திண்ணை!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2012
00:00

திண்ணைக்கு வந்த குப்பண்ணா, "என்ன, ஒரே பிள்ளையார் எறும்பாக இருக்கிறதே...' என்றபடியே மேல் துண்டால் தூசு தட்டிவிட்டு அமர்ந்தார். "என்னதான் தட்டினாலும் சற்று நேரத்தில் எறும்புக் கூட்டம் வந்து விடுகிறதே...' என்றார், அங்கலாய்ப்புடன் அருகிலிருந்தவர்.
குப்பண்ணா சொன்னார்: எறும்புகளால் தனித்தனியே வாழ முடியாது. அவை ஆயிரக்கணக்கில் ஒன்று சேர்ந்து ஒரே சமூகமாக வசிக்கின்றன. சாரை சாரையாகச் சென்று இரை தேடுகின்றன. தேடிய உணவை தமக்குள் பங்கிட்டு சாப்பிடுகின்றன. ஒரு எறும்பு சமூகத்தில், மூன்று வகை எறும்புகள் உண்டு. ராணி எறும்பு, ஆண் எறும்பு, வேலைக்கார எறும்பு. ஒரு கூட்டில் ஒரு ராணி எறும்புதான் இருக்கும். வேலைக்கார எறும்புகளெல்லாம் பெண் எறும்புகளே. ஆனால், அவை முட்டையிடாது. ராணி மட்டுமே முட்டையிடும். மற்ற எறும்புகளை விட, ராணி எறும்பு உருவத்தில் பெரியது. வேலைக்கார எறும்புகள் தான் அதன் சமூகத்தில் எல்லா வேலைகளையும் பகிர்ந்து செய்கின்றன. சில இரை தேடும்; சில கூட்டில் இருந்து ராணியையும், குஞ்சுகளையும் பாதுகாக்கும். மற்றும் சில, எதிரிகள் உள்ளே நுழையாதபடி கூட்டைப் பாதுகாக்கும்.
வேலைக்கார எறும்புக்கு இரண்டு இரைப்பைகள் உண்டு. ஒரு பையில் தனக்குத் தேவையான உணவை நிறைத்து வைத்துக் கொள்கிறது. மற்றொரு பையில், உணவை நிரப்பி வந்து குஞ்சுகளுக்கு ஊட்டுகிறது. எறும்புகளுக்குத் தாடைகள் உண்டு. சிற்றெறும்பு, நெருப்பெறும்பு, கட்டெறும்பு, நம்மை, தாடைகளால் கடிக்கின்றன. பிள்ளையார் எறும்பு எனப்படும் கறுப்பு எறும்பு மட்டும் கடிக்காது என்றார் குப்பண்ணா.
***

நாதஸ்வர கலைஞர் திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கதாநாயகனாக நடிக்க, பாரதிதாசன் வசனத்தில் உருவான படம்,
"கவி காளமேகம்.' இப்படத்திற்கு பாரதிதாசன் தான் திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுத வேண்டும் என்று நாங்கள் அணுகியபோது, முதலில் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. "சினிமாத் துறைக்குப் போய் புராணப் படம் எழுதித்தான் சம்பாதிக்க வேண்டுமா?' என்று கேட்டார். "உங்கள் திறமை வெளிப்பட வேண்டும்' என்று வற்புறுத்திக் கூட்டி வந்தோம். பாரதிதாசனுக்கும், 3,000 ரூபாய் கொடுக்கப்பட்டது. திரைப்பட எழுத்தாளருக்கு அந்தக் காலத்தில் அது பெரிய தொகை.
படப்பிடிப்பின் போது, டி.என்.ராஜரத்தினம் குடித்துவிட்டு வருவார். ஒரு நாள் அதிக போதையோடு வந்து படுத்து விட்டார். அவரை எழுப்ப முடியவில்லை. படப்பிடிப்பு தடைப்பட்டது. "பத்துக் குடம் தண்ணீரை தலையில் ஊற்றுங்கள்' என்றார் பாரதிதாசன், அப்படியே செய்து, துவட்டி, போதையைத் தெளிய வைத்தோம்.
— மு.பொன்னகரம் ரஞ்சையா, ஒரு கட்டுரையில்...

ஒரு இடத்தில், கிளிகளை ஒருவன் ஏலம் போட்டு கொண்டிருந்தான். பேசும் கிளிகள் அவை. எல்லாக் கிளிகளும் விற்றுக் கொண்டிருந்தன. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவனுக்கு, ஒரு பேசுங்கிளியை வாங்க விருப்பம். கடைசியில் ஒரு கிளிதான் மிச்சம்.
"யாராவது ஏலம் எடுக்கிறீர்களா?' என்று கேட்டான் கிளி விற்பவன். வந்தவன் ஏலம் கேட்க துவங்கினான். இவன் கேட்க கேட்க ஏலத் தொகை கூடிக்கொண்டே போனது. ஏலம் முடிந்து கிளியைக் கையில் வாங்கினான். அப்போது தான் அவனுக்கு சந்தேகம் வந்தது. "இந்தக் கிளி நல்லா பேசுமா?' என்று கேட்டான். ஏலக்காரன் சொன்னான்; நல்லா பேசுமாவது? இவ்வளவு நேரம் உங்களுடன் போட்டியா ஏலத் தொகையைக் கூட்டினது இந்தக் கிளிதான்!' என்றான்.
***

கல்கி வார இதழில் ராமாயண காவியத்தை, "சக்கரவர்த்தியின் திருமகன்' என்ற தலைப்பில் எழுதினார் ராஜாஜி. ஆனால், இந்தத் தொடருக்கு மறுப்பாக, "சக்கரவர்த்தியின் திருமகன்' என்ற தலைப்பில் மு.கருணாநிதி முரசொலியில் ஒரு தொடர் எழுதினார். ராஜாஜியைக் கிண்டல் செய்யும் விதமாக, "மூக்காஜி' என்ற பெயரில் இந்தத் தொடரை எழுதினார் கருணாநிதி.
***

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கௌதமன் - bangalore,இந்தியா
26-அக்-201211:50:22 IST Report Abuse
கௌதமன் இராஜாஜி எழுதியது சக்ரவர்த்தித் திருமகன்.
Rate this:
Share this comment
Cancel
n.ramkumar - pollachi  ( Posted via: Dinamalar Android App )
25-அக்-201211:55:32 IST Report Abuse
n.ramkumar நன்றி நல்ல தகவல்
Rate this:
Share this comment
Cancel
gs - KHARTOUM,சூடான்
22-அக்-201219:20:27 IST Report Abuse
gs சோனியா இப்பவும் மு.கா ஜி என்று தான் கூப்பிடுகிறார். பாவம் இப்போ மு.க நிலைமை, லஞ்ச ஊழல் திருமகள் என்று கனிமொழி பத்தி எழுதும் படி ஆகிவிட்டது. இந்து என்றால் திருடன் என்றார். இப்போ தமிழன், தி.மு.க காரன் என்றால் சுருட்டறவன், திருடன் என்று உலகம் பூரா சொல்லறமாதிரி ஆகிவிட்டது..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X