Wizard என்பது கம்ப்யூட்டரில் உங்களை வழிகாட்டும் ஒரு பொதுவான வழிகாட்டி. இது அனைத்து புரோகிராம்களிலும் கிடைக்கும். வரிசையாக கேள்வி கேட்டு அல்லது ஆப்ஷன்ஸ் கொடுத்து அதில் உங்களுக்கான ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுக்கச் சொல்லி வழி நடத்திச் செல்லும். சாதாரண விஸார்ட் என்றால் வேர்டில் ஒரு புதிய டாகுமெண்ட்டை திறக்கையில் உங்களிடம் கேள்வி கேட்டு ஆப்ஷன்ஸ் தரும் கட்டமும் ஒரு விஸார்ட் தான். சாப்ட்வேர் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில் உங்களை வழி நடத்துவதும் விஸார்ட் தான். ஒரு டேட்டா பேஸ் பைல் உருவாக்குகையில் கிடைப்பதும் விஸார்ட் தான்.
Download: கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம். இருப்பினும் இன்டர்நெட் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கம்ப்யூட்டரிலிருந்து ஒரு பைல் இறக்கிப் பதியப்படுவதனையே இது பெரும்பாலும் குறிக்கிறது.
Taskbar: (டாஸ்க் பார்) விண்டோஸ் இயக்கத்தில் மானிட்டர் திரையில் கீழாக இயங்கும் நீள் கட்டம். இதில் ஸ்டார்ட் மெனு, விரைவாக அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க ஐகான்கள் அடங்கிய தொகுப்பு, இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் பைல்களுக்கான கட்டங்கள் மற்றும் கடிகாரம், பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்கள் ஆகியவை இருக்கும். இவற்றைத் தேவைப்படும்போது கிளிக் செய்து பெறலாம்.