும்:



ஆர்.சி.எப்., நிறுவனத்தில் நாம் ஏற்கெனவே குறிப்பிட்டபடி 41 பிரிவுகளின் கீழ் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இவற்றில் அட்டெண்டண்ட் ஆபரேட்டர் - கெமிக்கல் பிளாண்ட் பிரிவில் 24 இடங்களும், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக் பிரிவில் 7 இடங்களும், மெயிண்டனென்ஸ் மெக்கானிக் பிரிவில் 5 இடங்களும், எலக்ட்ரீசியன் பிரிவில் 5 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. முழுமையான பணி நியமன விபரங்களைப் பின்வரும் இணைய தளத்திலிருந்து அறியவும்.

தேவைகள்:



ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு பெர்டிலைசர்ஸ் நிறுவனத்தின் அப்ரெண்டிஸ் பதவிக்கு விண்ணபிப்பவர்கள் 01.09.2012 அடிப்படையில் 21 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அட்டெண்டண்ட் ஆபரேட்டர் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக் பதவிகளுக்கு பி.எஸ்.சி., பட்டப் படிப்பை வேதியியல் அல்லது இயற்பியலில் முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மெயிண்டனென்ஸ் மெக்கானிக் மறும் எலக்ட்ரீசியன் பிரிவுகளுக்கு ப்ளஸ்டூ அளவிலான படிப்பை அறிவியல் புலத்தில் முடித்தவர்களும், எம்.சி.வி.சி., முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

மற்ற விபரங்கள்:



இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.50/-ஐ ஏதாவது ஒரு தேசீயமயமாக்கப்பட்ட வங்கியின் டி.டி., வாயிலாக Rashtriya Chemicals and Fertilizers Ltd என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்கதாக செலுத்த வேண்டும். விண்ணப்பத்தை முறையான படிவ மாதிரியில் மட்டுமே அனுப்ப வேண்டும். மாதிரிப் படிவத்தை இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்து பெறலாம். இந்த விண்ணப்பத்துடன் முக்கிய தகவல்கள், பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் உரிய சான்றிதழ் இணைப்புகளையும் சேர்த்துப் பின்வரும் முகவரிக்கு 28.09.2012க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான விபரங்களைப் பின்வரும் இணையதளத்திலிருந்து அறியவும்.

முகவரி:



Chief Manager (HR) Unit, Rashtriya Chemicals & Fertilizers Ltd.,
Room No : 04, Administrative Building, Chembur, Mumbai - 400 074.

விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் :



28.09.2012

இணையதள முகவரி:



www.rcfltd.com/index.php/hrmain/recruitment/3845&recruitment&of&act&apprentices

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X