உபசாரம் அபசாரம் ஆகலாமா?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2012
00:00

புண்ணியம் சம்பாதிப்பதற்கு பல வழிகள் உண்டு; பாவத்தை கட்டிக் கொள்வதற்கும் பல வழிகள் உண்டு. யார், யாருக்கு எதில் ஆசையோ அந்த காரியத்தை செய்து, அதற்கான பலனை பெறுகின்றனர்.
கோவிலில் அர்ச்சகர் இருந்தார். காலம் தவறாமல் அபிஷேகம், அர்ச்சனை, நைவேத்யம், தீபாராதனை செய்வார்; சப்தமாக மந்திரங்களும் சொல்வார். தேதி தவறாமல் சம்பளமும் வாங்கிக் கொள்வார்.
அதே கோவிலில் ஒரு ஏழை இருந்தான். விடியற்காலையிலே கோவில் கதவைத் திறப்பான். கோவில் முழுவதும் தண்ணீர் தெளித்து பெருக்கி சுத்தம் செய்வான். கோவிலில் கொடுக்கும் பிரசாதத்தையே வாங்கி சாப்பிடுவான். இப்படியாக, இவன் கோவில் கைங்கரியமே செய்து வந்தான். இவனுக்கு வீடு, குடும்பம் என்று இருந்தாலும், கோவிலில் ஊழியம் செய்வதையே விரும்பி செய்து வந்தான்.
ஒருநாள் அர்ச்சகரும், இந்த ஏழையும் காலகதி அடைந்து பரலோகம் சென்றனர். அங்கே முதல், முதலாக எமதர்மராஜன் சபைக்குத்தான் போக வேண்டும். எமதர்மன் இவர்களது பாவ, புண்ணியங்களை விசாரித்து, அதற்கு தக்கபடி மரியாதை செய்து, பிறகு அவரவர்கள் போக வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைப்பான்.
இந்த குருக்களையும், ஏழையையும் எமதர்மராஜன் முன் கொண்டு போய் நிறுத்தினர். இவர்களை பார்த்ததும், எழுந்து ஓடோடி வந்தான் எமதர்மராஜன். முதலில் ஏழையை வர வேற்று, உபசரித்து, பொன்னாடை போர்த்தி, ஆசனத்தில் உட்கார வைத்தான். அடுத்து குருக்களிடம் வந்து உபசரித்து, வெண்பட்டு போர்த்தி ஆசனத்தில் உட்கார வைத்தான்.
அந்த சமயம் பார்த்து அங்கே வந்தார் நாரதர். இங்கே குருக்களுக்கும், ஏழைக்கும் நடைபெற்ற உபசாரங்களை பார்த்துவிட்டு, எமதர்மனிடம், "பூஜை செய்த குருக்களுக்கு வெண்பட்டு போர்த்தி இரண்டாவதாக உபசரித்தீர். அந்த ஏழையை முதலில் உபசரித்து, பொன்னாடை போர்த்தினீர்... ஏன் இந்த வித்தியாசம்?' என கேட்டார்.
அதற்கு, "குருக்கள் சிரத்தையாக கோவிலில் பூஜை செய்ததும், அர்ச்சனை செய்ததும் உண்மை தான். ஆனால், அதற்காக அவர் பிரதி மாதம் சம்பளம் வாங்கினார். பணத்துக்காகத் தான் அவர் பூஜை செய்தாரே தவிர, பக்திக்காக அல்ல. ஆனால், அந்த ஏழை, கோவிலுக்கு தொண்டு செய்தான். அதனால், பக்திக்காக தொண்டு செய்த ஏழைக்கு, பொன்னாடை போர்த்தி உபசரித்தேன்; பணத்துக்காக பூஜை செய்த குருக்களுக்கு வெண்பட்டு போர்த்தி உபசரித்தேன்.
"இப்போது புரிந்ததா?' என்றான் எமதர்மன். நாரதரும், "ஓ... அப்படியா, ரொம்ப சரி...' என்று சொல்லிவிட்டு, அடுத்த லோகத்துக்கு போய் விட்டார்.
அதாவது, பகவானுக்கு தொண்டு செய்தால், புண்ணியமும், புண்ணிய லோகமும் கிடைக்கும். ஆனால், பலனை எதிர்பார்த்து செய்தால், எதுவும் கிடைக்காது. புரிந்ததா இப்போது?
***

ஆன்மிக வினா-விடை!






வழிபாட்டில் தேங்காய் உடைப்பதன் காரணம் என்ன?
தேங்காயை ஓடு சுற்றியிருப்பது போல, மனிதனை, ஆணவம் பற்றியிருக்கிறது. இறைவனின் அருளால் மட்டுமே ஆணவம் நம்மை விட்டு நீங்கும். ஆணவத்தை போக்கவே தேங்காய் உடைத்து வழிபடுகிறோம்.
***

வைரம் ராஜகோபால்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GOWSALYA - DENHELDER,நெதர்லாந்து
22-அக்-201204:01:16 IST Report Abuse
GOWSALYA அர்ச்சகருக்கும் ஏழைக்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றி சொன்ன கதை அற்புதம் சகோதரரே....உண்மையும் அதுதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X