கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 ஆக
2010
00:00

கேள்வி: விண்டோஸ் இயக்கத்துடன் வரும் நோட்பேட் தொகுப்பு இல்லாமல், வேறு நோட்பேட் தொகுப்பினை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாமா?
– கா. நிர்மல் குமார், சென்னை
பதில்:
நிச்சயம் பயன்படுத்தலாம். கூடுதல் வசதிகளுடன் கூடிய நோட்பேட் ++ என்ற புரோகிராம் கிடைக்கிறது. இது ஒரு இலவச புரோகிராம். http://notepadplusplus.org/ என்ற முகவரியில் இதனைப் பெற்றுக் கொள்ளலாம். தற்போதைய பதிப்பு எண் 5.7.


கேள்வி: கூகுள் குரோம் பிரவுசர் பயன்படுத்தி வருகிறேன். இதில் டவுண்லோட் செய்திடுகையில், எங்கு டவுண்லோட் செய்திட என்று கேட்காமல், புரோகிராம்கள் டவுண்லோட் செய்யப்படுகின்றன. டவுண்லோட் செய்யப்படும் இடத்தினைக் கேட்ட பின்னரே டவுண்லோட் செய்திடும் வகையில் இதனை எப்படி மாற்றுவது?
–சீ. க. இராசத் தமிழன், திண்டுக்கல்
பதில்:
நல்ல ஐடியா. இதன் மூலம் நாம் டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களின் தன்மைக் கேற்ப அவற்றை நாம் விரும்பும் ட்ரைவ்களில், போல்டர்களில் அவற்றைப் பதிவு செய்திடலாம். குரோம் பிரவுசரைத் திறந்து, அதன் வலது மூலையில் மேலாக இருக்கும் பைப் ரெஞ்ச் படத்தின் மீது கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Options  என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Under the Hood  என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். பின்னர் கீழாக Download location  என்னும் இடத்திற்குச் செல்லவும். இங்கு உள்ள Browse பட்டனில் கிளிக் செய்து, நீங்கள் டவுண்லோட் செய்திடும் புரோகிராம்களை எங்கு பொதுவாக, சேவ் செய்திட வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த இடத்தை டவுண்லோட் செய்திடும் பைல்களுக்கேற்றபடி மாற்ற எண்ணினால்,  Ask where to save each file before downloading என்று இருக்கும் இடத்தில் உள்ள செக் பாக்ஸுக்கு எதிரில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இனி நீங்கள் டவுண்லோட் செய்திட கட்டளை கொடுத்தவுடன்,மேலே பிரவுஸ் செய்து தேர்ந்தெடுத்த ட்ரைவ் அல்ல்து போல்டர் திறக்கப்பட்டு, சேவ் கட்டம் தோன்றும். வேறு இடத்தில் சேவ் செய்திடத் திட்டமிட்டால், நீங்கள் விரும்பும் இடத்தைத் தேர்வு செய்து சேவ் பட்டனை அழுத்தலாம்.


கேள்வி: விண்டோஸ் சர்வீஸ் பேக் 2க்கான சப்போர்ட் நின்றுவிட்டதாகவும், சர்வீஸ் பேக் 3 மட்டுமே இனி உதவி பெறும் என்று எச்சரிக்கை செய்திகளைப் படித்தேன். என் கம்ப்யூட்டரில் இந்த சர்வீஸ் பேக் 3 நிறுவப்பட்டுவிட்டதா என எப்படி அறிவது? இல்லை எனில் எப்படி அப்டேட் செய்வது? நான் ஒரிஜினல் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் அப்டேட் இயக்குகிறேன்.
–கா. கலா மூர்த்தி, ஆசிரியை, மதுரை
பதில்
: ஏறத்தாழ ஐம்பதுக்கும் மேற்பட்ட கடிதங்கள், பல தொலைபேசி அழைப்புகள் இந்த எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கம்ப்யூட்டர் மலர் பிரிவிற்கு வந்துள்ளன. சற்று விரிவாகவே இதனைப் பார்ப்போம்.
அண்மையில் மேற்கொண்ட ஓர் ஆய்வு, விண்டோஸ் எக்ஸ்பி இயங்கும் கம்ப்யூட்டர்களில் 45% கம்ப்யூட்டர்கள் இன்னும் எஸ்.பி.3 அப்டேட்டைப் பெறவில்லை; எஸ்.பி.2 அப்டேட்டுடன் மட்டும் இயங்குவதாகத் தெரிவிக்கிறது. எஸ்.பி.2க்கான சப்போர்ட் நிறுத்தப்பட்டுவிட்டது என்ற செய்தியால், பதற்றம் அடைய வேண்டிய தில்லை. சப்போர்ட் இல்லை என்றால், இந்த அப்டேட்டுக்குப் பின் தரப்படும் பாதுகாப்பு வளையங்கள் கிடைக்காது. ஏற்கனவே எஸ்.பி.2 மூலம் தரப்பட்ட பாதுகாப்பு வளையங்கள் இயங்கிக் கொண்டு தான் இருக்கும்.
இனி நம் பிரச்னைக்கு வருவோம். எப்படி எஸ்.பி.3 அப்டேட் ஆகிவிட்டதா என அறிவது?
மிக எளிதான மற்றும் வேகமான வழி விண்டோஸ் கீயுடன் Pause/Break கீயை அழுத்துவதுதான். அல்லது மை கம்ப்யூட்டர் அழுத்தி அதில் மை ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். இந்த இரண்டு வழிகளிலும், உங்கள் கம்ப்யூட்டரின் ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ கிடைக்கும். இதில் ஜெனரல் டேப்பினைத் தேர்ந்தெடுத்தால் கிடைக்கும் விண்டோவில், சர்வீஸ் பேக் எது உங்கள் கம்ப்யூட்டரில் அப்டேட் ஆகி இயங்குகிறது என்று காட்டப்படும். நீங்கள் தானாக அப்டேட் செய்திடும் வசதியினை இயக்கி வைத்திருந்தால், சர்வீஸ் பேக் 3 தானாக அப்டேட் ஆகியிருக்கும்.
இல்லை சர்வீஸ் பேக் 2 தான் உள்ளது என்றால், கீழ்க்காணும் நான்கு வழிகளில் ஒன்றைப் பின்பற்றி, எஸ்.பி. 3க்கு அப்டேட் ஆகவும். http://update.microsoft.com/ என்ற முகவரியில் உள்ள தளம் சென்று அங்கு காட்டப்படும் அப்டேட்டிற்கான வழிகளைப் பின்பற்றவும். இந்த தளம் செல்கையில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பயன் படுத்தவும். விண்டோஸ் மற்ற பிரவுசரை இந்த விஷயத்தில் ஏற்றுக் கொள்வதில்லை.
அடுத்து முன்பு குறிப்பிட்ட படி http://www.microsoft.com/downloads /details.aspx? FamilyId=5B33B5A85E76401FBE081E1555D4F3D4&displaylang=en  என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். அங்கு Service Pack 3 Network Install என்ற பெயரில் ஒரு எக்ஸ்கியூட்டபிள் பைல் கிடைக்கும். இதன் பெயர் எப்படி இருந்தாலும், இதனை டவுண்லோட்செய்து, இயக்கினால், எஸ்பி 3 இன்ஸ்டால் செய்யப்படும். இந்த பைல் 300 எம்பி என்ற அளவில் உள்ளது. வேறு மொழிகளில் விண்டோஸ் பயன்படுத்துபவர்களுக்கான எஸ்.பி.3 அப்டேட் பைலையும் மைக்ரோசாப்ட் தருகிறது. இதற்கான தள முகவரி http://www.microsoft.com /downloads/details.aspx?familyid= D3F8F6AB84F140958709DF509B1BEE22&displaylang=en. இது 9 எம்பி என்ற அளவில் உள்ளது.
எந்த விண்டோஸ் கம்ப்யூட்டரி லும் இதனை மேற்கொள்ள, மைக்ரோசாப்ட் பைல் ஒன்றைத் தருகிறது. இதனை http://www.microsoft.com /downloads/details.aspx?FamilyId =2FCDE6CEB5FB44888C50FE22559D164E&displaylang=en என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். இதனை பேக் அப் காப்பி போல வைத்துக் கொண்டு, எஸ்.பி.3 தேவைப்படும் எந்த கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம். மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் இருந்து சிடியாகவே இதனைக் கட்டணம் செலுத்திப் பெறலாம். அதற்கான தள முகவரி https://om2.one.microsoft.com/opa /start.om?StoreID=D7A098F440344CCBA7859E890E6B4F5B&Locale Code=enus&NewTrans=1


கேள்வி: டெரா பைட் என்பது என்ன? இது எந்த அளவினைக் குறிக்கிறது?
–கா. சுந்தரம், திருப்பூர்
பதில்:
டெரா (Tera) என்றால் ஒரு லட்சம் கோடி. 1 போட்டு 12 சைபர் போட்டுக் கொள்ளுங்கள். கிலோ என்றால் ஆயிரம் என்று உங்களுக்குத் தெரியும், இல்லையா! ஆயிரம் கிராம் ஒரு கிலோ கிராம் என்பது அன்றாட வழக்கு. மெகா (Mega)  என்றால் பத்து லட்சம். கிகா என்றால் நூறு கோடி. 1 போட்டு 9 சைபர் போட்டுக் கொள்ளுங்கள். எனவே டெரா பைட் என்றால் ஒரு லட்சம் கோடி பைட்ஸ் டேட்டா ஸ்டோரேஜ் என்று உத்தேசமான கணக்கு என்று சொல்லலாம். மிகத் துல்லியமாகச் சொல்வது என்றால், இது 10,99,51,16,27,776 பைட்ஸ் ஆகும். இதற்கும் மேலாக உள்ள பீட்டா, எக்ஸா, ஸீட்டா மற்றும் யோட்டா பைட் குறித்து சில வாரங்களுக்கு முன் வந்த மலரைப் பார்க்கவும்.


Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஏழுமலை - villupuram,இந்தியா
15-ஆக-201018:19:17 IST Report Abuse
ஏழுமலை நான் நோட்பேட் பயன்படுத்துவதே இல்லை. வேர்ட் மட்டுமே பயன்படுத்துகிறேன். அதில் உள்ள சிறப்பு என்ன? எந்த சமயங்களில் பயன்படுத்தலாம்? வேர்ட் விட எந்த விதத்தில் சிறந்தது?
Rate this:
Share this comment
Cancel
K Sekar - bangalore,இந்தியா
15-ஆக-201013:09:23 IST Report Abuse
K Sekar hi sir this computer malar is very very useful for the learners thanks
Rate this:
Share this comment
Cancel
14-ஆக-201011:05:15 IST Report Abuse
R D துரை செல்வகுமார் I am having some doubts in using excel sum, count if formulas with two or more conditions. Whom i have to contact. Please send me the email id or address.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X