தியாகத் தாய்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2012
00:00

ஆக்., 23 - சரஸ்வதி பூஜை

"நீ சரஸ்வதியை வணங்கு, வகுப்பில் முதல் மாணவனாக இருப்பாய். அவள் கல்வி அறிவைத் தருபவள். நீ தொழில் நடத்துபவனாக இருந்தால், அன்றைய தினம் ஆயுதங்களுக்கு பூஜை செய். அவள் லாபத்தை அள்ளித் தருவாள்' என்ற அளவில், சுண்டல், பாயசத் தோடு சரஸ்வதி பூஜை கொண்டாட்டம் முடிந்து விடுகிறது.
சரஸ்வதி, வெறுமனே மதிப்பெண்களை வாரி வழங்குவதற்காக உருவானவள் அல்ல. அவள் தியாகத்தாய். இந்த உலகத்தில் எல்லா தெய்வங் களுக்கும் கோவில் இருக்கிறது. ஆனால், இவளுக்கு கோவில் இல்லை, இவளது கணவர் பிரம்மாவுக்கும் இல்லை. தமிழகத்தில், சரஸ்வதி மீது அதீத பற்றுக் கொண்ட ஒட்டக் கூத்தர், திருவாரூர் அருகிலுள்ள கூத்தனூரில் ஒரு கோவிலைக் கட்டி வைத்தார். பிரம்மாவுக்கு தனிக் கோவில் கிடையாது. சில பெரிய கோவில்களில் மட்டும் பூஜை இல்லாமல் ஒதுங்கி இருப்பார்.
ஏன் இவர்களுக்கு கோவில் இல்லாமல் போனது தெரி யுமா? புராணக்கதைப்படி, பிரம்மாவும், விஷ்ணுவும் சிவனின் அடிமுடியைக் காணச் சென்ற போது, பிரம்மா பொய் சொன்னதாகவும், அதனால், அவருக்கு வழிபாடு இல்லாமல் போகட்டும் என்று சிவன் சாபமிட்டதாகவும் சொல்லப் படுகிறது. கடவுளே என்றாலும், பொய் சொல்லக்கூடாது என்ற தத்துவம் மட்டுமே இதன்மூலம் விளக்கப்படுகிறது.
உண்மையில், இதன் தத்துவம் வேறு.
மனிதன் பிறக்கிறான். நிறைய சம்பாதிக்கிறான். தேவையானதை எல்லாம் வாங்குகிறான். சுகங்களை அனுபவிக்கிறான். ஆனால், ஒரு கட்டத்தில் அவனுக்கு அதில் சலிப்பு தட்டி விடு கிறது. கணவனுக்கும், மனைவிக்கும் சண்டை வந்து விட்டாலோ, பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டாலோ போதும்... "கடவுளே... என்னை ஏன் படைத்தாய்?' என்று புலம்புகிறான்.
அவ்வளவு ஏன் போக வேண்டும்? பணக்காரனை பார்த்து ஏழை பொறாமைப்படுகிறான்; பிறந்தால் அவனைப் போல் பிறந்திருக்க வேண்டும் என்று. இதே போல, ஏழையைப் பார்த்து, பணக்காரன் பொறாமை கொள்கிறான். அந்த ஏழை பழைய சோற்றையும், ஊறுகாயையும் சாப்பிடுகிறான். "உனக்கு பிரஷர், அதெல்லாம் சாப்பிடக் கூடாது...' என்று சொல்லி ரொட்டி பாக்கெட்டை கையில் கொடுத்து, டாக்டர் அனுப்பி விட்டாரே... என்று. இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற நிலையில் தான் வாழ்க்கைச் சக்கரம் சுழல் கிறது.
இன்று சர்க்கரை நோய் வந்த பலர், பணத்தை குவித்து வைத்திருந்தாலும், ஒரு டம்ளர் காபியைக் கூட ருசியாக குடிக்க இயலாத நிலையில் தானே இருக்கின்றனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், படைத்தவனை திட்டுகிறான் மனிதன்.
வெங்கடாஜலபதியை வணங்கினால், "நாராயணா... உன்னை மாதிரி நாலாயிரம் கோடிக்கு நான் அதிபதியாக வேண்டும்...' என்று கேட்கலாம். சிவனை வணங்கினால், "ஐயனே... உன்னைப் போல் வீரச்செயல்கள் புரிய வேண்டும்...' என்று வேண்டலாம். படைப்புக் கடவுளான பிரம்மாவிடம் போய், "ஐயா பிரம்மா... எனக்கு இன்னும் ஐந்தாறு பிறவியைக் கொடு...' என்று யாராவது கேட்பார்களா? அதனால் தான், அவருக்கு வழிபாடு இல்லாமல் போய் விட்டது. தன் கணவருக்கு கோவில் இல்லை என்ற காரணத்தால், அவரது மனைவி சரஸ்வதி, தனக்கும் கோவில்கள் தேவையில்லை என்று எண்ணி விட்டாள். கணவருக்கு இல்லாத சுகம், மனைவிக்கு ஏன்... என்று விட்டுக் கொடுக்கும் தன்மை. எவ்வளவு பெரிய தியாகம் பாருங்கள்!
தியாகத் தாயான சரஸ்வதிக்கு கோவில் இல்லாவிட்டாலும், கல்விக்கு அவளை அதிபதியாக்கி விட்டதால், வருடத்தில் ஒருநாள் நம் இல்லங்களில் எழுந்தருளச் செய்கிறோம்.
சரஸ்வதி பூஜை நன்னாளில், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இதுதான்!
படித்தால் மட்டும் போதாது. படிப்பின் நோக்கம், பிறருக்காக நம் வாழ்வை தியாகம் செய்வது தான் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
மாணவச் செல்வங்களே... நன்றாகப் படியுங்கள். படிப்பு என்பது, சம்பாதிக்க மட்டுமே என்ற குறுகிய நோக்கோடு நிறுத்தி விடாதீர்கள். குடும்பத்திற்கு, நண்பர்களுக்கு, சமுதாயத்திற்கு உதவும் வகையில், தியாகச் செயல்களைச் செய்யுங்கள். சரஸ்வதி பூஜையன்று நீங்கள் எடுக்க வேண்டிய உறுதி இதுதான்!
***

தி. செல்லப்பா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இரா ச சிவகுமார் - துபாய்,இந்தியா
24-அக்-201218:08:56 IST Report Abuse
இரா ச சிவகுமார் சரஸ்வதி கோவில் ஆந்திரா நிசம்பாத் மாவட்டத்தில் பசர எனுமிடத்தில் உள்ளது. ஹைதராபாத்தில் இருந்து 170 கிலோமீட்டர் துரத்தில் உள்ளது
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan - Kumbakonam,இந்தியா
23-அக்-201214:01:59 IST Report Abuse
Ramakrishnan பாண்டிய வம்சத்தில் வந்த அனைத்து அரசர்களும் வழிபட்ட கடவுள் மீனாக்ஷி சமேத சுந்தரேஸ்வரர். அதில் ஒரு அரசர் தன்னுடைய உண்மையான பக்தியால் எப்போதும் இடது காலை தூக்கிக்கொண்டு ஆடுகிறீரே? கால் மாற்றி ஆடினால் வலிக்காமல் இருக்குமே என்று மிகவும் பிரார்த்தனை செய்ததன்பேரில் மதுரையில் மட்டும் நடராஜர் வலது காலைத்தூக்கி ஆடுகிறார்.
Rate this:
Share this comment
Cancel
ஸ்ரீகாந்த் - அபுதாபி,இந்தியா
22-அக்-201213:05:00 IST Report Abuse
ஸ்ரீகாந்த்  திருச்சி உத்தமர் கோவிலில் பிரம்மா & சரஸ்வதி இருவருக்கும் ஆலயம் உண்டு. இத்தலம் மும்மூர்த்திகளின் இருப்பிடம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X