உங்கள் நண்பர் ஒருவரிடம் இருந்து டாகுமெண்ட் ஒன்றை நீங்கள் பெற்றிருக்கலாம். அதில் அவர் நிறைய டேப்களை உருவாக்கிப் பயன்படுத்தியிருக்கலாம். நீங்கள் அதனைப் பார்த்தவுடன், வழக்கமாக உள்ள டேப்களை விடுத்து மற்றவற்றை நீக்க விரும்பலாம். அதற்குக் கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.
1. டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளவும். அடுத்து Ctrl+A கீகளை அழுத்தவும். இப்போது முழு டாகுமெண்ட்டும் தேர்ந்தெடுக்கப்படும்.
2. அடுத்து Format மெனுவில் என்னும் கூச்ஞண் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது வேர்ட் Tabs டயலாக் பாக்ஸைக் காட்டும்.
3. இந்த பாக்ஸில் Clear All என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.