அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2012
00:00

சென்னை எத்திராஜ் கல்லூரியில் இந்த ஆண்டு பி.ஏ., படித்து முடித்தார் நண்பி ஒருவர். இவர், பெரிய தொழில் அதிபரின் மகள். தன் தந்தையின், "பிசினசில்' இறங்குமுன், சில நாட்கள் எங்காவது வெளிநாடுகளில் விடுமுறையை செலவிட்டு வரலாம் என்ற எண்ணத்தில் என்னிடம் ஆலோசனை கேட்டார்.
நான் அமைத்துக் கொடுத்த பயணத் திட்டத்தின்படி, அமெரிக்கா உட்பட பல வெளிநாடுகள் சென்று சென்னை திரும்பியவர், சமீபத்தில் என்னை சந்தித்தார்.
அவரது பயண அனுபவங்கள் குறித்து கூறிக்கொண்டிருந்த போது, "அந்து... நீ சொல்வது 100க்கு 100 உண்மை... என்ன தான் வெளிநாடு என்றாலும்... பட்டனைத் தட்டினால், காபி
வருகிறது என்றாலும், நம்மூரைப் போல ஆகாது...' என்ற என் கருத்தை வலியுறுத்தினார்.
அவரைச் சீண்டும் விதத்திலும், அவரிடமிருந்து மேலும் விஷயங்களை அறிந்து கொள்ளும் ஆவலிலும், "மேடம்... நீங்க வசதி படைச்சவங்க... காரு... பங்களா... தோட்டம்...
எஸ்டேட்... தொழிற்சாலைகள் உள்ளவங்க... நீங்க கூப்பிட்ட குரலுக்கு கைகட்டி சேவகம் செய்ய நூறு பேர் இருக்காங்க... என்னைப் போன்ற சாதாரண ஆளுக, நாலு காசு சம்பாதிக்கணும்... தலைக்கு மேலே ஒரு சின்னக் கூரை வேணும்ன்னு நினைக்கிறவங்க, நம்மூர் சம்பாத்தியத்திலே சாதிச்சிக்க முடியுமா?' என்றேன்.
ஒரு நிமிட நேரம் சிந்தனையில் ஆழ்ந்தவர், "நீ சொல்றதும் உண்மை தான்...' என்றார். பின், வேறு எங்கெங்கோ, "சப்ஜெக்ட்' சென்றது. மீண்டும் சிந்தனை வயப்பட்டவராகி, சிறிது நேரத்திற்குப் பின், "நம்ம நாட்டிலே, "பிரெயின்-டிரெயின்' - நம்ம நாட்டு அறிவாளிங்க, விஞ்ஞானிங்க, டாக்டருங்க, இன்ஜினியருங்க எல்லாம் வெளிநாட்டுக்கு... குறிப்பா, அமெரிக்காவுக்கு ஓடிப் போயிடுறாங்கப்பா!
"இங்கிருந்து, "மேனுவல் லேபர்' - எடுபிடி வேலைகள், கொத்து வேலைகள், டிரைவர்கள், மெக்கானிக்குகள் போன்றோர் வெளிநாடு சென்று சம்பாதிப்பதில் எந்தப் பிரச்னையும் நமக்கு இல்லை!' என்றார்.
"மேனுவல் - லேபர்கள் வெளிநாடு செல்லலாம்; சம்பாதிக்கலாம் என்கிறீர்கள்... நம்மூர் டாக்டர்கள், இன்ஜினியர்கள் எந்த விதத்தில் குறைந்தவர்கள்? அவர்களுக்கு இன்றெல்லாம் இங்கு படிப்பை முடித்த உடனும், அதை அடுத்து வரும் ஐந்து வருடங்களுக்கும் மாத வருமானம் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரத்திற்குள் தானே கிடைக்கிறது... இதுவே, ஒரு டாக்டர் வெளிநாடு சென்று வேலை பார்த்தால், மாதம் பல லட்சம் சம்பாதிக்கலாமே... ராஜ வாழ்க்கை வாழலாமே!'
"உண்மைதான்... அமெரிக்காவில் இருந்து திரும்பும்போது, தூத்துக்குடியை சொந்த ஊராக கொண்ட ஒருவர் என்னுடன் பயணித்தார். அவர் ஒரு டாக்டர். இப்போது அமெரிக்காவில் பணியாற்றுகிறாராம். "எக்காரணம் கொண்டும் இனி நான் இந்தியா வந்து தொழில் செய்யப் போவதில்லை. அமெரிக்காவில் மாதம், பல ஆயிரம் சம்பாதிக்கிறேன்.
"இது, அமெரிக்க வாழ்க்கைத்தரத்தையும், வருமானத்தையும் கணக்கில் கொள்ளும்போது மிகக்குறைந்த வருமானம் தான். இருந்த போதும், என்னால் இங்கு கார் வைத்துக் கொள்ள முடிகிறது... நீண்ட நாள் கடன் பெற்று, மூன்று ஏக்கர் பரப்பளவு நிலத்தில் வீடு வாங்கி விட்டேன். "ஏசி', டபுள் டோர் பிரிட்ஜ், வாஷிங் மிஷின், மைக்ரோவேவ் அவன், 480 வாட் "நாக்கா மிக்சி' ஸ்டிரியோ வித் "சிடி' நாலு ரூமில், நாலு ஆள் உயர, எல்.சி.டி "டிவி' ஆகியவை வாங்கி விட்டேன்... இந்தியாவில் என்னை போன்ற டாக்டர்களால், அதுவும் விழுப்புரம், விருத்தாசலம், தூத்துக்குடி போன்ற ஊர்களில், "பிரைவேட் பிராக்டீஸ்' செய்தால் இவ்வளவு வசதியாக வாழ முடியுமா?' என்று கேட்டார்.
"நான், அவரிடம் அப்போதே, "நறுக்'கென்று நாலு கேள்வி கேட்டிருப்பேன்; ஆனால், இன்னும், 10 மணிநேரம் அவருடன் பயணம் செய்ய வேண்டுமே... கசப்பான ஒரு அனுபவத்துடன் பயணத்தைத் தொடர வேண்டாம் என முடிவு செய்து, பேசாமல் இருந்து விட்டேன்!' என்றார்.
"அந்த நாலு, "நறுக்'கேள்வி என்ன என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?' எனக் கேட்டேன்.
"உன்னிடம் சொல்வதற்கு என்ன? இவர் படித்தது யார் வீட்டுக் காசாம்? சாதாரண மக்கள் முதல், மாத வருமானம் ஈட்டுபவர்களிடம் இருந்து பலவிதத்திலும் வசூலிக்கப்படும் வரி பணத்தில் தானே அரசாங்கம் இவருக்கு பாடம் கற்றுக் கொடுத்து, பட்டமும் அளித்தது. ஆக, இவர் படிப்புக்கு செலவு செய்வது நம் நாட்டின் சாதாரண குடிமகன்... தன் படிப்புக்கு பணம் கொடுத்தவனுக்கு சேவை செய்யாமல், தன் சொந்த நலனில் அக்கறை கொண்டு, வெளிநாடுகளுக்கு இவர் ஓடுவது எந்த விதத்தில் முறையானது?
"இன்று ஐ.ஐ.டி.,யில் படிக்கும் மாணவர்களில், 90 சதவீதம் பேர் வெளிநாடுகளுக்கு, குறிப்பாக, அமெரிக்காவுக்கு ஓடி விடுகின்றனர்; எல்லாம் நம் வரிப்பணத்தில்... இதை எப்படி அனுமதிப்பது?' என நீண்ட, "லெக்சர்' கொடுத்தார்.
"சரி... இதற்கு என்ன தீர்வு சொல்கிறீர்கள்?'
"போதும்பா... தெருவுக்கு நாலு டாக்டர்கள்... மூன்று இன்ஜினியர்கள் என்றாகி விட்டது. போட்டி அதிகமானதால், ஒருத்தருக்கும் சரியான வருமானமும் இல்லாமலாகி விட்டது. அடுத்த ஐந்து வருடங்களுக்கு அரசாங்கத்தின் எல்லா மெடிக்கல் காலேஜுகளையும், இன்ஜினியரிங் காலேஜுகளையும் மூடிட வேண்டியது தான் அல்லது வருடத்திற்கு, ரெண்டு லட்ச ரூபாய் படிப்புக் கட்டணமாக வசூலிக்க வேண்டியதுதான்!' என ஆவேசமாகப் பேசினார்.
பேச்சு மிக சுவாரசியமாகவும், சூடாகவும் நீண்டு கொண்டிருந்தது. கடைசியாக, அவரது, "ஐடியா'வை ஒட்டியே, நானும் ஒரு கருத்து கூறினேன்...
"வருடத்திற்கு இரண்டு லட்சம், ஒரு லட்சம் என வசூலித்தால், செல்வந்தர்களால் மட்டுமே இப்படிப்புகளைப் படிக்க முடியும் என்ற நிலை உருவாகி விடும். பணம் இல்லாத ஒரே காரணத்தால், நன்கு படிக்கக் கூடிய ஏழை - நடுத்தர வர்க்கத்து மாணவர்களுக்கு இழைக்கும் துரோகமாக இது மாறிவிடக் கூடும்.
"எனவே, அரசாங்கச் செலவில் படித்து, வெளிநாடுகளில் வேலைக்குச் செல்லும் டாக்டர்கள், இன்ஜினியர்களிடம், 10 லட்ச ரூபாய்க்கோ அல்லது அவர்கள் படிப்பிற்கு அரசு செலவிட்ட தொகைக்கோ கடன் பத்திரம் பெற்றுக் கொண்ட பின், அவர்களை வெளிநாடுகளில் வேலை செய்ய அனுமதிக்கலாம். குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் கடன் தொகையை திருப்பித் தராவிட்டால், அதற்கு தகுந்தாற்போல் கடும் நடவடிக்கை எடுக்கும் விதியையும் ஏற்படுத்தலாம்!' என்றேன்.
"நடைமுறைக்கு ஒத்துவரக் கூடியது தான்...' எனக் கூறினார் நண்பி. வாசகர்களின் கருத்து என்னவோ?
***

"வரும் டிசம்பர் மாத சங்கீத சீசனில், மியூசிக் அகடமியில் யார், யார் கச்சேரி நடக்க உள்ளது?' என்று குப்பண்ணாவை
விசாரித்துக் கொண்டிருந்தார் லென்ஸ் மாமா!
"அகடமி என்ற சொல் ஆங்கில சொல்லே அல்ல; ஒரு புத்தகத்தில் படித்தேன்...' என்றேன் நான்.
"அப்படியா?' என்றார் குப்ஸ்.
"ஆமாம்... ஏதென்ஸ் நகரத்தின் வெளிப்புறத்தில் ஒரு தோட்டத்தில் மாணவர்களுக்குப் பாடம் போதித்து வந்தார் கிரேக்க நாட்டு அறிஞரான பிளாட்டோ.
"அந்த தோட்டம், "அக்காடமஸ்' என்ற கிரேக்க வீரனுடையது. அவன் பெயரை வைத்து அப்பள்ளிக் கூடத்தை, "அக்காடமி' என்று அழைத்தனர்.
"அக்காடமி என்ற சொல், பிறகு, கல்வியாளர்களை கொண்ட குழுவையும், அவர்கள் கூடுமிடத்தையும் குறிக்கலாயிற்று. பிளாட்டோ, 2300 ஆண்டுகளுக்கு முன் வசித்தாலும், அநேக நாடுகளில் அரசர்களாலும், அரசுகளாலும் அகாடமிகள் தோற்றுவிக்கப்பட்டன.
"பிரான்சில், பிரெஞ்ச் அகாடமியும், இங்கிலாந்தில், ராயல் அகாடமியும் பெயர் பெற்றன. தமிழ் அகடமி என்று தமிழரறிஞர் குழாம் சென்னையில், 50 ஆண்டுகளுக்கு முன் அவினாசிலிங்கம் செட்டியார் தலைமையில் நிறுவப்பட்டது...' என்று எனக்கு தெரிந்த தகவலைக் கூறினேன்.
லென்ஸ் மாமாவின் கேள்விக்குத் தான் விடை கிடைக்கவில்லை.
***

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (35)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giri - nagercoil,இந்தியா
26-அக்-201211:41:23 IST Report Abuse
Giri அருமை மனோ அவர்களே.
Rate this:
Share this comment
Cancel
S.Baalaaji - Kumbakonam,இந்தியா
25-அக்-201223:43:51 IST Report Abuse
S.Baalaaji சொந்த நாட்டுக்கு விஸ்வாசமா இருங்கப்பா
Rate this:
Share this comment
Cancel
சரவணன் - சென்னை,இந்தியா
25-அக்-201218:53:44 IST Report Abuse
சரவணன் திரு. மனோ சொன்னது 100 % உண்மை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X