உழைப்பால் உயர்ந்தவர்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2012
00:00

தமிழகத்தின் வருமான வரி துறையின் முதன்மை ஆணையர் எஸ்.செந்தாமரைக் கண்ணனுடன் ஒரு பேட்டி!

"என் வாழ்க்கை நிம்மதியாக உள்ளது. நான் திருப்தியாக இருக்கிறேன். கடவுள் எனக்கு நிறையவே கருணை காட்டுகிறார். அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்...' என்று, பேட்டியை ஆரம்பிக்கிறார், வருமான வரித்துறையில், தமிழகத்தின் வருமானவரி முதன்மை ஆணையர், எஸ்.செந்தாமரைக் கண்ணன்.
தன்னம்பிக்கை, விடா முயற்சி, நேர்மை, புத்திசாலித்தனம், கடின உழைப்பு இவை மட்டும் தான், வாழ்க்கையில் வெற்றி பெற இவரிடமிருந்த ஆயுதங்கள்.
பணபலம், அரசியல் செல்வாக்கு, சிபாரிசு இவை ஏதுமின்றி, சொந்தக் காலில் நின்று, வெற்றி பெற்ற, "அக்மார்க்' சாதனையாளர். "இந்து' ஆங்கில நாளிதழை, தன் இருபதாவது வயதில் தான், முதன் முதலில் பார்த்தவர்.
பணக்கார குடும்பத்தில் பிறந்த வர்கள், நிறைய செல் வாக்கு உள்ளவர்கள் தான், ஐ.ஏ.எஸ்., போன்ற அரசு நிர்வாக அதிகாரிகளாக முடியும் என, பலரும் நினைக்கின்றனர். ஆனால், மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்தாலும், அரசு பள்ளியில் படித்தாலும், சாதிக்க முடியும் என்று நிரூபித்தவர் செந்தாமரைக் கண்ணன். இவரது அனுபவங்கள், இளைஞர்களுக்கு உற்சாக, "டானிக்'காக இருக்கும்.
இவரது வெற்றிக்கதையை அவரே கூறுகிறார்:
வேலூர் மாவட்டத்தில், கல்லூர் ராஜ பாளையம் என்ற, மிகவும் பின் தங்கிய கிராமம் தான் எங்கள் ஊர். விவசாயம் தான் தொழில். எங்கள் கிராமத்தில், மளிகைக் கடை கூட கிடையாது. தீப்பெட்டி வாங்குவதென்றால் கூட, 2 கி.மீ., நடந்து செல்ல வேண்டும். கோவிலிலேயே, அரசு தெருப் பள்ளிக்கூடம் நடைபெறும். ஸ்லேட், நோட், புத்தகம் எல்லாம் கிடையாது. மணலிலே எழுதுவோம். ஒன்று, இரண்டு, மூன்று வகுப்புகள்; ஆனால், ஒரே வாத்தியார். அவர் வந்தால் ஸ்கூல்; வராவிட்டால், "லீவு!'
வாத்தியார், நாட்டு மருந்து எல்லாம் செய்வார். அவர் மருந்து தயாரிக்க, மாணவர்கள் எல்லாரும், ஆளுக்கு ஒரு கூடை சாணி, வறட்டி எல்லாம் கொண்டு வந்து தர வேண்டும். இருப்பது ஒரே கூடம். வாத்தியாரே, எங்களை மூன்று வகுப்பாக பிரித்து உட்கார வைப்பார். பள்ளிக்கு, கட்டணம் எதுவும் இல்லை. இலவசம்!
நான்காம் வகுப்பு முதல், ஏழாம் வகுப்பு வரை, தேவி செட்டிக் குப்பம் என்ற இடத்தில் இருந்த, மற்றொரு அரசு பள்ளியில் படித்தேன். அந்த பள்ளிக்கு ஆசிரியர்களும், மாணவர்களும் சேர்ந்து, ஒரு சின்ன கட்டடமே கட்டினோம். இப்போது சொன்னால், நம்புவது கூட கஷ்டம்.
செங்கல் சூளை ஏற்படுத்தி, ஆசிரியர்கள் செங்கலை தயாரிப்பர். மாணவர்கள், பக்கத்தில் இருந்த மரங்களை வெட்டி, செங்கல் சூளை எரிய, விறகு கொண்டு வந்து கொடுப்போம். நான்கு பக்கம் சுவர், மேலே ஓலை கூரை என நான்கு அறைகள். ஆசிரியர்கள், முண்டாசு கட்டி, வேலை செய்தனர். வித்தியாசமான அனுபவம்.
நாங்கள் படிக்கும் கட்டடத்தை, நாங்களே உருவாக்கினோம். உழைப்பின் உயர்வை நாங்கள் கத்துக்கிட்டோம். பாடத்தில் இல்லை என்றாலும், தமிழ் வாத்தியார் திருப்புகழ் சொல்லிக் கொடுத்தார்.
அகரம் என்ற இடத்திலே உள்ள அரசு பள்ளியில், எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்புகளை படித்தேன். ஒடுகத்தூர் என்ற இடத்தில் உள்ள பள்ளியில், 10, 11 இரு வகுப்புகளும் படித்தேன். வீட்டிலிருந்து, 6 கி.மீ., தூரத்தில் பள்ளி. முதல் நான்கு மாதங்களுக்கு, நடந்தே சென்றேன். பிறகு, அப்பா, 100 ரூபாய்க்கு வாங்கி தந்த பழைய சைக்கிளில், பள்ளிக்கு சென்றேன்.
எங்க அப்பாவுக்கு எட்டு பிள்ளைகள். என்னையும் சேர்த்து ஆறு பையன்கள்; இரண்டு பெண்கள். கஷ்டமான ஜீவனம் தான். அப்பா கே.சீத்தாராமபிள்ளை, எங்கள் கிராமத்தில், கர்ணமாக இருந்தார். பொதுமக்கள் கேட்கும் எல்லா உதவிகளையும், மகிழ்ச்சியாக செய்து கொடுப்பார். யாரிடமும், எதற்கும் ஒரு பைசா வாங்கியதில்லை. ஊரில், நேர்மைக்கு அவரை உதாரணமாக சொல்வர். அது, எங்களுக்கு பெருமையாக இருக்கும்.
ரொம்ப எளிமையான வாழ்க்கை தான். அமாவாசை, தீபாவளி பண்டிகை வந்தால் தான், எங்க அம்மா சரோஜாம்மாள், தோசை சுட்டு தருவார். மற்ற எல்லா நாட்களிலும் பழைய சாதம் தான்!
பள்ளியில் படிக்கும் போதே, தமிழ் மேல் அதிக ஆர்வம் இருந்தது. பாரதியார், பாரதிதாசன், மு.வரதராŒனார், காண்டேகர் போன்ற மேதை களின் படைப்புகளை, பள்ளி நூலகத்திலேயே படித்து, நல்ல விஷயங்களை குறிப்புகள் எடுத்து வைப்பேன்.
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், பள்ளியிலேயே முதல் மதிப்பெண் எடுத்தேன். அப்பாவுக்கு ரொம்ப மகிழ்ச்சி. ஆனாலும், எட்டு பிள்ளைகள் இருக்கும் வீட்டில், அவரால் என்னை கல்லூரிக்கு அனுப்ப முடியவில்லை. அவருக்கு நான் உதவியாக வேலை செய்யலாம் என்ற எண்ணம். அவரை தப்பு சொல்ல முடியாது; அவர் நிலைமை அப்படி!
எங்க கிராமத்திலிருந்து, 20 கி.மீ., தூரத்தில் குடியாத்தம். அங்கே, எங்க மாமா இருந்தார். "மாமா வீட்டில் தங்கி, ஒரு வருடம் பி.யு.சி., படிக்கிறேன் அப்பா...' என்று கேட்டேன். என் ஆர்வத்தை பார்த்து அவருக்கு, மறுக்க இஷ்டமில்லை.
"ஏம்பா... என் பிள்ளை உங்களோட தங்கி, ஒரு வருடம் காலேஜில் படிக்கணும்ன்னு ஆசைப்படறான். ஒரு வருடம் அவனுக்கு சாப்பாடு போட்டு, கூட வைச்சுப்பயா?' என, மாமாவிடம் கேட்டார்.
"சந்தோஷமாக செய்கிறேன்... அவன் இங்கே தங்கி படிக்கட்டும்...' என்று சொன்னார் மாமா. அப்பா அரிசி மூட்டை அனுப்பினார்.
அந்த ஊரில் இருந்த ஒரே கல்லூரியான, திருமகள் மில்ஸ் கல்லூரியில், பி.யு.சி., சேர்ந்தேன். அங்கு படித்து, முதல் வகுப்பிலே தேர்ச்சி பெற்ற, ஒரே மாணவன் என்ற பெருமை எனக்கு கிடைத்தது; எங்கள் பேராசிரியருக்கு ரொம்ப மகிழ்ச்சி.
பி.யு.சி.,யை தொடர்ந்து, பட்டப்படிப்பு படிக்க, வேலூருக்குத் தான் செல்ல வேண்டும். அங்கு பிரபலமான, ஊரிஸ் கல்லூரியில், பி.எஸ்சி., கணிதம் வகுப்பில் சேர விண்ணப்பித்தேன். எனக்கு கணக்கு நன்றாக வரும் என்ற காரணத்தால் மட்டுமல்ல; அதைப் படித்தால், ரசாயனம், பவுதீகம் மாதிரி, "லேபரட்டரி கிளாஸ்' எல்லாம் இருக்காது. லேபிற்கு அவசியமில்லை. "லேபரட்டரி' வகுப்புகளுக்கு என்று, தனியாக கட்டணமும் இருக்காது. மூன்று மாதம் ஒரு முறை, கல்லூரிக்கு கட்ட வேண்டிய கட்டணமும், குறைவாக இருக்கும் என்பது தான் முக்கிய காரணம்.
வேலூரில் உறவு, தெரிந்தவர்கள் என்று யாருமில்லை. எனவே, என் நண்பர் ராமகிருஷ்ணனுடன் சேர்ந்து, ஒரு அறையை வாடகைக்கு எடுத்தேன். காலையிலும், இரவிலும் சப்பாத்தி செய்து சாப்பிடுவோம். புளியந்தளிர், வறுத்த வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், உப்பு எல்லாம் சேர்த்து அரைத்து, ஒரு பொடி போல செய்வோம். சப்பாத்திக்கு, அது தான், "சைடு-டிஷ்!'
கல்லூரிக்கு பக்கத்திலேயே, "லட்சுமி கபே' என்ற ஓட்டல் ஒன்று இருந்தது. அளவு சாப்பாடு, மாதத்திற்கு, 30 டிக்கெட் வாங்கினால், விலையில் சலுகை உண்டு. ராமகிருஷ்ணனும், நானும் ஆளுக்கு, 30 டிக்கெட் வாங்குவோம். அளவு சாப்பாடு என்பதால், அரிசி சாதம் அளவாகத் தான் கொடுப்பர். வயிறு நிரம்ப, கறி, பொறியல் மட்டும், மூன்று முறை கேட்டு வாங்கி சாப்பிடுவோம். மாணவர்கள் என்பதால், பரிமாறுபவர்களும், அன்பாக கவனிப்பர்.
ஓரளவுக்கு வசதி வந்தும் கூட, என் சாப்பாட்டில் சாதம் குறைவாகவும், காய்கறி அதிகமாகவும் இருக்கும். அப்படி பழக்கமாகி விட்டது. நம்முடைய சக்திக்குள்ளே வாழ வேண்டும் என்ற கட்டாயத்தை, எனக்கு நானே ஏற்படுத்தி வாழ்ந்தேன்.
பி.எஸ்சி., வெற்றிகரமாக முதல் வகுப்பில் முடித்துவிட்டு, ஒரு நண்பனின் ஆலோசனையில், சென்னை பச்சையப்பா கல்லூரியில், எம்.எஸ்சி., கணிதம் சேருவதற்கு விண்ணப்பித்தேன்.
என், 20வது வயதில் தான், சென்னை நகருக்கு முதல் முறையாக வந்தேன். எல்லாமே பிரமிப்பாக இருந்தது. பச்சையப்பா கல்லூரியில் பெரிய விடுதி இருந்தாலும், சாப்பாடு, அறை வாடகை எல்லாவற்றையும் நான் எப்படி சமாளிக்க முடியும்?
எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவிலுக்கு அருகே, ஒரு விடுதி இருப்பதும், எஸ்.சி., - எஸ்.டி., அல்லாத ஒரு சில ஏழை மாணவர்களுக்கு அங்கு தங்க அனுமதி கொடுக்கின்றனர் என்றும், நண்பர் மூலம் அறிந்து, அதற்கு விண்ணப் பித்தேன்; இடம் கிடைத்தது. எம்.எஸ்சி., படிக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு, சாப்பாடு, தங்க அறை இரண்டும், இலவசம் என்று ஆனது; எனக்கு பெரிய நிம்மதி.
மற்றொரு சலுகையும், எதிர்பாராமல் கிடைத் தது. புரசைவாக்கம் விடுதியிலிருந்து பச்சையப்பா கல்லூரிக்கு சென்று வர ஆகும், பஸ் கட்டணத்தை, கல்லூரி நிர்வாகம் திருப்பிக் கொடுத்தது. மூன்று மாதத்திற்கு, 180 ரூபாய் கிடைக்கும். அந்த, 180 ரூபாயை மிச்சம் பிடிக்க, காலையிலும், மாலையிலும் கல்லூரிக்கு நடந்தே செல்வேன். 30 நிமிடம் நடக்க வேண்டும். அப்போது அது சிரமமாக இல்லை.
தொடரும்.

எஸ். ரஜத்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruganantham - malaysia,இந்தியா
25-அக்-201212:37:48 IST Report Abuse
Muruganantham உங்களின் தன்னம்பிக்கை மற்றும் உழைப்புக்கு கிடைத்த வெற்றி.
Rate this:
Share this comment
Cancel
srinivasan senthilvel - cuddaloreport,இந்தியா
25-அக்-201210:58:42 IST Report Abuse
srinivasan senthilvel அடுத்த விபரம் எதிர்பார்கிறேன்!!! நன்றி!
Rate this:
Share this comment
Cancel
ராஜா குமார் - சான்பிரான்சிஸ்கோ,யூ.எஸ்.ஏ
25-அக்-201205:49:10 IST Report Abuse
ராஜா குமார் எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவிலுக்கு அருகே, ஒரு விடுதி இருப்பதும், எஸ்.சி., - எஸ்.டி., அல்லாத ஒரு சில ஏழை மாணவர்களுக்கு அங்கு தங்க அனுமதி கொடுக்கின்றனர் என்றும், நண்பர் மூலம் அறிந்து, அதற்கு விண்ணப் பித்தேன் இடம் கிடைத்தது. எம்.எஸ்சி., படிக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு, சாப்பாடு, தங்க அறை இரண்டும், இலவசம் என்று ஆனது எனக்கு பெரிய நிம்மதி. இது என் வாழ்விலும் நடந்தது. புதுகோட்டை மன்னர் கல்லூரி எனக்கு படிப்பு கொடுத்தது. அங்கும் எஸ்.சி., - எஸ்.டி., அல்லாத ஒரு சில ஏழை மாணவர்களுக்கு தங்க அனுமதி கொடுக்கின்றனர். அங்கு MSC படித்து நான் இப்போது உயர்ந்து மற்றவருக்கு முடிந்த உதவி செய்கிறேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X