கேள்வி- பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 அக்
2012
00:00

கேள்வி: இன்டர்நெட்டில் அதன் தளத்தினைப் பெரிதாகப் பார்க்க, திரை முழுவதும் காட்டும் வகையில் கீகள் உள்ளன. அவ்வாறு பார்க்கும் போது, டாஸ்க் பார் மறையவில்லை. அதனையும் மறைத்துப் பார்க்க என்ன கீ காம்பினேஷன் அழுத்த வேண்டும்.
கி.ஜெயப்ரகாஷ், திருப்பூர்.
பதில்:
நல்ல கேள்வி. நம் வசதிக்குத்தானே கம்ப்யூட்டர். பின் ஏன் இதனையும் மறைக்கக் கூடாது என்ற ஆதங்கம் உங்கள் கேள்வியில் புரிகிறது. டாஸ்க் பாரையும் நீங்கள் விரும்பும் வகையில் மறைக்கலாம். டாஸ்க்பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். எழுந்து வரும் மெனுப்பட்டியலில் Properties என்பதில் இடது கிளிக் செய்திடவும். இப்போது ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதன் தலைப்பு Taskbar and Start Menu Properties என்று இருக்கும். இதில் இரண்டு டேப்கள் தரப்பட்டிருக்கும். இதில் Taskbar என்ற டேப்பை செலக்ட் செய்து கிளிக் செய்திடவும். கிடைக்கும் டயலாக் பாக்ஸில் ஐந்து விருப்பத் தேர்வுகள் கிடைக்கும். மூன்றாவதாக Keep the taskbar on top of windows என்று ஒன்றைப் பார்க்கலாம். இதன் முன் உள்ள பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிட்டு, பின்னர் Apply என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின் OK கிளிக் செய்திடவும்.
இப்போது சென்று பாருங்கள். நீங்கள் டெஸ்க் டாப்பில் இருந்தால் தான், டாஸ்க்பார் உங்களுக்குத் தோற்றமளிக்கும். நீங்கள் பிரவுசரைப் பயன்படுத்தும்போதோ, கடிதம் எழுதும் போதோ, டாஸ்க்பார் தெரியாது.

கேள்வி: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் செல் குறிக்கப்படுகையில், சில கம்ப்யூட்டர்களில் நெட்டு வரிசை எனப்படும் காலம் எண் மற்றும் எழுத்து (A4) மூலம் காட்டப்படுகிறது. வேறு சில கம்ப்யூட்டர்களில் நெட்டு மற்றும் படுக்கை வரிசை (R3A4)எண்களால் காட்டப்படுகிறது. இதற்குக் காரணம் என்ன? இரண்டாவதாகக் காட்டப்படுவது போல் தேவை என்றால், என்ன செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்?
என். கார்த்திக், புதுச்சேரி.
பதில்:
இரண்டு வழிகளிலும் காட்டப்படுமாறு அமைத்திடலாம். முதலில் எழுத்து மற்றும் எண் வழி, எக்ஸெல் புரோகிராமில் மாறா நிலையில் அமைக்கப்படுவதாகும். காலம் எனப்படும் நெட்டு வரிசை எழுத்துக்களாலும், ரோ எனப்படும் படுக்கை வரிசை எண்களாலும் காட்டப்படும். இரண்டுமே எண்களால் அமைக்கப்பட்டுக் காட்டப்படுவதனை R1C1 குறியீடு என அழைக்கின்றனர். இதில் R என்பது படுக்கை வரிசையான Row மற்றும் C என்பது நெட்டு வரிசையான Column. எண்கள் செல் இருக்கும் வரிசை எண்ணைக் குறிக்கின்றன. இந்த பார்மட்டில் செட்டிங்ஸ் அமைக்கையில், இரண்டு புறங்களிலும் எண்கள் காட்டப்படுவதனைக் காணலாம். இதனை அமைத்திட Tools மெனுவில் இருந்து Options தேர்ந்தெடுக்கவும். இப்போது எக்ஸெல் Options டயலாக் பாக்ஸினைக் காட்டும். இதில் General என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், இதில் உள்ள பிரிவுகளில் இடது புறம் மேலாக R1C1 Reference Style என்று இருப்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தி, ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, ஒர்க் ஷீட்டின் இடது மூலையில், கர்சர் இருக்கும் செல்லின் அடையாளம் இந்த பார்மட்டில் காட்டப் படுவதனைக் காணலாம்.

கேள்வி: எக்ஸெல் ஒர்க்புக் திறந்துதான் என் அன்றாட அலுவலக வேலையைத் தொடங்குகிறேன். எப்படியும் நான்கு அல்லது ஐந்து எக்ஸெல் பைல்களைத் திறக்க வேண்டியதுள்ளது. இவற்றை ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்து திறக்காமல், மொத்தமாக திறக்க முடியுமா?
சி.கே. நிர்மலா, திருப்பூர்.
பதில்:
பைல்களை நிர்வகிக்க எக்ஸெல் மிக நல்ல சிஸ்டம் ஒன்றைக் கொண்டுள்ளது. இதன் அனைத்து வசதிகளையும் தெரிந்து கொண்டு பயன்படுத்துவது, நம் அலுவலகப் பணியினை எளிதாக்கும். இனி, இங்கு நீங்கள் கேட்ட வசதிக்கு வருவோம்.
1. முதலில் Open டயலாக் பாக்ஸை, மெனுவில் Open அழுத்தித் திறக்கவும். நீங்கள் எக்ஸெல் 2007 பயன்படுத்துபவராக இருந்தால், ஆபீஸ் பட்டன் அழுத்தி Open என்பதனை கிளிக் செய்திடவும்.
2. நீங்கள் திறக்க விரும்பும் பைல் பெயர் ஒன்றில், டபுள் கிளிக் செய்வதற்குப் பதிலாக, அனைத்து பைல்களையும் தேர்ந்தெடுக்க ஒரு பைல் தேர்வு பட்டியலை உருவாக்கவும். வரிசையாக அந்த பைல்கள் இருப்பின், அவற்றை ஷிப்ட் கீ அழுத்தித் திறக்கவும். வரிசையாக இல்லாமல் இருந்தால், கண்ட்ரோல் கீ அழுத்தியவாறு, அந்த பைல்களைத் தேர்ந்தெடுக்கவும்.
3. தேர்ந்தெடுத்த பைல்களில் ஒன்றை நீக்க, கண்ட்ரோல் கீ அழுத்தியவாறு அதில் கிளிக் செய்திடலாம்.
4. உங்களுக்கு வேண்டிய பைல்களைத் தேர்ந்தெடுத்த பின்னர், Open என்பதில் கிளிக் செய்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பைல்களும் திறக்கப்படும்.

கேள்வி: நான் விண்டோஸ் 2007 பயன்படுத்துகிறேன். நம்லாக்,கேப்ஸ் லாக் கீகளை அழுத்துகையில், பீப் ஒலி ஏற்படுத்தப்படுகிறது. இந்த சத்தத்தை நிறுத்த என்ன வழி?
சி.எல். சிவராமன், திண்டுக்கல்.
பதில்:
கேப்ஸ் லாக், நம்லாக் மற்றும் ஸ்குரோல் லாக் கீகளை அழுத்துகையில், பீப் ஒலி எழுவது நம் வசதிக்காகத்தான். தவறுதலாக இவை அழுத்தப்படுகையில் இதனை ஓர் எச்சரிக்கையாக எடுத்து, மீண்டும் மாற்றி விடலாம். இவ்வாறு பீப் ஒலி கிடைக்கும்
வசதியை நீங்கள் தான் ஏற்படுத்தி இருப்பீர்கள். உங்கள் விஷயத்தில் இதனை நீங்கள் அறியாமலேயே அமைத்திருப்பீர்கள். இவற்றை டாகிள் கீ என அழைப்பார்கள். பீப் ஒலியை ஏற்படுத்த, கண்ட்ரோல் பேனல் சென்று செட் செய்திடலாம். அல்லது தொடர்ந்து நம் லாக் கீயினை ஐந்து விநாடிகள் அழுத்தினால், இவற்றை செட் செய்வதற்கான விண்டோ கிடைக்கும். இதனை மீண்டும் ஒலி எழாமல் அமைத்திடக் கீழ்க்குறித்தவாறு செயல்படவும்.
1. ஸ்டார்ட் பட்டன் அழுத்தி, “All Programs”, “Accessories”, “Ease of Access”, “Ease of Access Cente” எனத் தேர்வு செய்திடவும்.
2. Ease of Access Center என்ற விண்டோ கிடைத்தவுடன், கீழாக ஸ்குரோல் செய்து சென்று, Make it easier to focus on tasks என்ற இடத்தில் கிளிக் செய்திடவும்.
3. தொடர்ந்து கிடைக்கும் திரைக் காட்சியில், “Make it easier to type” என்பது வரை சென்று, அங்கே “Turn on Toggle Keys” என்பதில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும்.
4. மேலே சொல்லப்பட்ட டிக் அடையாளத்தை எடுத்துவிட, NUM LOCK கீயில் தொடர்ந்து 5 விநாடிகள் அழுத்தியவாறு இருக்கவும். இப்போது அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலை மாறி இருக்கும்.
5. இறுதியாக உங்கள் செட்டிங்ஸ் அனைத்தையும் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். அடுத்து “Ease of Access Center” விண்டோவினை மூடவும்.

கேள்வி: பிரிண்ட் செய்கையில் பல்வேறு அளவிலான பேப்பர்களை செட் செய்திட முடியுமா? இதனை எப்படி செட் செய்வது? பிரிண்டர் ஆப்ஷன் பக்கத்திலா?
சி. பாலாஜி, திருமங்கலம்.
பதில்:
வேர்ட் புரோகிராம், விண்டோஸ் சப்போர்ட் செய்திடும் எந்த பிரிண்டரையும் சப்போர்ட் செய்திடும். பொதுவாக, தற்போது புழக்கத்தில் உள்ள அனைத்து பிரிண்டர்களும், பலவகையான அளவுகளில் பேப்பர்களைப் பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்கின்றன. உங்கள் பிரிண்டர் இதனை ஏற்றுக் கொள்வதாக இருந்து, உங்கள் டாகுமெண்ட்டினை குறிப்பிட்ட அளவிலான பேப்பரில் பிரிண்ட் எடுக்க நினைத்தால், வேர்ட் பைல் மெனுவில் இந்த மாற்றத்தினை ஏற்படுத்தலாம்.
1. பைல் மெனுவில் பேஜ் செட் அப் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் பேஜ் செட் அப் டயலாக் பாக்ஸைத் தரும்.
2. இதில் Select the Paper Size அல்லது Paper என்ற பிரிவு கிடைக்கும். இங்கு நீங்கள் விரும்பும் பேப்பரின் அளவைத் தேர்ந்தெடுத்து, பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். தேர்ந்தெடுத்த அளவிலான பேப்பரை, பிரிண்டரில் கொடுத்து அச்செடுக்கலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Boo.ராதாகிருஷ்ணன். - Sivagangai,இந்தியா
20-அக்-201220:34:04 IST Report Abuse
Boo.ராதாகிருஷ்ணன். நான் கடந்த பல ஆண்டுகளாக கம்ப்யூட்டர் மலர் இதழ்களை சேமித்து வைத்துள்ளேன். அவை அனைத்தையும் தங்கள் ஒரு புத்தகமாக அல்லது பி டி எப் பைலாக வெளியிட்டால் காலத்தால் அழியாத பொக்கிஷமாக பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
mohamadhafees - polonnaruwa,இலங்கை
19-அக்-201222:31:37 IST Report Abuse
mohamadhafees தம்ழில் பொதுவான நூல்களை தரவிறக்கம் செய்யக்கூடிய websites எதுவும் இருந்தால் தரவும் நன்றி
Rate this:
Share this comment
Cancel
mohamadhafees - polonnaruwa,இலங்கை
19-அக்-201222:25:25 IST Report Abuse
mohamadhafees கம்ப்யூட்டர் மலர் ஆசிரியருக்கு வணக்கம் ....... நான் இந்த கம்ப்யூட்டர் மலரினை ஒவ்வொரு வாரமும் படித்து வருகிறேன் .... இதில் பல பயனுள்ள தகவல்களை தந்துள்ளமைக்கு முதற்கண் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்........நான் உங்களிடம் கேட்டுகொள்வது என்னவென்றால் இது வரையிலும் இப்பகுதியில் இடம்பெற்ற தகவல்களை ஒரு pdf பைல்லாக தந்து உதவும் படி கேட்டுக்கொள்கிறேன் ........ நன்றி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X