பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2012
00:00

பேஸ்புக்கின் சாதனை பிரம்மிக்கத்தக்கது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. நீங்கள் கொடுத்த தகவல்கள் மட்டுமின்றி, இறுதியாக, கோடிப் பேரைச் சேர்த்து வைத்த புண்ணியம் என்று கட்டுரையை முடித்தது முத்தாய்ப்பாக இருந்தது.
ஆ. சீனிவாசன், சென்னை.

உலகம் முழுவதையும் பேஸ்புக்கில் இணைப்போம் என்று ஸூக்கர் பெர்க் கூறியது நிச்சயம் ஒருநாளில் நடைபெறும். பேஸ்புக் அனைவருக்கும் முகவரி தரும் கிராமமாக அமையப் போகிறது.
இரா. தங்கச் செல்வன், பொள்ளாச்சி.

ரெஸ்டோர் பாய்ண்ட் பயன்படுத்துவது என்றால், எந்த விதமான அதிர்ச்சிக்கும் தயாராக இருக்க வேண்டும்; அதைத் தொடாமல் இருப்பதே நல்லது என்று என் தோழிகள் என்னை அதைரியப்படுத்தியே வந்தனர். உங்கள் கட்டுரை இதன் பயன்பாட்டினைக் காட்டியதுடன், யாவரும் எளிதாகப் பயன்படுத்தலாம் என்பதையும் தெளிவு படுத்தியது. நன்றி.
சி.ஆ. சந்தனா பாரதி, அருப்புக் கோட்டை.

நீங்கள் காட்டியது சின்ன வேடிக்கை அல்ல; அதிர்ச்சி தந்த அருமையான விளையாட்டும் ஆகும். என் வீட்டு சிறுவர்கள், மிகக் கவனமாக நீங்கள் தந்த வரியினை டைப் செய்து, சேவ் செய்து, அவ்வப்போது கம்ப்யூட்டர் பூச்சாண்டி காட்டுகின்றனர். இது போன்ற விஷயங்களையும் தரவும். சிறுவர்களுக்கு கம்ப்யூட்டர் பால் கவனம் செல்லும்.
எஸ். கந்தவேல், திண்டிவனம்.

மொபைல் போன் குறித்த பல தொழில் நுட்பச் சொற்களை மொத்தமாகப் பட்டியலிட்டது, இந்த தொழில் நுட்பத்தின் அனைத்து பிரிவுகளையும் கற்றுக் கொண்ட பெருமையைத் தருகிறது. இது போல அனைத்து தகவல் தொழில் நுட்பம், மொபைல் போன் உட்பட, பற்றிய விளக்கங்களைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மா.தென்றல் ராணி, கோவை.

எத்தனையோ தொழில் நுட்பச் சொற்களின் விரிவாக்கம் தெரியாமல் இருந்த எங்களுக்கு, வாய்ப்பாடு போல வரிசையாக விளக்கம் அளித்தது நல்ல பாடக் கட்டுரை போல உள்ளது. இதே போல கம்ப்யூட்டரின் பல பிரிவுகளுக்கும் பிரிவு வாரியாக மொத்தமாக கலைச் சொற்களுக்கான விளக்கம் தரவும்.
க. நீலமேகம், திருச்சி.

டேபிள் செல்களில் பேனா போல ஒன்றைத் தேர்ந்தெடுத்து கோடு போட்டு அமைப்பதும், ரப்பர் போல ஒன்று எடுத்து அழித்து, செல்களை இணைப்பதுவும் புதுமையாக இருந்தது. இஷ்டப்படி செல் அமைக்க என்று நீங்கள் கோடி காட்டிய பின்னரே, அது சார்ந்த முழுமையான தகவல்களை அறிந்து கொண்டேன்.
மா. குருசாமி, காரைக்குடி.

‘R1C1’குறியீடு எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் ஒரு அருமையான ஏற்பாடு. எண்கள் எழுத்தால் சொல்வதைக் காட்டிலும், ரோ மற்றும் காலம் குறித்து அமைப்பது, செல்களின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் காட்டுகிறது. தகவலுக்கு நன்றி.
தா. பாண்டியன், மேலூர்.

புளுடூத் தொழில் நுட்பத்தில் கூட சில வேறுபாடுகளும் வகைகளும் இருப்பது வியப்பை அளிக்கிறது. இதில் வேகமான செயல்பாடு நடைமுறைக்கு வருகையில், நிச்சயம் தகவல் தொழில் நுட்பம் கூடுதல் பயன்களைத் தரும் வகையில் அமையும்.
ரா. சித்தன், திருவண்ணாமலை.

வேர்ட் பிரிண்ட் தகவல்கள் ஒவ்வொன்றும் ஒரு வகையில் பிரயோஜனமாய் உள்ளது. இப்படியே மற்ற புரோகிராம்களையும் கவர் செய்திடவும்.
தெ. காமராஜ், சிவகாசி.

நூறு கோடி பேர் ஒரு சமுதாய இணையதளத்தில் உள்ளனர் என்பது உண்மையிலேயே வியக்கத்தக்க செய்தியாகும். லாப நோக்கமின்றி இயங்கும் இந்த தளத்தினால் பயன் பெற்றவர்கள் பல லட்சம் இருப்பார்கள். இது போன்ற டிஜிட்டல் விஷயங்கள் தான் உலகின்போக்கை மாற்றி அமைக்கின்றன.
பேரா. சி. முத்துப் பாண்டி, மதுரை.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X