இதப்படிங்க முதல்ல...
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2012
00:00

தீவிரவாதியாக ஆர்.கே.செல்வமணி!






"செம்பருத்தி' மற்றும் "கேப்டன் பிரபாகரன்' உட்பட பல படங்களை இயக்கிய ஆர்.கே.செல்வமணி, தற்போது, "அகிலா' என்றொரு படத்தை இயக்கியுள்ளார். "மக்கள் சக்தி இல்லாத எந்த சக்தியும் ஜெயிக்காது' என்ற கருத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், ஆர்.கே.செல்வமணியும் ஒரு தீவிரவாதி வேடத்தில் நடித்துள்ளார்.
சினிமா பொன்னையா

ஆண்ட்ரியா பாடிய அசத்தல் பாட்டு!






சிம்பு பாணியில், ஆண்ட்ரியாவும் தான் நடிக்காத படங்களிலும், பின்னணி பாடத் துவங்கி விட்டார். சமீபத்தில், "கர்மா' என்ற படத்துக்காக, எல்.வி.கணேசன் இசையில், ஒரு சோக பாடல் பாடியுள்ளார் அவர். அப்பாடலை தன் ஸ்டைலிஷ் பாணியில் இருந்து, மாறுபட்ட கிராமிய சாயலில் பாடி அசத்தியுள்ளார். பல வாய்க்கால், ஆறாய் பெருகும்!
எலீசா

இயக்குனர்களை கவர்ந்த பிந்து மாதவி!






"கழுகு' பிந்து மாதவியின் கையில், தற்போது நான்கு தமிழ் படங்கள் உள்ளன. அதோடு, அவர் தெலுங்கு பெண்ணாக இருந்த போதும், படித்த தெல்லாம் வேலூரில் என்பதால், தமிழ் நன்றாக பேசுகிறார். இதனால், நேட்டிவிட்டி கதைகளில், படம் பண்ணும் இயக்குனர்களின் கவனம், தற்போது பிந்து மாதவியின் பக்கம் திரும்பி உள்ளது. ஆள் அறிந்து ஆசனம் போடு; பல் அறிந்து பாக்குப் போடு!
எலீசா

மேல்தட்டு ஹீரோக்களை






குறி வைக்கும் லட்”மி மேனன்! "கும்கி' மற்றும் "சுந்தரபாண்டியன்' படங்களில் நடித்துள்ள லட்”மி மேனன், அடுத்து, மேல்தட்டு ஹீரோக்களின் படங்களில் மட்டுமே நடிக்க விரும்புவதாக கூறுகிறார். அதன் காரணமாகத்தான் பாண்டிராஜ் இயக்கும், "கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் சிவ கார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க மறுத்ததாக சொல்லும் அவர், "கிளாமர் கதைகளிலும் நடிக்க மாட்டேன்...' என்று, இப்போது கூறி வருகிறார்.
எலீசா

மீண்டும் ஹீரோவாக விஜய் ஆண்டனி!






"நான்' படத்தில் ஹீரோவாக நடித்த விஜய் ஆண்டனி, அடுத்து, "திருடன்' மற்றும் "சலீம்' என்ற இரண்டு படங்களில் நடிக்கிறார். இதையடுத்து, இன்னும் சிலரிடம் கதை கேட்டிருப் பதாகவும் சொல்லும் அவர், வருடத்துக்கு மூன்று படங்களில் நடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருப்பதாக சொல்கிறார்.
சி.பொ.,

சந்தானம் போடும் கண்டிஷன்!






எந்த படமாக இருந்தாலும் மினிமம், 20 நாட்கள் கால்ஷீட் என்றால் மட்டுமே ஒத்துக் கொள்ளும் சந்தானம், அப்படத்தில் நடிக்கும் கதாநாயகர்கள் ரேஞ்சுக்கு சம்பளமும் கேட்கிறார். அதோடு, ஒரு பாட்டுக்காவது ஆடிப்பாட வேண்டும் என்றும் கண்டிஷனாக பேசுகிறார். இதற்கு இயக்குனர்கள் உடன்படவில்லையென்றால், அடுத்த நிமிடமே அவர்களை, "கட்' பண்ணி விடுகிறார்.
சினிமா பொன்னையா

ஹன்சிகாவுக்காக காத்திருக்கின்றனர்!






கோடம்பாக்கத்தையே காலி செய்ய வேண்டியதுதான் என்று நினைத்த ஹன்சிகாவுக்கு, "ஒரு கல் ஒரு கண்ணாடி' படம் வெற்றியை கொடுத்ததால், இப்போது நிரந்தர சென்னைவாசியாகி விட்டார். மேலும், "வேட்டை மன்னன்' "வாலு' மற்றும் "சிங்கம் - 2' உட்பட பல படங்களில் நடிப்பதால், அவர் கால்ஷீட்டுக்காக பலர் காத்து நிற்கின்றனர். அந்த அளவுக்கு பிசியாகி விட்டார் ஹன்சிகா. அதிர்ஷ்டம் ஆறாய் பெருகுகிறது!
எலீசா

அவ்ளோதான்!

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X