என்னைப் போல இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு உங்கள் கட்டுரை "எக்ஸ்பியின் செயல் திறன்' மிக உதவியாக இருந்தது. எழுதப்பட்ட அனைத்துமே, இதுவரை கேட்கப்படாத தகவல்கள். நன்றி.
ஆ. நல்லதம்பி, மதுரை.
எக்ஸ்பி சிஸ்டம் குறித்த கட்டுரையில் விர்ச்சுவல் மெமரி குறித்த வரிகளைப் படித்த பின்னர் தான் அது என்னவென்று சரியாகவும் தெளிவாகவும் புரிந்தது.
க. நூர்ஜஹான், விருதுநகர்.
எக்ஸெல் தொகுப்பிற்கு அளித்தது போல, பிரசன்டேஷன் மற்றும் அவுட்லுக் போன்றவற்றிற்கும் ஷார்ட் கட் கீ தொகுப்பு வெளியிடவும். பிரிண்ட் எடுத்து மாட்டி வைத்துப் பயன்படுத்துகிறோம்.
டி.கே. பரமசிவம், பழனி.
ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ மூலமாக, பைல் தயாரித்தவர் குறித்த தகவல்களை அமைப்பது எல்லா புரோகிராம்களுக்கும் பொருந்தும் தானே! இது குறித்தும் நீங்கள் எக்ஸெல் கட்டுரையில் ஒரு வரி சேர்த்திருக்கலாம்.
ஏ.பங்கஜ் குமார், தாம்பரம்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 8 ஐ மூடச் சொன்ன, மைக்ரோசாப்ட் அவற்றில் இருந்த பிரச்னைக்குரிய பிழைகளுக்காக சென்ற வாரம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டது. எல்லாரும் மொத்தமாக இதனை ஒதுக்கி, வேறு பிரவுசர்களுக்குச் சென்று விட்டனர், எங்கள் நண்பர் குழாம் உட்பட.
கே. திருமாறன், கோவை.
சிறப்பு அடையாளங்கள் மற்றும் அவற்றிற்கான கீ தொகுப்புகளை இன்னும் தொடரவும். ஒரு அட்டவணையாகத் தந்தால், அச்செடுத்து ஒட்டி வைத்துப் பயன்படுத்த எளிதாக இருக்கும்.
கி.உலகநாதன், திருப்பூர்.
மொபைல் போன் ஒவ்வொன்றுக்கும் தனி எண் உண்டு; அப்படி இப்படி என பல தகவல்கள் வெளி வந்தன. இறுதியில், 18,000 போன்களுக்கு ஒரே எண்ணா? எங்கே பிழை உள்ளது.
சி.எஸ். தியாகராஜன், பொள்ளாச்சி.
நெட்வொர்க் பிரிண்டர் செயல்பாடு குறித்த டிப்ஸ் மிக அருமை. என் அலுவலகத்தில் பணி புரிபவர்களை நன்றாகக் கற்றுக் கொள்ள இதனைப் படிக்கச் சொன்னேன்.
டி.பிரகாஷ், சென்னை.
ஸ்கைப் மைக்ரோசாப்ட் வசம் போன பின்னரும், இலவச மாகவே கிடைத்து வருகிறது. இதில் கூடுதல் வசதிகளையும் கட்டணம் இன்றி தர மைக்ரோசாப்ட் முன் வர வேண்டும்.
பேரா. கா. இளஞ்சேரன், கோவை.
ஆன்லைன் வர்த்தகம் மட்டுமல்ல, சமூக தளங் களுக்கான தகவல்களை வேறு எங்கும் பயன் படுத்தாதிருப்பது நல்லது. அதே போல போட்டோக்களையும் பதிப்பது நல்லதல்ல. இதில் கடைப் பிடிக்க வேண்டியவற்றை ஒரு கட்டுரையாகத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
டி. எபனேசர் ரிச்சர்ட், புதுச்சேரி.
புதிய கம்ப்யூட்டர்களிலேயே மால்வேர் தொகுப்புகளா? கேட்கவே அச்சமாக உள்ளது. சைக்கிளை வாங்கியவுடன், மீண்டும் பிரித்து இணைப்பது போல, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை ரீ இன்ஸ்டால் செய்வது நல்லது என்ற உங்கள் கருத்து சூப்பர் டிப்ஸ்.
ஆர். கலையரசி, சென்னை.
டேப் வழி பிரவுசிங் தான் வசதியாக உள்ளது. வேண்டாம் என்று சொல்வது தவறு என்று சொல்லிவிட்டு, அதற்கான வழிகளையும் சொல்லி இருப்பது, நீங்கள் வாசகர்களை மதிப்பதில் அக்கறை உள்ளவர் என்பதைக் காட்டுகிறது.
டாக்டர் பிரான்சிஸ் சேவியர், காரைக்கால்.
ஆட்டோ டெக்ஸ்ட் என்ட்ரியில் ஏன் இடைவெளி அதிகம் என வெகு நாட்களாக குழம்பி போய் இருந்தேன். சின்னதாக கார்டில் எழுதிக் கேட்ட போதும், அன்பாகப் பதில் தந்து விளக்கியதற்கு நன்றி.
கே. ஜென்சி, திருப்பூர்.
விண்டோஸ் 8 வரப்போவதால், அதனைப் பெற விரும்புபவர்கள், பாதுகாப்பாக இயங்க என்ன என்ன செய்திட வேண்டும் என டிப்ஸ் தரவும்.
இரா. கண்ணப்பன், காரைக்குடி.