அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2012
00:00

அன்புள்ள சகோதரிக்கு—
நான் 31 வயது பெண். தனியார் பள்ளியில், நல்ல வருமானத்தில் வேலை பார்த்து வருகிறேன். திருமணமாகி, ஒன்பது வயதில் பெண் குழந்தை உள்ளது. என்னுடையது பெற்றோரின் அனுமதி இல்லாமல் நடந்த, காதல் திருமணம். என் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். திருமணத்தின் போது, என் வீட்டில் இருந்து, 15 பவுன் நகையை எடுத்து சென்று விட்டேன்.
என் அப்பா, ரொம்ப கண்டிப்பானவர். அதாவது, எந்த பெற்றோரும், தன் பிள்ளைகள் வசதியாக, சந்தோஷமாக வாழவேண்டும் என்று தான் நினைப்பர். ஆனால், அப்பா அப்படியே எதிர்ப் பதம். அம்மா, அப்பா சொல் தட்டமாட்டாங்க. எனக்கு, ஒரு அக்கா, தம்பி. (தம்பி இரு ஆண்டுகளுக்கு முன் ஒரு விபத்தில் இறந்து விட்டான்.) அக்காவும், காதல் திருமணம் தான்.
எங்கள் அப்பா, எட்டு ஆண்டுகளாக எங்களிடம் பேசவே இல்லை. ஒரே தெருவில் தான் வீடு. என் அப்பாவை விட்டு, எப்படா வெளியே போவோம் என்று இருந்த எங்களுக்கு, நல்ல துணையென நம்பி, அப்பாவை எதிர்த்து திருமணம் செய் தேன்.
மாமியார் வீட்டில், சம்மதித்தனர். நான்கு ஆண்டுகளுக்கு சந்தோஷமாகத்தான் இருந்தோம். என் கணவர் குடும்பம் ஏழ்மையான குடும்பம் தான். ஆனால், சொந்த வீடு உள்ளது. மாமனார் டெய்லர். நாத்தனார் திருமணமானவள். கல்லூரியில் வேலை பார்க்கிறாள். 2006 வரை, என் கணவர், என் மீதும், என் குழந்தை மீதும் அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந்தார்.
ஆனால், எப்போது பிசினஸ் ஆரம்பித்தாரோ, அப்@பா@த எங்களையும் மறக்க ஆரம்பித்து விட்டார். டெலிபோன் பூத், இரண்டு ஷேர் ஆட்டோ, கிராமத்தில் சினிமா தியேட்டர் என, கடன் வாங்கி ஆரம்பித்தார். என் நகைகளையும் அடகு வைத்து தான் செய்தார்.
திருமணமாகி இரண்டு மாதத்திலேயே, குடும்ப கஷ்டம் தெரிந்து, வேலைக்கு போக ஆரம்பித்தேன். தொழில் ஆரம்பித்து, ஆறு மாதத்திலேயே, என் கணவர் ஷேர் ஆட்டோ ஓட்டி, வலது கை இரண்டாக உடைந்து விட்டது. என் நகைகளை மீட்கவே முடியாத அளவுக்கு கடன் வாங்கி, கையை காப்பாற்றினேன். ஒரு ஆண்டாக சாப்பிடவும் முடியாமல், நடக்கவும் முடியாமல், ரொம்ப கஷ்டப்பட்டார். எனக்கு, வேலையை விட முடியாத சூழ்நிலை. ஏகப்பட்ட கடன். சாப்பாட்டிற்கே வழியில்லை. பிசினஸ் வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஐந்து லட்சம் கடன் தான் மிச்சம். முதலில் என் கணவர், டூ-விலர் கம்பெனியில் தான் வேலை பார்த்தார். விபத்துக்கு பின், ஒரு பைனான்ஸ் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். இடையில், மாமியாருக்கும், என் கணவருக்கும் சண்டை வந்து, ஏழு ஆண்டுகளுக்கு பின், தனிக்குடித்தனம் வந்தோம். நல்ல சம்பளத்தில், என் கணவருக்கு, 2008ல் வேலை கிடைத்தது. அப்போது தான், என் வாழ்க்கை திசை மாறியது.
என் கணவர், யாரோ ஒரு பெண்ணுடன் வண்டியில் அடிக்கடி சுற்றுவதாக கேள்விப் பட்டேன். நம்பவே இல்லை. என் கணவரிடம் சண்டை போட்டும் பயனில்லை. "அந்த பெண், விவாகரத்து ஆன பெண். நல்ல பெண். சொன்னால் நீ தவறாக நினைத்துக் கொள்வாய் என்று தான், உன்னிடம் சொல்லவில்லை. இனிமே பார்க்க மாட்டேன்; பேச மாட்டேன்...' என்று சொன்னார்.
ஆனால், என்னை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அவள் கூட, சுத்த ஆரம்பித்து விட்டார். என் மேலும், என் பிள்ளை மேலும் இருந்த பாசம், படிப்படியாக குறைய ஆரம்பித்து, எங்களுக்குள் தினசரி சண்டை வர ஆரம்பித்தது.
என் அக்காவும், அக்கா கணவரும், அவங்க இரண்டு பேரையும் நேரடியாக பார்த்து, வீட்டில் வந்து கண்டித்து விட்டு போனார்கள்.
என் தம்பி இறந்த பின், நானும், என் அக்காவும் எட்டு ஆண்டுகள் கழித்து, இப்போது தான் அப்பா வீட்டிற்கு போக வர இருக்கிறோம். தம்பி இறந்தது, அப்பா அம்மாவிற்கு பெரிய இழப்பு. இதில், என் பிரச்னை வேறு.
அந்த பெண்ணும், திருமணமாகி அவளுக்கும், பன்னிரெண்டு வய தில் பெண் குழந்தை உள்ளது. வசதியானவள். என் கணவர் தான் அவளுடைய கணவர் என்று சொல்லி, வீடு பிடித்து, வந்து விட்டாள். என் தலையில் இடியே விழுந்த மாதிரி இருந்தது. இருப்பினும், அவள் அம்மாவிடம் பேசினோம். அவளிடமும் சண்டை போட்டு, மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தோம். ஆனால், அவள், "நீங்க எப்படி அவருக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்தீங்களோ, அதே மாதிரி, நானும் அவருக்காக, என் கணவரையும், பிள்ளையும் விட்டுட்டு வந்திருக்கேன். அவர் எவ்வளவு தைரியம் கொடுத்திருந்தால், அவரோடு தனியா வந்திருப்பேன்?' என்று கேட்கிறாள். என் கணவரிடம் கேட்டதுக்கு, "அவள், என்னை நம்பி வந்துட்டா... வேற வழியில்லை' அவளோடு அனுசரித்து போ... என்கிறார்.
மாமியாரும், நாத்தனாரும், "நீ தான் கூட இருந்து திருத்த வேண்டும். புருஷன் கடனை பொண்டாட்டிதான் அடைக்க வேண்டும்...' என்று கூறுகின்றனர். இவர்கள் டார்ச்சர் தாங்க முடியாமல், என் அப்பா வீட்டுக்கு, என் பிள்ளையை கூட்டிட்டு வந்துட்டேன். இப்ப, வேறு ஒரு பள்ளியில் வேலைக்கு சேர்ந்து முன்பை விட அதிகம் சம்பாதிக்கிறேன். ஆனால், மென்டல் டார்ச்சர்.
விவாகரத்து பெற, கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளேன். குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ், 15 பவுன் நகையும், எனக்கு ஜீவனாம்சமும் கேட்டிருக்கேன். வழக்கு இழுத்துக் கொண்டே செல்கிறது.
இப்போது, என் கணவர், தன் கடனை அடைப்பதற்காகவும், என் சம்பாத்தியத்திற்காகவும், என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று, குடும்ப நல கோர்ட்டில் வழக்கு போட்டிருக்கிறார். ஆனால், இன்னமும் அந்த பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறார்.
என் அப்பா டார்ச்சர் தாங்காமல் தான், கல்யாணம் செய்து ஓடிப் போனேன். ஆனால், அந்த நரகத்தில், என் பிள்ளையும் இப்போ கஷ்டப்படுகிறாளேன்னு நினைக்கும் போது, மனசு வலிக்கிறது.
என் அப்பா, என்னை, ஏண்டா வீட்டுல சேர்த்துக் கொண்டோம் என்று கவலைப்படுகிறார். "நாங்கள் இல்லை என்றால், அவன் கூடத் தானே இருந்திருக்க வேண்டும்...' என்று திட்டுகிறார். என் சம்பளத்தை, அவர் கிட்ட கொடுக்க வேண்டும்
என்று நினைக்கிறார். என் கணவருக்காக வாங்கின கடனே, இன்னும் அடைக்க முடியவில்லை. இந்த விஷயம் தெரிந்தால், "அவனுக்காக எவ்வளவு கடன் வாங்கி கொடுத்திருக்க...' என்று, என் மேல கோபப்படுவார்.
என் பிரச்னை தீர, நீங்கள் தான் வழி காட்ட @வண்டும்.
இப்படிக்கு தங்கள்
அன்பு சகோதரி.


அன்பு சகோதரிக்கு,
கண்டிப்பான அப்பாவை தவறாக புரிந்து கொண்டுள்ளாய். வாழ்க்கையை, உன் தந்தையின் கோணத்தில்இருந்து பார். அப்பாவை பற்றிய, தவறான அபிப்ராயம் மாறும். உன் தந்தைக்கு, இரு மகள்கள், ஒரு மகன். இரு மகள்களுமே, அப்பாவை மாப்பிள்ளை பார்க்கவிடாது, காதல் திருமணம் செய்து கொண்டுள்ளீர்கள். ஒற்றை மகனோ, விபத்தில் இறந்து விட்டான். வீட்டில் எந்த மங்கல நிகழ்ச்சியும் பார்க்க, உன் தந்தைக்கு கொடுத்து வைக்கவில்லை. உன் தந்தைக்கு, வாழ்க்கை மகா வெறுமையாய் இருக்கும்.
நீ அமோகமாக வாழ வேண்டும் என, மனதார விரும்பியிருப்பார் உன் தந்தை. அதை வாய் வார்த்தைகளில் வெளிப்படுத்தி இருக்க மாட்டார். உலகத்தில், பல தந்தைகள் பலாப்பழங்களாக வெளியில் முட்களுடன் காட்சியளிக் கின்றனர். எட்டு ஆண்டுகளாக, நீ, உன் தந்தையுடன் பேசாத போதும், கணவனுடன் பிரச்னை எனக்கூறி, அவர் வீட்டு வாசலை மிதித்த போது, அடைக்கலம் தந்தவர் உன் தந்தை.
பொதுவாக, காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப்போகும் பெண்கள், கட்டின புடவையோடு போவார்களே தவிர, பதினைந்து பவுன் நகையை தூக்கிக் கொண்டு செல்ல மாட்டார்கள். நீ சென்றிருக்கிறாய். அதையும் தானே, உன் தந்தை ஜீரணித்திருக்கிறார்.
நீ, உன்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய உன் தந்தைக்கு, எப்படி நன்றியாய் இல்லையோ, அதேபோல் தான், கணவனின் வியாபாரத்திற்கு, நகைகளை கொடுத்து, அவன் கடன்களை அடைக்கும், மனைவிக்கு, உன் கணவன் நன்றியாய் இல்லை.
தனிக் குடித்தனம் போகும் வரை, உன் கணவன் சொக்கத் தங்கமாக இருந்திருக்கிறார். தனியாக வந்தவுடன், உடலுழைப்பு தேவைப்படாத, ஒயிட்காலர் வேலையில் அமர்ந்தவுடன், உன் கணவனின் மனக்குரங்கு, கிளைக்கு கிளை தாவ ஆரம்பித்திருக்கிறது.
எதற்கும் ஒரு மத்தியஸ்தர் வைத்து, உன் கணவனோடு பேசி, அவனது ஆசைநாயகியை, அவளது ஒரிஜினல் கணவனுடன் சேர்த்து வைக்க முயற்சி செய்து பாரேன். இது நடந்தால், உன் கணவன் உன்னோடும், உன் குழந்தையோடும் மீண்டும் வந்து சேர்வான்.
நீ நகையை திரும்ப கேட்டும், ஜீவனாம்சம் கேட்டும், விவாகரத்து கோரியும் வழக்கு போட்டிருப்பது சரிதான். நீதிமன்றத்தில் தாமதமாகவாவது உனக்கு நீதி கிடைக்கும்.
உனக்கும், உன் கணவனுக்கும் விவாகரத்து ஆனால் கூட, கணவனின் ஆசை நாயகிக்கு விவாகரத்து கிடைத்தால் தான், உன் கணவனும், ஆசைநாயகியும் சட்ட ரீதியாய் சேர்ந்து வாழ முடியும்.
விவாகரத்து கிடைத்து விட்டால், நீ, கணவனின் கடனை அடைக்க வேண்டியதில்லை. விவாகரத்துக்கு பின், நீயும், உன் மகளும் பொருளாதார ரீதியாய் சிரமப்படப் போவதில்லை. இருந் தாலும், கணவன் இல்லாமல் நீயும், தகப்பன் இல்லாமல் உன் மகளும், நெருப்பாற்றை நீந்தும் வாழ்க்கை வாழ வேண்டி வரும்.
தொடர்ந்து பெற்றோர் வீட்டிலேயே இரு. தொலைத்தூரக் கல்வி இயக்கம் மூலம், உயர்கல்வி பயில். மகளை நன்கு படிக்க வை.
ஒரு தேவ சந்தர்ப்பமாக விவாகரத்துக்கு பின், உன்னை மறுமணம் செய்து கொள்ள தகுதியான ஆண் கிடைத்தால், நன்கு அலசி ஆராய்ந்து, பெற்றோரின் வழிகாட்டலு டன் சம்மதம் தெரிவி. வாழ்த்துகள்...
என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

***

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (55)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venku - T.N,இந்தியா
29-அக்-201212:20:35 IST Report Abuse
Venku ராமன் - சென்னை ,உங்கள் பதிவு அறிவுபூர்வமாக உள்ளது .
Rate this:
Share this comment
Cancel
Rajah - salmiya,குவைத்
27-அக்-201206:43:54 IST Report Abuse
Rajah உண்மையான அக்கறையோட பதில் சொல்ற மீனவன்,கௌசல்யா அம்மா போல இன்னும் சில பேர் இருக்காங்க அவங்களுக்கு எனது நன்றிகள். ஸ்ரீநிதி ,கடந்த சில வாரங்களாக உங்கள் பிரச்னைகளையும் ,கருத்துகளையும் படித்து வந்து கொண்டு இருக்குறேன் ...அகத்தின் அழகு முகத்தில் மட்டுமல்ல எழுத்திலேயும் தெரியும்குறது என் நம்பிக்கை ....அது உங்க கிட்ட இருக்கு ...இவ்ளோ தெளிவா மத்தவங்களுக்கு உதவி ,அறிவுரை சொல்ற நீங்க ஏங்க பழைய இருட்டை நினைச்சி இப்போ இருக்குற வெளிச்சத்த தொலைக்குறீங்க ...".நடந்தது நடந்தவையாக இருக்கட்டும் நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்" ....சினமா பட வசனமா இருந்தாலும் நல்லது எங்கே இருந்தாலும் எடுத்துக்கணும் ..."வாழ்க்கை என்பது ஒரு வட்டம் அதில் ஜெய்கிறவன் தோற்ப்பான் தோற்கிறவன் ஜெய்ப்பான்....அப்படிங்குற நம்பிக்கைல தப்பு பண்ணினவநேல்லாம் சந்தோசமா இருக்கும் போது நீங்க ஏன் நிமதி இழந்து பழைய துரோகத்தை நினைச்சியே வாழ்த்திட்டு இருக்கணும்? இதுக்கும் பல பேருக்கு சொன்ன மாதிரி மீண்டும் ஒரு விளக்கத்தை கொடுக்கணும்னு நினைக்காம வாழ்ந்து காட்டுங்கள் ப்ளீஸ் .....கூடிய சீக்கிரம் கல்யாண பத்திரிக்கையோட வாங்க ...நிச்சயமா பல பேரோட ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும் ..... best wishes and god bless u ..( ரொம்ப நாளா இந்த பகுதிய நான் படிச்சிட்டு இருக்கேன் கருத்து சில முறை தான் கருத்து எழுதனும்னு தோணும் அது இந்த முறை உங்களுடைய கருத்துகளை படித்ததால் தோணியது நன்றி
Rate this:
Share this comment
Cancel
ஸ்ரீநிதி - Coimbatore,இந்தியா
26-அக்-201212:59:57 IST Report Abuse
ஸ்ரீநிதி அன்புள்ள மீனவன் சார், superb solution for that twin babies . அவங்களை அப்படி handle பண்ணினால் கண்டிப்பா positive result இருக்கும்னு நம்புகிறேன். குழந்தைகள் இருவரும் நார்மலாக கடவுளிடம் வேண்டி கொள்கிறேன். "வாங்க...தாய்மார்களே.......வந்து வரிசையில் நின்னு நல்லா சாத்திட்டுப் போங்க....ஆனா ஒரு கண்டிசன்...வெளிக்காயம் தெரியக்கூடாது....!!!" - very funny . படிச்சதும் கொஞ்சம் சத்தமாகவே சிரிச்சிட்டேன். அந்த பாட்டியை உக்கடம் சென்று (ஆபீஸ்ல eye check - up ன்னு பொய் சொல்லி permission போட்டுட்டு தான்) பழனி பஸ்ல ஏத்திவிட்டு வந்தேன். திரும்பி எப்படி வந்திருப்பாங்கன்னு யோசிச்சு இப்பவரை மனசு கனமா தான் இருக்குங்க. இவங்களை மாதிரி கண்ணில் படுபவர்களுக்கு ஏதாவது பண்ணனும். அவங்க வீட்டில இருக்கறவங்க சப்போர்ட் பண்ணாமல் என்ன பண்ணறதுன்னு தான் புரியல. நன்றி மீனவன் சார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X