இது உங்கள் இடம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2012
00:00

வெங்காயச் சருகு நைட்டிகள்!






எங்கள் ஏரியாவில் இருக்கும் தாய்க்குலங்கள் அணியும் நைட்டிகள், மிக மிக அபாயகரமானவை. பல சில்-அவுட் ரகசியங்களை அப்பட்ட மாக்கும். தள்ளுவண்டி காய்கறி காரனிடம், கால் கிலோ தக்காளி வாங்க வந்து, பிரம்மச்சாரிகளான நாங்கள் படும்பாடு இருக்கே...
இந்த ஆன்ட்டிகளுக்கு, தங்களுக்கு வயதாயிருச்சே என்ற அலட்சியமா, நைட்டியை ஊடுருவி, ஆண்களின் கண்கள் பார்க்கும் என்பது தெரியாத அறியாமையா? பெட்டிகோட், ஜாக்கெட் அணிந்து, அதன்மேல் நைட்டி அணிந்து, மார்பு பகுதியில், துப்பட்டா அணிந்து வருவது, எல்லாருக்கும் நல்லது என, அவர் களுக்கு யார் சொல்வது?
அத்தனையும் அணிந்து வர சோம்பேறித்தனமாக இருந்தால், அவர் கள் வீட்டிற்குள் இருந்தபடி, கணவர்மாரை காய்கறி வாங்க தெருவுக்கு அனுப்பலாமே!
— சீத்ரு நைட்டியால் பாதிக்கப்பட்ட ஆண்களில் ஒருவர்.

வாலிபர்களே... வயோதிகர்களே...






பொதுவாக டாக்டரிடமும், வழக்கறிஞரிடமும் எந்த உண்மைகளையும் மறைக்கக் கூடாது என்பர். அப்போது தான் நோய்க்கான சரியான சிகிச்சையையும், வழக்கில் வெற்றியையும் தர முடியும். சமீபத்தில் ஆண்மைக்குறைவில் பாதிக்கப்பட்டுள்ள
வாலிப - வயோதிக அன்பர்களைக் "குறி' வைத்து, பத்திரிகையில் வெளியாகி இருந்த ஒரு விளம்பரம், என்னை பகீறிட வைத்தது. "நேரில் வர முடியாதவர்கள், மொபைல் போனில் மருத்துவரிடம் விவரங்களைக் கூறி, தபாலில் மருந்துகளைப் பெறலாம்!' என்றது அவ்விளம்பரம்.
மொபைல் போனில் கோளாறைக் கூறி அளிக்கப்படும் சிகிச்சை, எந்த லட்சணத்தில் இருக்கும் என்பது, அம்மருத்துவருக்கே வெளிச்சம். இதே போன்று, வேறொரு விளம்பரத்தில், இதே கோளாறுக்கு, சாதாரண சிகிச்சை, சிறப்பு சிகிச்சை, ஸ்பெஷல் சிகிச்சை என்று குறிப்பிட்டு, தனித்தனி கட்டணங்கள் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தன.
சினிமா தியேட்டர்களிலும், நாடகக் கொட்டகைகளிலும் தான், கொடுக்கும் காசுக்குத் தகுந்தவாறு, "வகுப்பு' ஒதுக்கித் தருவர். ஆண்மைக் குறைவு கோளாறுக்கும், காசுக்கேற்ற மாதிரி சிகிச்சை தருவது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.
ரா.நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர்., நகர்.

இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது செழியன். மாவுக்கேத்த பணியாரம் என்று கேள்விப்பட்டதில்லையா? சாதாரண சிகிச்சைக்கான மருந்தில், "வீரியம்' குறைவாக இருக்கும். சிறப்பு மற்றும் ஸ்பெஷலில் வீரியத்தின் விழுக்காடு கூடுதலாக இருக்கும். தட்ஸ் ஆல்.
பொறுப்பாசிரியர்.

இப்படியும் சமாளிக்கலாமே!






நாங்கள், ஒரு காம்பவுண்டு குடியிருப்பு வீட்டில் வசித்து வருகிறோம். என் நெருங்கிய தோழி, ஒரு நாள், என் வீட்டிற்கு வந்து, என் அம்மாவிடம், "எங்கள் வீட்டிற்கு கெஸ்ட் வந்திருக்காங்க, நீங்க வாங்க...' என்று அழைத்து சென்றாள்.
வீட்டிற்கு வந்த விருந்தினர் சென்றவுடன், அவள் என் அம்மாவுடன் எங்கள் வீட்டிற்கு வந்தாள். நான் அவளிடம், "உங்க வீட்டிற்கு கெஸ்ட் வந்ததற்கு, ஏன் எங்க அம்மாவை வந்து கூப்பிட்ட?' என்றேன்.
அதற்கு அவள், "என் வீட்டில் யாரும் இல்லை; அனைவரும் வெளியே சென்றுள்ளனர். வீட்டிற்கு கெஸ்ட்டாக வந்தவர்கள், என் அண்ணனுடன் கல்லூரியில் படித்த நண்பர்கள். அவர்களிடம், "வீட்டில் யாரும் இல்லை' என்று திருப்பி அனுப்புவது நாகரிகம் இல்லை.
"வீட்டில் தனியாக இருக்கும் நான், அவர்களை வீட்டிற்குள் அழைப்பதற்கும் தயக்கமாக இருந்தது. அதனால் தான், உன் அம்மாவை அழைத்து சென்று, அவர் மூலமாக அவர்களுக்கு வேண்டிய சிற்றுண்டி, காபி கொடுத்து உபசரித்து அனுப்பினேன்.
"இதன் மூலம், தனியாக இருக் கும் என்னிடம், அவர்கள் தவறாக பேச முயன்றாலும் முடியாது. அவர்களை சங்கடப் படுத்தாமல் நல்லபடியாக உபசரிப்பதும் சுலபம். மேலும், அவர்கள் மனமும் மகிழும்...' என்றாள்.
வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், முன்பின் அறிமுகம் இல்லாத ஆண் விருந்தினர் வந்தால், பக்கத்து வீட்டாரின் உதவியை நாடுவது நல்லது. இதன் மூலம், திருட்டு, ஏமாற்று வேலை என, பல ஆபத்துகளை தவிர்க்கலாம்.
என்ன தோழிகளே... நான் சொல்வது சரிதானே?
பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மொக்கையன் - chennai,இந்தியா
25-அக்-201212:30:20 IST Report Abuse
மொக்கையன் கௌசல்யா மாமி கமெண்ட் படிச்சு கெக்கே பேக்கே நு சிரிச்சுட்டேன் ! அவா ஏன் திருந்தொனும் ... நீங்க திருத்திகொங்கோ ! அப்டின்னு சொல்றா...
Rate this:
Share this comment
Cancel
prakash - coimbatore,இந்தியா
24-அக்-201215:17:01 IST Report Abuse
prakash mr ராமன் அவர்களே.... சில வாரங்களுக்கு முன்னர் பேங்க் லோன் சம்மந்தமாக ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் உடை அணிந்து செல்லலாம் (அரை டவுசர்) என்று சொன்னீர்கள். இப்போ வீட்டில் off touser அணிவதை குறை சொல்கிறீர்கள்... நீங்கள் என்னதான் சொல்ல வரீங்க... என்னை பொறுத்தவரை வெளி இடங்களுக்கு செல்லும்போது உடை ஒழுங்காக அணிய வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
fathimaa - ஜூரோங்ஈஸ்ட்,சிங்கப்பூர்
23-அக்-201209:14:27 IST Report Abuse
fathimaa நானும் சில காலம் இந்தியாவில் இருந்தேன்..அங்குதான் இது போன்ற உப்பு சப்பு இல்லாத விஷய்னகளை பெரிது ஆக்கு கிறீர்கள்.எந்த உடை என்பது ஒரு ஆராய்ச்சியா?திரு.ராமன் விலா வாரியாக விவரணை செய்து இருக்கிறார். பெண்களை வெறும் சதைப் பிண்டமாக பார்க்கும் இந்திய ஆண்கள் என்று திருந்துவார்கள்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X