வெற்றியின் ரகசியம்! (8)
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2012
00:00

வாழ்க்கையில் முழுமையான வெற்றி சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. அந்த சிலருக்கு மட்டுமே தெரிந்த வெற்றியின் ரகசியம், பலருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானதுதான் இந்த வழிகாட்டித் தொடர்.
பல்வேறு துறைகளில் சாதனையாளர்களை நேரில் சந்தித்து அறிந்த குணநலன்களையும், வாழ்க்கையில் பல அம்சங்களைத் தெளிவுபடுத்திய சிறந்த நூல்களின் சாராம்சங்களையும், ஒன்று சேர்த்து குழைத்ததில் கிடைத்த வண்ணக் கலவையை, சமூக அக்கறையென்னும் தூரிகையால் வரைந்த ஓவியம் தான், "வெற்றியின் ரகசியம்' எனும் இந்தத் தொடர்.

கடின உழைப்பு!






எல்லாருக்கும் ஆசைகளும், கனவுகளும் இருக்கும். ஆனால், சிலரால் மட்டுமே அவற்றை பூர்த்தி செய்ய முடியும். இவர்கள் கனவுலகத்தில் மட்டுமே சஞ்சரிக்காமல், நிஜவாழ்க்கையில் தங்களின் கனவை நனவாக்குவதற்கு அரும்பாடு படுவர். இவர்கள் உழைத்த களைப்பில் உறங்குவர். இவர்கள் ஓய்வு எடுக்க விரும்பினால், கை, காலை நீட்டி படுக்க மாட்டார் கள். கடுமையான வேலையை விட்டுவிட்டு, லகுவான வேலையைக் கையிலெடுப்பர்.
உழைப்பாளிகளுக்கு கடமை, பளுவாகத் தெரியாது. மாறாக, தங்களின் வெற்றிப் பாதையில் ஒரு படிக்கட்டாகத் தெரியும். இவர்கள் வேலை செய்யும் போது, முகத்தில் உற்சாகமும், புத்துணர்ச்சியும் தெரியுமே தவிர, சோர்வும், அலுப்பும், சலிப்பும் தெரியாது. முக்கல், முனங்க<லுக்குப் பதிலாக, நகைச்சுவையும், தெம்பான வார்த்தைகளும் வெளிவரும்.
இவர்களின் பொழுதுபோக்கு கூட, வேலை சம்பந்தப்பட்டதாக இருக்கும். இவர்கள் ஊக்கமும், ஆக்கமும் அளிப்பவர்களைத்தான் நண்பர்களாக வைத்திருப்பர்.
இவர்கள், வேலையைப் பார்த்து, மலைக்க மாட்டார்கள்; மாறாக, தன்னுடைய வேலையில் தனிமுத்திரை பதிக்கத் துடிப்பர்; விடுமுறைக்காகக் காத்திருக்க மாட்டார்கள்; விடுப்புக்காக மேலதிகாரிகளை நச்சரிக்க மாட்டார்கள். அலுவலகத்தை விட்டு எப்போது வெளியேறலாம் என, ஓரக் கண்ணால் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருக்காமல், "இன்னும் நிறைய வேலை இருக்கிறதே... நேரம் சீக்கிரம் முடிந்து விட்டதே...' என்று எண்ணுவர்.
உழைப்பாளிக்கு, கடமை முதல் பட்சமாகவும், உறக்கம், ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு இரண்டாம் பட்சமாகவும் இருக்கும். சில சமயம், பிடித்த சுவையான உணவு கிடைக்காமல் போகலாம். பிடித்த சினிமா, கிரிக்கெட் மற்றும் "டிவி' சீரியலை பார்க்க முடியாமல் போகலாம். இவையெல்லாம் பெரிய விஷயமாக உழைப்பாளிக்குத் தெரியாது. அப்படியே தெரிந்தாலும், தங்களுடைய லட்சியத்தை அடைவதற்காகச் செய்ய வேண்டிய, தவிர்க்க இயலாத தியாகம் என நினைப்பர்.
போர்ட் கார் கம்பெனியின் நிறுவனர் போர்ட், "எந்த அளவுக்குக் கடுமையாக உழைக்கிறீர்களோ,
அந்த அளவுக்கு அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்...' என்றார். உலகிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற, "டேவிட்' என்ற சிலையை வடிவமைத்த மைக்@கல் ஆஞ்சலோவை பாராட்டிய போது, "நான் எந்த அளவுக்கு கடினமாக உழைத்தேன் என்பதை நேரில் பார்த்திருந்தால், இந்த சிலையை அற்புதம் என்று கூற மாட்டீர்கள்...' என்று அடக்கத்துடன் கூறினார்.
வெற்றியாளர்களுக்கு கிடைத்த புகழையும், பணத்தையும், அந்தஸ்தையும் பார்ப்பவர்கள், "எல்லாம் யோகம்' என்று தவறாக எண்ணுகின்றனர். அதற்கு பின்னால் இருக்கும் கடுமையான உழைப்பும், தியாகமும் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. வாத்து, நீரின் மேல் ஒயிலாக தவழ்ந்து போவதைத் தான் பார்த்திருப்போம். ஆனால், நீருக்கடியில் மூழ்கிப் பார்த்தால் தான், அது மிதப்பதற்கு, தன் கால்களை ஓயாமல் ஆட்டிக் கொண்டிருப்பது தெரியும்.
நாம் பொதுவாக தெரிந்த இடம், தெரிந்த வேலை மற்றும் தெரிந்த மனிதர்களை பிரிவதற்குத் தயங்குவோம். நமக்கு வசதியாக இருப்பதால், அந்த இடத்தை விட்டுப் பிரிய மனம் இருக்காது. ஆனால், நம் வளர்ச்சிக்கு சில நேரங்களில், அதைவிட்டு வெளியேறி, புதிய இடம், புதிய வேலை, புதிய சூழ்நிலை மற்றும் புதிய மனிதர்களிடம் பழக வேண்டிய நிர்பந்தம் வரும். அப்போது வரும் சோதனையை நாம் எதிர்கொள்ளத் தயங்கக் கூடாது.
செக்குமாடு மாதிரி, ஒரே இடத்தில் சுற்றிச் சுற்றி வந்தால், முன்னுக்கு வர இயலாது. நெல் நாற்றங் காலிலேயே இருந்தால், செடியாக வளர்ந்து நெற்கதிர் ஆகாது.
எந்த ஆபத்தும் இல்லாமல், வசதியாக இருக்கலாம் என்பதற்காக, ஒரு மாலுமி, தன் கப்பலை துறைமுகத்திலேயே நிறுத்தி வைத்தால், கப்பலினால் என்ன பயன்?
ஆசையை மட்டும் வைத்து, எந்த முயற்சியும் எடுக்காமல் இருப்பவர்களுக்காக, ரவீந்திரநாத் தாகூர் சொன்னார், "கடல் தண்ணீரை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தால், நாம் கடலைக் கடந்து விட முடியாது!'
வெற்றி பெறுவதற்கு, 10 சதவீதம் உற்சாகமும், 90 சதவீதம் உழைப்பும் தேவை என்கின்றனர் சாதனையாளர்கள். கடின உழைப்பு என்றவுடன் ஓய்வு, உறக்கம் இல்லாத உடல் உழைப்பு என்று நினைக்கத் தோன்றும். ஆனால், வெற்றியாளர்களின் உழைப்பில், புத்திசாலித்தனம் தான் மேலோங்கி இருக்கும். தெளிவான திட்டமும், நோக்கமும் இருக்கும். நுட்பமான வியூகம் இருக்கும். திறமையும், சாமர்த்தியமும் இருக்கும். எடுத்த வேலையை கொடுத்த நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற உந்துதல் இருக்கும். செய்யும் வேலையில் உயர்தரம் இருக்கும்.
மூட்டை தூக்கும் தொழிலாளி மற்றும் உக்கிர வெயிலில், நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்கும் விவசாயியின் உழைப்பு, பாராட்டுக்குரியது தான். ஆனால், "ஏசி' காரில் சென்று, "ஏசி' அறையில் அமர்ந்து, உடை கசங்காமல் வேலை பார்க்கும் ஒரு கம்பெனியின் மேனேஜிங் டைரக்டருக்கு தான் அதிக சம்பளம் கிடைக்கும். அதற்குக் காரணம், வெறும் உடல் உழைப்பு மட்டுமல்ல; முந்தைய பத்தியில் குறிப்பிட்ட தனிச் சிறப்புகளுடன் கூடிய உழைப்பு இருப்பதால் தான்.
கடின உழைப்பின் அர்த்தம், இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
தொடரும்.

சி. அருண் பரத், கூடுதல் ஆணையர், வருமான வரித்துறை, மும்பை

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரவிச்சந்திரன் - டொரோண்டோ,கனடா
26-அக்-201201:11:26 IST Report Abuse
ரவிச்சந்திரன் மிகமிகத் தெளிவாக அனைவருக்கும் புரியும் படி எழுதியிருக்கிறீர்கள். இதைப்படித்து அதன் கருத்துக்களை பின்பற்ற வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். மிக்க நன்றி
Rate this:
Share this comment
Cancel
ETHIRAJ - kanchipuram,இந்தியா
25-அக்-201211:27:16 IST Report Abuse
ETHIRAJ very nice
Rate this:
Share this comment
Cancel
srinivasan senthilvel - cuddaloreport,இந்தியா
25-அக்-201211:05:52 IST Report Abuse
srinivasan senthilvel அருமையான பதிவு! நன்றி ஐயா!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X