கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 அக்
2012
00:00

கேள்வி: என் கம்ப்யூட்டர் இணைய இணைப்பில் இருக்கையில், என்னுடைய இணைய இணைப்பு முகவரி (ஐ.பி. அட்ரஸ்) என்ன என்பதனை எப்படி அறிந்து கொள்ளலாம்? மேலும் அது சார்ந்த கூடுதல் தகவல்கள் கிடைக்குமா?
ஆர். பிரகாஷ், மதுரை.
பதில்:
கூடுதல் தகவல்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று குறிப்பிடவில்லையே! இதோ உங்கள் தேவைகள் குறித்து தகவல் தரும் இணைய தளம் ஒன்றைத் தருகிறேன். இதில் கூடுதலான தகவல்களும் கிடைக்கின்றன. http://www.whatismyipaddress.com என்ற முகவரியில் உள்ள தளம் செல்லுங்கள். உடன் உங்களின் கம்ப்யூட்டரின் இணைய முகவரி மட்டுமின்றி, எந்த நிறுவனம் உங்களுக்கு, எந்த வகை இணைப்பு வழங்கியுள்ளது என்றும், இருக்கும் நகரின் பெயர், அதன் பூகோள இருப்பிடம் ஆகியவையும் கீழ்க்கண்டபடி காட்டப்படும்.
Hostname, ISP (இணைய இணைப்பு வழங்கும் நிறுவனத்தின் பெயர்) எவ்வகை இணைப்பு ஆகியவை குறித்த தகவல்கள் கிடைக்கும். இவற்றின் கீழாக, உங்கள் கம்ப்யூட்டர் இருக்கும் ஊர் காட்டும் மேப் ஒன்றும் இருக்கும்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7, 64 பிட் அல்ட்டிமேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. நேற்று முதல் என் டெஸ்க்டாப் திரையில், இரண்டு ஷார்ட்கட் ஐகான்கள் காட்டப்படுகின்றன. இவை முன்பு இல்லை. நான் இப்போது அமைக்கவும் இல்லை. இந்த இரண்டையும் அழிக்க முற்படுகையில், விண்டோஸ் சிஸ்டத்திற்கு பிரச்னை ஏற்படும் என எச்சரிக்கை கிடைக்கிறது. இவை விண்டோஸ் சிஸ்டம் பைல்கள் எனத் தெரிகிறது. ஆனால் எப்படி வந்தது என்று தெரியவில்லை. என்ன செய்யலாம்? இவற்றை அழித்தால், சிஸ்டம் இயங்குவது தடை படுமா?
டி.துஷ்யந்தன், சென்னை.
பதில்:
நல்ல கேள்வி. பொதுவாக சிஸ்டம் பைல்கள், பாதுகாப்பாக, மறைக்கப்பட்ட போல்டர்களில் இருக்கும். இவற்றைப் பார்க்க முயற்சிக்கும்போது, எச்சரிக்கை கொடுத்துப் பின் நாம் விரும்பினால், காட்டப்படும். அது போன்ற பைல்களே இவை. இவை இது போல் தோன்றாமல் இருக்க கீழ்க்குறித்தபடி செட் செய்திடவும். முதலில் Start>Computer எனச் செல்லவும். பின்னர் Alt கீயினை அழுத்திக் கொண்டு T கீயை அழுத்தவும். பின்னர், டூல்ஸ் மெனுவில் Folder Options என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், Folder Options விண்டோவில் View டேப் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் விண்டோவில், பின்னர், கீழாகச் சென்று, “Hide protected operating system files (Recommended)” என்று இருப்பதனைக் காணவும். இதில் ஒரு செக் மார்க் அடையாளத்தை அமைத்து, Apply மற்றும் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி desktop.ini மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள் திரையில் தோன்றாது.

கேள்வி: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் பார்முலா அமைக்கும்போது சில வேளைகளில் மட்டும் #Name என வருகிறது. இது ஏன்? இதில் என்ன பெயரை அமைக்க வேண்டும்? குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டும் ஏன் கிடைக்கிறது?
சி. கனகராஜ், திண்டுக்கல்.
பதில்:
எக்ஸெல் அறிந்து கொள்ள முடியாத ஒன்றை நீங்கள் பார்முலாவில் அமைத்திருக்கிறீர்கள். இங்கு அது ஒருவரின் பெயரைக் கேட்கவில்லை. நீங்கள் கொடுத்த பார்முலாவில் உள்ள சொல் எக்ஸெல் தொகுப்பிற்கு புரியவில்லை. எனவே இப்படி ஒன்றைத் தருகிறது. இது ஏதாவது ஒரு பங்சனாகக் கூட இருக்கலாம். எடுத்துக்காட்டாக SUM என்பதற்கு டைப்பிங் பிழையாக SAM என நீங்கள் அமைத்திருக்கலாம். இது ஒரு சிறிய பார்முலாவில் உள்ளது என்றால் உடனே நீங்களே அந்த பார்முலாவினை மீண்டும் பார்த்து சரி செய்துவிடலாம். ஆனால் நீளமான பார்முலா என்றால் முழுதாக அனைத்தையும் பார்த்து எதில் பிழை உள்ளது என்று அறிய நேரம் ஆகும், அல்லவா. எங்கு பிழை உள்ளது என அறிய எக்ஸெல் ஒரு மறைமுக உதவியைத் தருகிறது. இதற்கு உங்கள் பார்முலா முழுவதையும் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களில் டைப் செய்திடுங்கள். பொதுவாக இது போல நீங்கள் சிறிய எழுத்துக்களில் டைப் செய்து என்டர் தட்டியவுடன் எக்ஸெல் அவை அனைத்தையும் கேப்பிடல் எழுத்துக்களில் மாற்றும். இங்கு தான் நமக்கு உதவி கிடைக்கிறது. எக்ஸெல் தான் அறிந்து கொள்ளும் பார்முலாவின் பகுதியினை மட்டும் அவ்வாறு கேப்பிடல் எழுத்துக்களில் மாற்றும். எதில் பிழை இருந்து, தன்னால் அறிய முடியவில்லையோ அந்த சொற்களை மாற்றாமல் விட்டுவிடும். எனவே எதில் பிழை உள்ளது என்று நமக்குத் தெரிந்துவிடும். நாம் உடனே அதனைச் சரியாக அமைத்து விடலாம். இதில் இன்னொரு விஷயத்தை கவனத்தில் கொள்ளவும். டேட்டாக்கள் குறித்த சொற்கள், அவற்றின் ரேஞ்ச் காட்டும் இடங்களை எக்ஸெல் கேப்பிடல் எழுத்துக்களாக மாற்றாது. எனவே அவற்றில் பிழை இருந்தால் நாமாகத் தான் கண்டறிய வேண்டும்.

கேள்வி: கேஷ் மெமரிக்கும், ராம் மெமரிக்கும் என்ன வேறுபாடு? எது அதிக முக்கியத்துவம் கொண்டது?
என்.சுகந்தப் பிரியா, காரைக்கல்.
பதில்
: நீங்கள் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், பயன்படுத்தப்படும் பைல்கள் எப்போதும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் கண்காணிப்பில் இருக்கும். குறிப்பிட்ட பைல்கள் அல்லது புரோகிராம்களை அடிக்கடி பயன்படுத்துகையில் அத்தகைய செயல்பாட்டினைப் புரிந்து கொண்டு அவற்றைத் தற்காலிகமாகச் சேமித்து வைக்கிறது. இந்த சேமிப்பே கேஷ் மெமரியாகும். இது ராம் மெமரியிலோ அல்லது ஹார்ட் டிஸ்க்கில் இதற்கென ஒதுக்கப்படும் இடத்திலோ எழுதப்படும். சரி, இதனால் உங்களுக்கு என்ன பயன் என்று கேட்கிறீர்களா? கேஷ் மெமரியில் இவ்வாறு சேமித்து வைக்கப்படும் பைல்களை கம்ப்யூட்டர் இயக்குபவர் எளிதாகவும் வேகமாகவும் எடுத்துப் பயன்படுத்த முடிகிறது. ஹார்ட் டிஸ்க்கின் டிரைவைத் தேடி ஒவ்வொரு முறையும் சுழல வேண்டியதில்லை. இதனால் கம்ப்யூட்டர் செயல்படும் வேகமும் அதிகமாகும்.

கேள்வி: விண்டோஸ் 8 வர இருக்கிறது. எக்ஸ்பி சிஸ்டத்திற்கு சப்போர்ட் தருவதை விண்டோஸ் நிறுத்துவேன் என்கிறது. ஒரு நாளில் விண்டோஸ் 9 மற்றும் 10 என புதிய சிஸ்டங்கள் வரும்போது, விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கும் இதே கதிதானே ஏற்படும். இது வணிக ரீதியாக நம்பிக்கை மோசடி இல்லையா? ஆனால், நீங்களோ, மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் புகழத்தான் செய்கிறீர்கள். இது குறித்து எழுதவில்லையே?
பேரா. ஆர்.கே. உலகநாதன், மதுரை.
பதில்:
மிக அருமையான பாராட்டப்பட வேண்டிய சிந்தனை. நாம் நம்பிக்கையுடன் காசு கொடுத்து வாங்கியதைச் சிறிது காலம் கழித்து, தூக்கிப் போடு, புதியதை மேலும் பணம் செலுத்தி வாங்கிக் கொள் என்று கூறுவது நம்பிக்கை மோசடி என்று கூறுகிறீர்கள். ஆம், ஒரு கோணத்தில் பார்த்தால் நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தக் கூடாது; விண் 8 தான் பயன்படுத்துங்கள் என்று சொல்லவில்லையே. இணைய வழி வரும் ஆபத்துக்களுக்கு எத்தனை நாட்களுக்குத் தான் நான் காவல் காக்க முடியும்; எனவே மாறிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறது. வேகமாக, பாதுகாப்பாகச் செல்ல வேண்டும் என்றால், நாற்கர சாலையில், சாலைக்கான சுங்க வரிக் கட்டணத்தை செலுத்தித்தான் பயணிக்க வேண்டும். வேண்டாம் எனில், சுற்றிச் சுழன்று, ஊர்களுக்குள்ளாக, ஒற்றைச் சாலையில் செல்ல வேண்டியது தான். இருப்பினும் உங்கள் கேள்வியிலும் நியாயம் உள்ளது என்று ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

கேள்வி: நல்ல ஆன்லைன் கால்குலேட்டர் ஒன்று உள்ள இணைய தளம் ஒன்றைக் கூறுங்கள். அதனைப் புக் மார்க் செய்து வைத்துப் பயன்படுத்த விரும்புகிறேன். அனைத்து வகைக் கணக்குகளுக்கும் உதவியாக இருக்க வேண்டும்.
பேரா. எஸ்.மணிகண்டன், போடிநாயக்கனூர்.
பதில்:
நீங்கள் கேட்கும் ஆர்வத்திற்கேற்ப இயங்கும் ஆன்லைன் கால்குலேட்டர் ஒன்று http://instacalc.com/ என்ற இணைய முகவரியில் கிடைக்கிறது. உங்களுடைய ஆர்வத்திற்கு ஒரு எடுத்துக் காட்டு தருகிறேன். என்ன கணக்கு செய்திடப்போகிறோம் என கால்குலேட்டருக்குத் தெரிந்தவுடனேயே அது நாம் ஒவ்வொரு எண்ணையும் கணக்கில் எடுத்து விடையைத் தரத் தொடங்குகிறது. எடுத்துக் காட்டாக 45678 * எனப் போட்டவுடன் இது பெருக்கல் என உணர்ந்து கொள்கிறது. பின் அடுத்து நீங்கள் அமைக்கும் எண் 21345 ஆக இருக்கலாம். ஆனால் 2 டைப் செய்தவுடன் இரண்டால் பெருக்கினால் கிடைக்கும் விடை தரப்படுகிறது. அடுத்து 1 டைப் செய்தவுடன் 21 ஆல் பெருக்கினால் என்ன விடை வருமோ அது தரப்படுகிறது.
இப்படியே ஒவ்வொரு எண்ணையும் டைப் செய்த உடனேயே நமக்கு விடை தருகிறது. முழுமையாக எண்ணை அமைக்கும்போது அதற்கான விடை கிடைக்கிறது. இது மட்டுமின்றி, பலவகை கணக்கீடுகளுக்கும் இது உகந்தது. நீங்களும் பயன்படுத்துங்கள். உங்கள் மாணவர்களுக்கும் சொல்லுங்கள்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X