ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2012
00:00

சமீபத்தில் நடந்த, அணி சேரா மாநாட்டில் பங்கேற்ற நம் பிரதமர் மன்மோகன் சிங், உடன் அவரது மனைவி குரு சரண் கவுர் மற்றும் இந்திய பத்திரிகையாளர்கள் பலர் பங்கேற்றனர். அக்குழுவில் நானும் நம் இதழ் சார்பில் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்தது.
இஸ்லாமிய நாடுகளுள் ஒன்று ஈரான். இது, முன்பு பெர்ஷியா என்றழைக்கப்பட்டது. ஈரான் என்பதற்கு, "ஆரியர்களின் பூமி' என்று பொருள். பெட்ரோல் வளம் நிறைந்த ஈரான், உலகிலேயே மிகப் பெரிய நாடுகளில், 18வது நாடாக விளங்குகிறது.
ஈரான், தற்சமயம் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் கவர்ந்து வருகிறது. அதற்கு காரணம், அதன் இயற்கை அழகு மற்றும் சுற்றுலா பயணிகளை சிவப்பு சம்பளம் விரித்து வரவேற்கும், ஈரான் அரசின் ஆர்வமும் தான். கடந்த, 2004ல் மட்டும், இங்கு வந்து சென்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 17 லட்சம். அடுத்தடுத்த ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது; ஏராளமான அன்னிய செலவாணியையும் ஈட்டி தருகிறது. டில்லியிலிருந்து விமானத்தில் நான்கே மணி நேரத்தில் ஈரான் தலைநகரான டெஹ்ரானை அடைந்து விடலாம்.
ஈரான் நாட்டின் எல்லைகளாக, வடக்கே ஆர்மீனியா, அஜர்பைஜான், கஜகஸ்தான், ரஷ்யா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான், தெற்கே பெர்ஷியன் வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவும், மேற்கே ஈராக்கும், வடமேற்கே துருக்கியும் உள்ளன. அந்நாடுகளிலிருந்து அதிக அளவில் அகதிகள் இங்கு வருகின்றனர். உலகிலேயே, அகதிகள் அதிகமுள்ள நாடு இதுதான்.
பெட்ரோல் வளம் கொழிக்கும் ஈரான், கடந்த, 20 ஆண்டுகளில், அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.
கல்வி, விளையாட்டு, சினிமா, அறிவியல் போன்ற துறைகளில் தங்கள் முத்திரையை பதித்து வருகின்றனர். சினிமாவை பொறுத்தவரை, கடந்த, 25 ஆண்டுகளில், உலக அளவில் ஆஸ்கர் விருது உட்பட, நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது.
இங்கு நான்கு, ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அரிசி உணவே பிரதானமானது. அரிசியுடன் ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன், காய்கறி என்று ஏதாவது ஒன்றை கலந்து செய்யப்படும் பிரியாணி வகை உணவுகளையே விரும்பி உண்கின்றனர். உணவுக்கு பின், கெட்டி தயிர் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
டெஹ்ரானில் அமைந்துள்ள கோலிஸ்தான் அரண்மனை, சுற்றுலா பயணிகள் அதிக அளவில் மொய்க்கும் இடமாக உள்ளது. இந்த அரண்மனை முழுக்க முழுக்க, கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதே, இந்த ஈர்ப்புக்கு காரணம்.
இங்குள்ள சுற்றுலா தலங்களை விட, நம் கண்களை அதிகம் கவர்வது, ஈரானியப் பெண்கள் தான்.
பளிச்சென்ற வெள்ளை நிறம் மற்றும் நடுத்தரமான உயரம் கொண்டவர்கள். இங்கே பெண்கள் பொருளீட்டுவதை முக்கியமாக நினைக்கின்றனர்.
ஒரு ஆண், திருமணம் செய்ய விரும்பினால், அவனுக்கு சொந்த வீடும், வேலையும் இருக்க வேண்டும். எனவே, 20களின் கடைசியில் தான் பெண்களுக்கு திருமணமாகிறது. குழந்தை திருமணங்கள் குறைந்து விட்டன.
ஆண்களுக்கு மட்டும், அநியாய சலுகை காட்டப்படுகிறது. ஒரு ஆண், நான்கு பெண்களை கூட திருமணம் செய்யலாம்.செல்வங்களில் புரள்பவர்களும், பெண்களுக்கு செலவு செய்ய முடிந்தவர்களும், மூத்த மனைவியின் அனுமதியின்றி திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணம் முடிந்ததாக ஒரு காகிதத்தில் எழுதி கொடுத்தால் போதும்; உடனே விவாகரத்தாகி விடும்.
பெண்ணுக்கான அங்கீகாரம், இங்கு குறைவு தான்; கட்டுப்பாடுகள் மிக அதிகம். அதுவும், 1979க்கு பின் தான், இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்தன. நகப்பூச்சு அணிந்த கால்கள், கைகள், கழுத்துப்பகுதி ஆகியவை ஆண்கள் பார்வையில் படக்கூடாது. நீளமான பேன்ட், முழங்காலைத் தொடும் கருப்புநிற டாப்ஸ், முன், பின் கழுத்தோடு, தலையை மறைக்கும், "ஹிஜாப்' அணிய வேண்டும்.
வெளியிடங்களில் பெண்கள் சர்வ சாதாரணமாக உலா வந்தாலும், பர்தா அணிவது அவசியம். பெரும்பாலும், ஒரே மாதிரியான கருப்பு நிறம் தான். இதற்கும் காரணமிருக்கிறது... வண்ணங்கள், ஆண்களை ஈர்க்கும் என்பதால், கருப்பு நிறத்திற்கு மட்டுமே அனுமதி. ஈரானியப் பெண்களுக்கு மட்டுமல்ல, அங்கு சுற்றுலா வருபவர்கள், பிறநாட்டு தூதுவர், அரசு அதிகாரிகளாக வருபவர்கள் யாராக இருந்தாலும், பெண்களுக்கு இதே நிலைதான்.
செல்லும் வழியெல்லாம், "ஈரானியப் பெண்களைப் போல, "ஹிஜாப்' அணிவது கட்டாயம்!' என்பது போன்ற அறிவிப்பு பலகைகள், தவறாமல் இடம் பெற்றிருந்தன.
கடை வீதிகளில், பெண்களுக்கான அழகு சமாச்சாரங்கள் குவிந்து கிடக்கின்றன. ஹேர் கிளிப் துவங்கி, பாதம் வரை அழகுபடுத்தும் பொருட்கள் ஏராளமாக இடம்பெற்றுள்ளன.
முகம் தெரிவதற்கு மட்டுமே அனுமதி என்பதால், முகத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். முழுமையாக மேக்-அப் உடனே பெண்களை பார்க்க முடிகிறது. பர்தாவுக்குள் விதவிதமான, "ஸ்டைல்' முடி அலங்காரங்கள் அரங்கேறுகின்றன. அதுபோல, அழகு அறுவை சிகிச்சையும் இங்கு அதிகம். உதடு, மூக்கு, கன்னங்களை சரிசெய்யும் சிகிச்சையை, பெண்கள் அதிக அளவில் செய்து கொள்கின்றனர்.
ஈரான் நாட்டிலிருந்து திரும்பவும் டில்லிக்கு வந்து இறங்கிய போது, வேற்று கிரகத்திற்கு வந்தது போலிருந்தது. தொடை மற்றும் இடையை இறுக்கி பிடிக்கும் ஜீன்ஸ், பனியன், மொழு மொழு கைகள், நகப்பூச்சு பூசிய நீண்ட விரல்கள், செயற்கை சாயத்தில் சிரிக்கும் இதழ்கள், ஷாம்பூ உபயத்தில் காற்றில் பறக்கும் தலைமுடி சகிதமாய், நம்மூர் பெண்கள் சர்வ சுதந்திரமாக உலா வந்தனர்.
சொர்க்கமே என்றாலும், அது நம்ம ஊர் போல ஆகுமா!
***

எம்.எம். ஜெயலெட்சுமி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஹுபைத் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
23-அக்-201212:09:47 IST Report Abuse
ஹுபைத் கட்டுரையாளர் பெண் போல தெரியவில்லை ஒரு ஆணின் மனநிலையில் இருந்து எழுதியுள்ளார் பெண்ணின் தொடை மற்றும் மொழு மொழு கைகள் ஆண்களுக்கு எவ்வளவு கிளர்ச்சியை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. அதை ஒரு பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்கள் மனநிலையில் இருந்து அனைவரையும் பார்க்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
sathik - tirupur,இந்தியா
22-அக்-201214:36:54 IST Report Abuse
sathik ஆண்களுக்கு மட்டும், அநியாய சலுகை காட்டப்படுகிறது. ஒரு ஆண், நான்கு பெண்களை கூட திருமணம் செய்யலாம்.செல்வங்களில் புரள்பவர்களும், பெண்களுக்கு செலவு செய்ய முடிந்தவர்களும், மூத்த மனைவியின் அனுமதியின்றி திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணம் முடிந்ததாக ஒரு காகிதத்தில் எழுதி கொடுத்தால் போதும் உடனே விவாகரத்தாகி விடும்.தயவு செய்து ஒரு மதத்தினரை பற்றி கூறும்போது முழு சட்டங்களையும் அறிந்தபின்பு எழுதவும்.14௦௦ வருடங்களுக்கு முன்பே பெண்களுக்கு சுதந்திரமும், சலுகைகளையும் கொடுத்த மதம் இஸ்லாம். ஆண்களுக்கு 4 திருமணம் அனுமதியே தவிர கட்டாயமில்லை.ஒரே முறையில் மணவிலக்கு சலுகை பெண்களுக்கு மட்டுமே.
Rate this:
Share this comment
Cancel
பாத்திமா - இந்திய,இந்தியா
22-அக்-201212:32:50 IST Report Abuse
பாத்திமா மேடம் ஜெயலக்ஷ்மி, இதெல்லாம் சொல்ற நீங்க அப்டியே ஈரானையும் இந்தியாவையும் கம்பர் பண்ணி எந்த நாட்டுல பெண்களுக்கு அதிகமா கொடும நடக்குதுநு சொலீருங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X