சென்ற இரண்டாவது வாரத்தில், வழக்கம் போல மைக்ரோசாப்ட் நிறுவனம், தன்னுடைய பேட்ச் பைலை வெளியிட்டது. வேர்ட், ஆபீஸ், விண்டோஸ், ஷேர் பாய்ண்ட் சர்வர், எஸ்.க்யூ.எல் சர்வர் மற்றும் தன்னுடைய பல புரோகிராம்களில் உள்ள பலவீனமான தவறுகளைச் சரி செய்திடும் பேட்ச் பைல்களை வெளியிட்டது. குறிப்பாக வேர்ட் புரோகிராமிற்கான திருத்தம் வேர்ட் 2003 லிருந்து இன்றைய வேர்ட் புரோகிராம் வரை தேவைப்பட்ட ஒன்றாகும். MS12064 என்ற பெயரில் வேர்ட் புரோகிராமிற்கான பேட்ச் பைல் வெளியிடப்பட்டது. இதே போல மற்றவற்றிற்கும் பேட்ச் பைல்கள் வெளியாயின.