கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2012
00:00

கேள்வி: புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கையில், சில புரோகிராம்கள், அந்தக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கின்றன. சில, எந்த யூசர் அக்கவுண்ட்டில் இன்ஸ்டால் செய்கிறோமோ, அந்த பயனாளருக்கு மட்டுமே கிடைக்கின்றன. இதனை மாற்றி, அனைவருக்கும் கிடைக்கும்படி செய்திட முடியுமா?
எஸ். என். சிக்கந்தர், சென்னை.
பதில்:
சிக்கந்தர், அனைவரும் எதிர்கொள்ளும் சிக்கல் ஒன்றைக் கேள்வியாக்கி உள்ளீர்கள், நன்றி. உங்கள் கேள்விக்கு பல பதில்களைத் தரலாம். சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன். நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் பதிப்பு என்ன என்று தரவில்லை. இங்கு தரப்படும் தீர்வுகள், எக்ஸ்பிக்குப் பின்னர் வந்தவற்றில் இயங்கும். முதலாவதாக, விண்டோஸ் எம்.இ. (Windows ME) மற்றும் அதற்கு முந்தைய சிஸ்டத்திற்கென எழுதப்பட்ட சில புரோகிராம்கள், அனைத்து பயனாளர்களுக்கும் கிடைப்பதில்லை. எனவே, இவற்றை இன்ஸ்டால் செய்கையில், நீங்கள் விண்டோஸ் அட் மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டில் இருந்து இன்ஸ்டால் செய்திடவும். செய்தால், அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கும்.
சில புதிய புரோகிராம்கள், செட் அப் விண்டோவிலேயே, இன்ஸ்டால் செய்யப்படும் புரோகிராம்கள் அனைவரின் பயன்பாட்டுக்கும் கிடைக்கும்படி அமைக்கவா, இல்லையா? என்ற கேள்வியைக் கேட்டு, நீங்கள் தரும் பதிலுக்கேற்ற வகையில் அமைக்கும்.
எக்ஸ்பி பயன்படுத்துவதாக இருந்தால், அனைவருக்கும் ஒரு புரோகிராம் பயன்பாட்டினைத் தருவதாக இருந்தால், புரோகிராமினைச் செயல்படுத்தும் ஐகானை, C:\Documents and Settings\All Users\Desktop அல்லது C:\Documents and Settings\All Users\Start Menu\Programs என்ற போல்டரில் வைக்கவும்.
விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில், parental controls பயன்படுத்தி, புரோகிராம்களைப் பயன்படுத்துவோரைக் கட்டுப்படுத்தலாம். இதற்கு கண்ட்ரோல் பேனலில், User Accounts சென்று செயல்படவும். முதலில் Manage Another Account என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், நீங்கள் மாற்றி அமைக்க விரும்பும் அக்கவுண்ட்டினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Set up Parental Controls என்பதில் கிளிக் செய்திடவும். இந்த விண்டோவில், Program Limits: Off, அல்லது Program Limits: On என்பதனைக் காணலாம். இங்கு கிடைக்கும் On அல்லது Off என்பதனைக் கிளிக் செய்து புரோகிராம் ஒன்றை, அந்த அக்கவுண்ட் பயனாளர், பயன்படுத்தலாமா என்பதனை முடிவு செய்திடலாம். நீங்கள் User can use all programs என்பதில் கிளிக் செய்தால், புரோகிராமைப் பயன்படுத்துவதில் எந்த வரையறையும் இருக்காது. User can only use the programs I allow என்பதில் கிளிக் செய்தால், புரோகிராம்களின் பட்டியல் கிடைக்கும். இதில் தேர்ந்தெடுக்கலாம்.

கேள்வி: சாம்சங் கேலக்ஸி எஸ் 3 வாங்கியுள்ளேன். இதில், ஸ்கிரீனில் கிடைக்கும் காட்சிகளை எப்படி ஸ்கிரீன் ஷாட்டாக எடுப்பது?
என். ஸ்டாலின், கோவை.
பதில்:
இது போன்ற மொபைல் பற்றிய கேள்விகள் எப்போதாவது தான் வாசகர்களிடமிருந்து வருகின்றன. இது ஒரு நல்ல கேள்வி. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் ஒரு நல்ல ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறீர்கள். நல்லது. இனி ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி எனப் பார்ப்போம். பவர் பட்டனையும், ஹோம் பட்டனையும் ஒரே நேரத்தில் அழுத்தவும். சில நொடிகளில், கேமராவில் படம் எடுப்பது போல கிளிக் என ஒரு சத்தம் கேட்கும். நீங்கள் விரும்பிய திரைக் காட்சி, படங்களுக்கான காலரியில் சேவ் ஆகி விட்டது. மற்ற ஆண்ட்ராய்ட் போன்களி, வால்யூம் பட்டனையும் பவர் பட்டனையும் அழுத்த வேண்டும். காலக்ஸி எஸ் 3 சிஸ்டத்தில் இது வித்தியாசமாக உள்ளது.

கேள்வி: ஜிமெயில் அக்கவுண்ட் வைத்துள்ளேன். இதில் நாம் நினைவு படுத்த வேண்டிய பணிகளை எப்படி குறித்து வைப்பது? அவ்வாறு செட் செய்திடலாம் என ஒரு நண்பர் கூறுகிறார். தயவு செய்து வழி காட்டவும்.
என். லதா ப்ரிய ராணி, திருப்பத்தூர்.
பதில்:
நீங்கள் விரும்பியபடி, நினைவுக் குறிப்புகளை ஜிமெயில் தளத்தில் பதிந்து வைத்துக் கொள்ளலாம். இதனை ஜிமெயில் “Tasks” அல்லது your to do list என அழைக்கிறது. இதனை உருவாக்கி, நீங்கள் செய்ய வேண்டிய பணிகள், அதற்கான நாள், குறிப்புகள் ஆகியவற்றை அமைக்கலாம். இதனை அமைக்க, ஜிமெயில் தளத்தில், ஸ்கிரீனில் இடது பக்கத்தில் “Compose” பட்டன் அருகே “Gmail” என்பதை அடுத்து கிளிக் செய்திடவும். இதில் “Tasks” என்பதில் கிளிக் செய்திடவும். Gchat பாக்ஸ் போல ஒரு விண்டோ திரையின் கீழாக வலது பக்கம் திறக்கப்படும். இங்கு நீங்கள் நினைவூட்டப்பட வேண்டிய பணிகள், அதற்கான நாள்கள் ஆகியவற்றை அமைக்கலாம்.

கேள்வி: நான் உருவாக்கிய சில வேர்ட் டாகுமெண்ட்களை அச்செடுக்கையில், கொட்டேஷன் மார்க் எனப்படும் மேற்கோள் குறிகள் சரியான முறையில் பிரிண்ட் ஆவதில்லை. சில வேளைகளில் இந்த குறியீடுகளுக்குப் பதிலாக வேறு குறியீடுகள் அச்சாகின்றன. பலரிடம் கேட்டும் இதற்கான தீர்வைப் பெற இயலவில்லை. நீங்கள் உதவ முடியுமா?
டாக்டர் கே. ஷீலா மோகன், ஸ்ரீரங்கம்.
பதில்:
நல்ல கேள்வி. பலருக்கும் இது போல பிரச்னை வந்திருக்கும். திரையில் நன்றாகத் தோற்றமளிக்கும் மேற்கோள் குறிகள், அச்சாகாமல் இருக்கலாம்; அல்லது போல்டாக, கருப்பாக # என அச்சாகலாம். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. வேர்ட் எப்படி நீங்கள் அமைக்கும் மேற்கோள் குறிகளைக் கையாள்கின்றன என்று பார்க்க வேண்டும். வழக்கமான மேற்கோள் குறிகளை, வேர்ட் ஒரு குறிப்பிட்ட குறியீட்டு எண் மூலம் புரிந்து கொள்கிறது. இதில் பிரச்னை ஏற்படுவதில்லை. நீங்கள் உங்கள் வேர்ட் தொகுப்பில் Smart Quotes வசதியை இயக்கி இருந்தால், மேற்கோள் குறிகள் தொடக்க நிலை மற்றும் முடிக்கும் நிலையில் இருப்பதன் அடிப்படையில், இரண்டு குறியீட்டு எண் மூலம் புரிந்து கொள்ளும். இந்த குறியீட்டு எண்கள் சில எழுத்து வகைகளில் தரப்பட்டிருக்காது. எடுத்துக்காட்டாக, Courier எழுத்து வகையில் இவை இல்லை. எனவே, இவை அச்சாகும் போது, அச்சடிக்கப்படுவதில்லை; அல்லது வேறு ஒரு குறியீட்டு எழுத்தை அமைக்கிறது.
இதற்கு இரண்டு தீர்வுகளைத் தருகிறேன். உங்கள் டாகுமெண்ட்டினை வேறு ஒரு எழுத்துவகையில் அமைக்கவும். எடுத்துக் காட்டாக, Courierக்குப் பதிலாக, Courier New என்ற எழுத்து வகையினை அமைக்கலாம். இந்த எழுத்துவகையில், சரியான முறையில் மேற்கோள் குறிகளுக்கான குறியீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
நீங்கள் கூரியர் எழுத்துவகையை தான் பயன்படுத்தப்பட வேண்டும் என முடிவு செய்தால், Smart Quotes வசதியை ரத்து செய்திட வேண்டும். அதற்கு Office பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர், Word Optionல் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட், வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைக் காட்டும். இதன் இடது புறம் உள்ள Proofing என்பதில் கிளிக் செய்திடுக. அடுத்து, Auto Correct என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது Auto Correct டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில்
Auto Format As You Type என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Straight Quotes with Smart Quotes என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: குரோம் பிரவுசரில், மூடப்பட்ட ஓர் இணைய தளத்தை, உடனடியாகத் திறக்க எந்த கீகளை அழுத்த வேண்டும்?
ஆர். ராதிகா, புதுச்சேரி.
பதில்:
அனைத்து பிரவுசர்களிலும் இந்த செயல்பாட்டிற்கு ஒரே கீ முறைதான் இயங்குகிறது. கண்ட்ரோல் + ஷிப்ட் +ட்டி (Ctrl+Shift+T) கீகளை அழுத்துங்கள். உடனே அப்போது இறுதியாக மூடப்பட்ட தளம் திறக்கப்படும். அதற்கு முந்தைய தளம் எனில், மறுபடியும் அதே கீகளை அழுத்தவும். இப்படியே முந்தைய தளங்களைத் திறக்கலாம். இந்த ஷார்ட்கட் கீகள் தொகுப்பு பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், கூகுள் குரோம் ஆகிய அனைத்திலும் செயல்படுகின்றன.

கேள்வி: நான் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கிறேன். என் லேப்டாப் கணினியை என் நண்பர்கள் பயன்படுத்தும் போது, எனக்குப் பிடிக்காத புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கிறார்கள். மாற்றங்களை ஏற்படுத்துகிறார்கள். தனி அக்கவுண்ட் கொடுத்தாலும், என் அக்கவுண்ட்டில் இதனை செயல்படுத்துகின்றனர். எப்படி இதனை தடுக்கலாம்? என் ஓ.எஸ். விண்டோஸ் 2007.
டி. கார்த்திக், சிவகாசி.
பதில்
: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் உள்ள PC Safeguard என்ற புரோகிராமினைப் பயன்படுத்தவும். இந்த புரோகிராம் மற்றவர்கள் ஏற்படுத்திய அனைத்து மாற்றங்களையும் கேன்சல் செய்துவிடும்.
இதனைச் சோதித்துப் பார்க்க Control Panel > User Accounts and Family Safety > User Accounts > Manage another account > Create a new account என்று சென்று ஒரு புதிய அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கவும். பின் அந்த அக்கவுண்ட்டில் PC Safeguard இன்ஸ்டால் செய்திடவும். பின் இயக்கி Apply கிளிக் செய்திடவும். இந்த புதிய அக்கவுண்ட்டில் லாக் இன் செய்து மேலே குறிப்பிட்ட மாற்றங்களை மேற்கொள்ளவும். ஏதேனும் ஒரு புரோகிராமினை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடவும். பின் ரீஸ்டார்ட் செய்து பார்த்தால் நீங்கள் இன்ஸ்டால் செய்த புரோகிராம் இருக்காது. என்ன சந்தோஷமா!

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X