சொற்களை எண்ணுகையில் ஹைபன் விலக்க
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2012
00:00

வேர்ட் புரோகிராமில், டாகுமெண்ட்களை அமைக்கையில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சொற்களுக்குள், டாகுமெண்ட்டை உருவாக்க வேண்டும் என்ற கட்டாயம் பலருக்கு ஏற்படும். பத்திரிக்கைகளுக்கான கட்டுரைகள், மொழி பெயர்ப்பு ஆவணங்கள் போன்றவற்றில் இந்த கட்டுப்பாட்டினைப் பின்பற்ற வேண்டியதிருக்கும். இதற்கென டாகுமெண்ட்டினை உருவாக்குகையில், பல நிலைகளில் மொத்த சொற்களின் எண்ணிக்கையினை, வேர்ட் கவுண்ட் (Word Count) என்ற டூல் மூலமாகப் பார்ப்போம். இதில் ஹைபன் என்னும் சொற்களுக்கு இடையேயான கோடுகளால், பிரச்னை ஏற்படும். இவற்றைத் தனிச் சொற்களாக எடுத்துக் கொண்டு இந்த டூல் செயல்படும். இவற்றை விலக்கி, சொற்களை எண்ண ஒரு சிறிய செட்டிங்ஸ் அமைக்க வேண்டும். அதனை இங்கு காணலாம்.
ஆங்கிலத்தில் கூட்டு சொற்கள் (compound words) மூன்று வகைப்படும். முடிக்கப்பட்ட கூட்டு (எ.கா.‘firefly’), ஹைபன் அமைக்கப்பட்டது (எ.கா.. ‘daughterinlaw’) மற்றும் மாற்றமில்லாமல் அமைவது (எ.கா. ‘post office’). இந்தக் கூட்டுச் சொற்களில்,பொருள் மாறாமல் இருக்க ஹைபன் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக old furniture shop என்பதில், கடை பழையதா, அங்கு விற்கப்படும் பொருட்கள் பழையனவா என்று சரியாகக் காட்ட வேண்டும். இதனை old furnitureshop மற்றும் old–furniture shop எனவும் எழுதலாம். இது போன்ற சொற்களில், ஹைபன் ஒரு சொல்லாக எடுக்கப்பட்டு எண்ணப்படும். இதனைத் தவிர்க்க கீழ்க்காணும் வழிகளைக் கையாளவும்.
1. Edit மெனுவில் இருந்து Replace என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது Ctrl+Hஅழுத்தவும். இப்போது வேர்ட், Find and Replace டயலாக் பாக்ஸைக் காட்டும்.
2. அடுத்து More பட்டனில் கிளிக் செய்திடவும்.
3. அடுத்து Use Wildcards என்ற செக் பாக்ஸில் டிக் அடிக்கவும்.
4. இப்போது Find What என்ற பாக்ஸில் ([Az]{2,})([Az]{2,}) என என்டர் செய்திடவும்.
5. தொடர்ந்து Replace With பாக்ஸில் \1 \2 எனஅமைக்கவும். இதில் 1 என்பதற்குப் பின் அடுத்த ஸ்லாஷ் முன்பாக ஒரு ஸ்பேஸ் விடப்பட்டுள்ளது. இதனைச் சரியாக அமைக்கவும்.
6. இனி Replace All என்பதில் கிளிக் செய்திடவும். Find and Replace தொடர்ந்து டயலாக் பாக்ஸை மூடவும்.
இனி டூல்ஸ் மெனுவில், வேர்ட் கவுண்ட் (Word Count) என்ற டூலைத் தேர்ந்தெடுத்து அழுத்தி சொற்களின் எண்ணிக்கையைப் பெறவும். டாகுமெண்ட்டில் உள்ள ஹைபன்கள் எல்லாம் எடுக்கப்பட்டுவிட்டதே எனப் பதற்றம் அடைய வேண்டாம். பழைய ஹைபன்கள் கிடைக்கும் வரை கண்ட்ரோல்+இஸட் கீகளை அழுத்தவும். டாகுமெண்ட் பழைய நிலைக்குச் செல்லும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X