கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 நவ
2012
00:00

கேள்வி: வேர்ட் புரோகிராமில் டேபிள் அமைக்கையில், சிலர் அழகான கோடு வகைகளையும், வண்ணங்களையும், டிசைன்களையும் பயன்படுத்துகின்றனர். எனக்கு வெறும் கோடுகளில் மட்டுமே கிடைக்கிறது. இன்ஸ்டலேஷனில் தவறு இருக்குமா? எப்படி சரி செய்வது?
ஆ. நிர்மலா, பொள்ளாச்சி.
பதில்:
இன்ஸ்டலேஷனில் எந்த தவறும் இருக்காது. இருந்தால், மொத்தமாக இயங்காது. பல்வேறு டேபிள் டிசைன் பெறும் வசதி வேர்ட் புரோகிராமிலேயே உள்ளது. முதலில் ஒரு டேபிளை உருவாக்குங்கள். பின் கர்சரை அந்த டேபிள் உள்ளே வைத்து Table மெனு சென்று அதில் Table AutoFormat என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். இங்கு பல பிரிவுகளில் டேபிள் எப்படி தோற்றமளிக்கும் எனக் காட்டப்படும். உங்களுக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் நீங்கள் உருவாக்கிய டேபிள் அதே தோற்றத்தில் அமைவதைக் காணலாம். டேபிள்களுக்கான நிறைய ஸ்டைல்கள் உங்களுக்கு ஆப்ஷனாகக் காட்டப்படும். இதனால் உங்களின் டேபிள் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைக்கப்படுவதனைக் காணலாம்.

கேள்வி: விண்டோஸ் 8 குறித்து தொடர்ந்து தகவல்களைத் தந்து வருகிறீர்கள். இதனால், புதிய சிஸ்டத்திற்கு மாறிக் கொள்வது நமக்குத்தான் நல்லது என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் தாமாக புதிய சிஸ்டத்திற்கு மாறிக் கொள்வார்களா?
சி. திலகவதி, திருப்பூர்.
பதில்:
பொதுவாகவே மக்கள் தாங்கள் பழகிய ஒன்றிலிருந்து புதிய அமைப்பிற்கு மாறிக் கொள்ள மிகவும் தயங்குவார்கள். ஆனால், டிஜிட்டல் உலகில் நாம் மாறித்தான் ஆக வேண்டும். அப்போதுதான் முன்னேறிச் செல்லும் உலகின் முழுமையான குடிமகனாக நாம் இயங்க முடியும். ஆனால், அனைத்து நாடுகளிலும் மக்கள் அந்த மனநிலையுடன் இல்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது. அதனால் தான் பத்திரிக்கை மற்றும் பிற ஊடகங்கள் வழி, புதிய மாற்றங்கள், வசதிகள் குறித்து எழுத வேண்டியதுள்ளது. வளர்ந்த நாடுகளிலும் இதே நிலைதான் நிலவுகிறது. உங்களுக்கு ஒரு தகவல் சொல்லட்டுமா? அமெரிக்காவில், அண்மையில் ஊடகங்களுக்கு செய்திகளைத் தரும் நிறுவனம் ஒன்று பல்வேறு நிலைகளில் வாழ்க்கை நடத்தும் 1,200 இளைஞர்களிடம் கேள்வி கேட்டு தகவல் திரட்டியது. இதில் விண்டோஸ் 8 குறித்து தெரியுமா என்று கேட்டதற்கு, 52% பேர் அது குறித்து எதுவும் தெரியாது என்று பதிலளித்தனர். தெரியும் என்று சொன்ன 48% பேரில், 39% பேர் மட்டுமே, தங்கள் புதிய கம்ப்யூட்டரை விண் 8 சிஸ்டத்துடன் வாங்க விரும்புவதாகத் தெரிவித்தனர். மொத்தத்தில் 17% பேர் மட்டுமே, விண்டோஸ் 7 சிஸ்டத்தைக் காட்டிலும், விண்டோஸ் 8 கூடுதல் வசதிகளைத் தரும் என்று நம்புவதாகத் தெரிவித் தனர். ஆனால் விண்டோஸ் 8 கம்ப்யூட்டர்கள் பரவலாகப் பயன்பாட்டுக்கு வங்த பின்னர், அனைவரும் மாறிக் கொள்வார்கள் என்பது உறுதி.

கேள்வி: நான் புதிய லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்க முடிவெடுத்துள்ளேன். விண்டோஸ் 8 சிஸ்டம் பதிந்து, முறையான நிறுவனம் ஒன்றிடமிருந்து பெற இருக்கிறேன். பிற்காலத்தில், விண் 8 பிடிக்காமல், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள முடியுமா?
கே. தினேஷ் சரண்ராஜ், சென்னை.
பதில்:
மாறிக் கொள்ளும் வசதியை மைக்ரோசாப்ட் அளிக்கிறது. ஆனால், நீங்கள் விண்டோஸ் 8 ப்ரோ வாங்க வேண்டும். இந்த பதிப்பே, நீங்கள் கேட்டுக் கொண்ட, விண்டோஸ் 7க்கு மாறும் வழியை அதிகார பூர்வமாகத் தருகிறது. வேறு பதிப்பினை உங்களுக்கு கம்ப்யூட்டர் வழங்கும் நிறுவனம் பதிந்து தந்தால், பின்னர் மாறிக் கொள்வது எளிதாக இருக்காது. அநேகமாக கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். விண்டோஸ் 7க்கு மாறிக் கொள்வது என்பது அவ்வளவு எளிதான, ஜஸ்ட் லைக் ஒரு பட்டனை அழுத்தி மாற்றிக் கொள்ளும் சமாச்சாரம் இல்லை. பல ட்ரைவர்களைப் புதிதாக பதிய வேண்டியதிருக்கும். ஆனால், நீங்கள் இழக்கப்போகும் விண் 8 வசதிகளையும் ஒருமுறை எண்ணிப் பார்த்து, பின்னர் மாறுவது அவசியம் என்றால் மட்டுமே மாறிக் கொள்ளவும்.

கேள்வி: கம்ப்யூட்டர் பயன்பாட்டில், பெண்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஏதேனும் எழுதலாமே? சமூக வலைத் தளங்களில் அச்சுறுத்தல், பாலியல் தளங்களினால் அவர்கள் இணையப் பயன்பாட்டிலிருந்து ஒதுங்கக் கூடாதபடி எழுதவும்.
சா. அகிலேஷ் குமார், செங்கல்பட்டு.
பதில்:
நம் பெண்கள் மிகவும் கெட்டிக் காரர்கள். இதற்கெல்லாம் பயப்பட மாட்டார்கள். எப்படி ஒதுக்கி இணையத்தினைப் பயன்படுத்துவது என நன்றாகவே தெரிந்து வைத்துள்ளனர். ஒரு தகவல் சொல்லட்டுமா! இந்தியாவில் 12 கோடியே 50 லட்சம் பேர் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் 40% பேர் பெண்கள் என இந்த ஆய்வினை மேற்கொண்ட அசோகெம் மற்றும் காம் ஸ்கோர் (ASSOCHAM and ComScore) அமைப்புகள் தெரிவித்துள்ளன. எனவே கவலைப் பட வேண்டாம். பெண்கள் தொடர்ந்து இன்டர்நெட்டைப் பயன்படுத்தி அனைத்து பயன்களையும் பெற்று வருகின்றனர்.

கேள்வி: அனைவரும் மொபைல் போன்களைப் பெற்றுள்ள நிலையில், இனி மொபைல் போன் விற்பனைக்கு சான்ஸ் இருக்குமா?
தா.மனோகரன், விருதுநகர்.
பதில்:
வர்த்தக ரீதியாகப் பெரிய கேள்வி கேட்டுள்ளீர்கள். நாம் ஒரு முறை வாங்கிய மொபைல் போனையா தொடர்ந்து பயன்படுத்துகிறோம். பெரும்பாலானவர்கள், போனில் பழுது ஏற்பட்டால், சரி செய்திடாமல், அடுத்த போனை வாங்குகின்றனர். எனவே மொபைல் விற்பனையில் தாராளமாக இறங்கலாம். இந்த 2012 ஆம் ஆண்டில், ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில், 10 கோடியே 24 லட்சம் மொபைல் போன்கள் விற்பனையாகியுள்ளன. சென்ற ஆண்டைக் காட்டிலும் இது 16.6 % கூடுதலாகும். இந்த காலத்தில் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட் போன்கள் 55 லட்சமாகும். எனவே மொபைல் போன் வர்த்தகத்தில் தாராளமாக இறங்கலாம்.

கேள்வி: எங்கள் அலுவலகத்தில், டாகுமெண்ட் ஒன்றை ரெடி செய்திடுகையில், பல நிலையில், அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, டெக்ஸ்ட்களில் அவை கமெண்ட்ஸ் உடன் இருக்கும். இறுதியில், டாகுமெண்ட்டில் உள்ள கமெண்ட்ஸ்களை ஒவ்வொன்றாக நீக்க சிரமமாய் உள்ளது, இதற்கு ஏதேனும் ஷார்ட்கட் கீ உள்ளதா?
எஸ். ஆர்.ஷ்யாமளா, திருப்பூர்.
பதில்:
டாகுமெண்ட் பெரிதாக இருந்தால், ஒவ்வொன்றாகச் சென்று கமெண்ட்ஸ்களை நீக்குவது சிரமம் தான். இதற்கு வேர்ட் தொகுப்பில் ஷார்ட் கட் கீ ஏதேனும் இல்லை. ஆனால், பைன்ட் அண்ட் ரீபிளேஸ் டூல் இதற்கு ஒரு வழி தருகிறது. அதனை எப்படி பயன்படுத்தலாம் என்று கீழே விபரம் தருகிறேன்.
1. டாகுமெண்ட்டைத் திறந்து கொண்டு பின்னர் கண்ட்ரோல் + எச் (Ctrl+H) அழுத்தவும். இப்போது பைண்ட் அண்ட் ரீபிளேஸ் கட்டத்தில் ரீபிளேஸ் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டு கட்டம் கிடைக்கும்.
2. இதில் Find What என்ற பாக்ஸில் ^a என டைப் செய்திடவும். (இதில் உள்ள கேரட்(^) சிம்பல் எண் 6க்கான கீயை ஷிப்ட் உடன் அழுத்திப் பெறலாம்)
3. அடுத்து Replace With பாக்ஸ் காலியாக இருப்பதனை உறுதி செய்து கொள்ளவும்.
4. அடுத்து Replace With என்பதில் கிளிக் செய்தால், அனைத்து கமெண்ட்ளும் நீக்கப்பட்டிருப்பதனைக் காணலாம்.

கேள்வி: மால்வேர் என்பது தீங்கு விளைவிக்கும் ஒருவகை வைரஸ் என என் நண்பர் கூறுகிறார். இது சரியா?
மா. ஆசைத் தம்பி, கோவை.
பதில்
: MALWARE என்பது Malicious Software என்பதன் சுருக்கம். கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் அனுமதியின்றி, கம்ப்யூட்டரில் இறங்கி, தீங்கு விளைவிக்கும் அனைத்து புரோகிராம்களும் இதில் அடக்கம். வைரஸ்கள், லிங்க்கில் கிளிக் செய்தால், வித்தியாசமான விளைவுகளை மேற்கொள்ளும் புரோகிராம்கள் என தீங்கு விளைவிக்கும் அனைத்தையும் மால்வேர் எனச் சொல்லலாம்.

கேள்வி: விளம்பரங்களைக் கையாளும் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். சில வேளைகளில், வாடிக்கையாளர்கள் அனுப்பும் ஸிப் பைல்களை விரித்துப் பார்க்க என் கம்ப்யூட்டரில் புரோகிராம் இல்லை. என் நிர்வாகியோ, எனக்கு விரிக்கத் தெரியவில்லை என்கிறார். என்ன செய்யலாம்? வேறு சுருக்க வழிகள், அல்லது அனைத்தையும் விரிக்கும் புரோகிராம் உள்ளதா?
ஆர்.ஸ்ரீராம் கணேஷ், சென்னை.
பதில்:
நீங்கள் சந்தித்த சிக்கலான ஸிப் பைல் துணைப் பெயரினைத் தெரிவித்திருக்கலாம். பொதுவாக அன்ஸிப் மற்றும் ஆர்.ஏ.ஆர். போன்றவை அனைத்து வகை ஸிப் பைல்களையும் விரித்துத் தரும் செயல் திறன் கொண்டவை. உங்களின் பிரச்னைக்கு இணையத்தில் தீர்வு உள்ளது. http://b1.org/online என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். அன்ஸிப் செய்திட வேண்டிய, விரித்துப் பார்க்க வேண்டிய ஸிப் பைலை அப்லோட் செய்திடுங்கள். இந்த தளம் அந்த ஸிப் பைலை விரித்து, என்ன என்ன பைல்கள் அதில் உள்ளன என்று காட்டும். நீங்கள் அவற்றை ஒவ்வொன்றாகவோ அல்லது மொத்தமாகவோ டவுண்லோட் செய்திடலாம். தளம் பலவகையான ஸிப் பைல்களைக் கையாளும் திறன் கொண்டதாக உள்ளது. மேலும் இதில் பைல்களை ஸிப் செய்தும் பெறலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X