வேர்ட் தொகுப்பில் வேகம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2012
00:00

நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டில், இணையத்திற்கு இணையாக நாம் பயன்படுத்துவது எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பாகும். இதில் அனைவரும் பயன்படுத்துவது வேர்ட் தொகுப்பே. பொதுவாக தட்டச்சு மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாட்டின் அடிப்படையைத் தெரிந்து கொண்டவர் அனைவரும், வேர்ட் புரோகிராம் பயன்படுத்துகின்றனர். இதற்கெனத் தனியே எந்த சிறப்பு பயிற்சி வகுப்பிற்கும் செல்வதில்லை. இதனாலேயே, வேர்ட் தரும் வசதிகளில் 10 சதவிகித வசதிகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். நம் வேலைகளை எளிதாக்கவும், வேகமாகச் செயல்படவும் வேர்ட் பல டூல்ஸ்களைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் நீண்டு கொண்டே செல்லும் மெனுக்களிலும் டூல்பார்களிலும் புதைந்து இருப்பதனால், பலர் இவற்றைக் கண்டு கொள்வதில்லை. இவற்றை விரித்துப் பார்த்தாலும், எப்படி பயன்படுத்துவது என்று தெரியாததனால், பயன்படுத்தாமல் விட்டுவிடுகின்றனர். இவற்றில் சிலவற்றைப் பயன்படுத்துவது குறித்து இங்கு காணலாம். வேர்ட் 2003, 2007 மற்றும் வேர்ட் 2010 ஆகிய தொகுப்புகளில் உள்ள சில டூல்ஸ்களை இங்கு காணலாம்.

1. டெம்ப்ளேட் பயன்படுத்தி நேரம் மிச்சம்:


வேர்டில், டெம்ப்ளேட் எனப்படுபவை டாகுமெண்ட் தயாரிக்க ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்தக் கூடிய மாடல் கட்டமைப்பாகும். நாம் அடிக்கடி பயன்படுத்தும் டாகுமெண்ட், கடிதங்கள், கவர்களில் டெக்ஸ்ட் அமைத்தல் ஆகியவற்றிற்கு இவற்றைப் பயன்படுத்தலாம். வேர்ட் இதற்கான அழகான, பயனுள்ள டெம்ப்ளேட்களைக் கொண்டுள்ளது.
வேர்ட் 2003ல் இவற்றைப் பயன்படுத்த File கிளிக் செய்து, பின்னர் New என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வலது பக்கம் ஒரு பிரிவில் சில வசதிகள் காட்டப்படும். இங்கு ‘On my computer’ என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். இங்கு டெம்ப்ளேட் என்ற தலைப்பில் சிறிய விண்டோ கிடைக்கும். இதில் பல வகைகளுக்கான தலைப்பு காட்டப்படும். உங்களுக்குத் தேவையான டெம்ப்ளேட்டினைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, Create New என்ற பிரிவில் உள்ள Document radio பட்டன் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்திட உங்களுக்கு டாகுமெண்ட் அமைக்க டெம்ப்ளேட் கிடைக்கும்.
வேர்ட் 2007ல், Office பட்டன் தேர்ந்தெடுத்து, New என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பட்டியலில் Installed Templates என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2010ல், File>New> Sample Templates எனச் செல்லவும். ஏதேனும் ஒரு டெம்ப்ளேட்டினைத் தேர்ந்தெடுத்து, பின்னர் Create என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும்.
சில டெம்ப்ளேட்டுகளில், எப்படி அதனைக் கையாள்வது என்று காட்டப்பட்டிருக்கும். ஆனால் இதில் ஒன்றும் சிக்கல் இருக்காது. கையாள்வதற்கான வழிமுறைகள் தேவையில்லை. நீங்கள் அமைக்கும் டெக்ஸ்ட்டை இதில் அமைத்து வழக்கம் போல டாகுமெண்ட்டை சேவ் செய்திட வேண்டியதுதான். ஏதேனும் ஒரு டாகுமெண்ட்டினை சேவ் செய்திட, F12 கீயை அழுத்த வேண்டியதுதான். பின்னர் கிடைக்கும் File type கீழ்விரி மெனுவில், Word Template என்பதனைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்திடவும்.

2. டாகுமெண்ட்டின் இரண்டு பகுதிகளில் இயங்க:


மிகப் பெரிய டாகுமெண்ட்களில் இயங்குகையில், இரு வேறு பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்வது சற்று சிரமமாயிருக்கும். ஒவ்வொரு முறையும், பக்கங்களை ஸ்குரோல் செய்து செல்வது வேலைப் பளுவினைத் தருவதுடன், பல நேரங்களில், செல்ல வேண்டிய பிரிவு சீக்கிரம் கிடைக்காது. இதற்கு வேர்ட் எளிய வழி ஒன்றைத் தருகிறது. ஒரே நேரத்தில், டாகுமெண்ட் ஒன்றின், இரண்டு பிரிவுகளைத் திறந்து வைத்து, இயங்குவதற்கான வழியைத் தருகிறது. இதனால், திரையில், ஒரே நேரத்தில், டாகுமெண்ட்டின் இரண்டு பிரிவுகளைப் பார்க்கும் வசதியும், அவற்றில் பணியாற்றும் வசதியும் கிடைக்கிறது. இந்த வசதியைக் கீழ்க்கண்டவாறு பெறலாம்.
வேர்ட் 2003ல், Window என்பதில் கிளிக் செய்து, Split என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007 மற்றும் வேர்ட் 2010ல், View என்பதில் கிளிக் செய்து, Split என்பதைத் தேர்ந்தெடுக்கவும். மவுஸ் கர்சரை, எந்த இடத்தில் டாகுமெண்ட்டில் பிரிக்க வேண்டுமோ, அங்கு கொண்டு சென்று, லெப்ட் கிளிக் செய்திடவும். இப்போது டாகுமெண்ட் இரண்டு பிரிவுகளில் காட்டப்படும். இந்த இரண்டு பிரிவுகளையும் தனித்தனியே உருட்டி, மேல் கீழாகச் செல்லலாம். திருத்தங்களை மேற்கொள்ளலாம். ஸூம் செய்தும் பயன்படுத்தலாம்.
பிரிக்கப்பட்டிருக்கும் இடத்தினை மாற்ற, இரண்டையும் பிரிக்கும் கோட்டில் கிளிக் செய்து, புதிய இடத்திற்கு இழுத்து விடலாம். இந்த பிரிவை நீக்க, பிரிக்கும் கோட்டில் மவுஸ் கர்சரை வைத்து, டாகுமெண்ட்டின் மேல் அல்லது கீழ் பகுதிக்கு இழுக்கலாம். அல்லது மேலே காட்டியுள்ளபடி மெனுவைப் பெற்று, அதில் Remove Split என்பதில் கிளிக் செய்திடலாம்.

3. ஒரு கடிதத்தைப் பலருக்கு தனித்தனியே அச்செடுக்க:


பல வேளைகளில், ஒரே கடித வாசகத்தைப் பலருக்கு அனுப்ப வேண்டியதிருக்கும். ஆனால்,இதனைப் பொதுவான ஒரு கடிதமாக அனுப்பினால், அது சுற்றறிக்கை போல் ஆகிவிடும். ஒவ்வொருவரின் பெயர், அழைக்கும் உறவு முறை, முகவரி போன்றவற்றை அமைத்து தயாரித்தாலே, அது தனிநபருக்கான அன்புக் கடிதமாக மாறும். வேர்ட் இதற்கான வசதியை மெயில் மெர்ஜ் (Mail Merge) என்ற பெயரில் வழங்குகிறது.
இதனை வேர்ட் 2003ல் பெற, Tools கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், Letters and Mailings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Mail Merge என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007/2010ல் Mailings என்ற டேப்பில் கிளிக் செய்து, Start Mail Merge என்ற பட்டனை அழுத்தவும். இந்த விண்டோவில் பல நிலைகளில் உங்கள் தேவைகள் என்னவெனத் தரவேண்டியதிருக்கும். நீங்கள் யாருக்கெல்லாம் அனுப்ப வேண்டுமோ, அவர்கள் பெயர், அழைக்கும் பெயர், முகவரிகள் என அனைத்தையும் ஒரு பைலில் அமைத்து, அச்சடிக்க கொடுக்க வேண்டும். மெயில் மெர்ஜ் மூலம், இமெயில், கடித உறைகள், லேபில்கள் மற்றும் முகவரி பட்டியல் என அனைத்தும் தயாரிக்கலாம்.

4. இரண்டு டாகுமெண்ட்களை அருகே அமைத்துக் காண:


நாம் பல முறை இரண்டு டாகுமெண்ட்களை ஒப்பிட்டுப் பார்த்து, திருத்தங்களை மேற்கொள்வோம். இந்த சந்தர்ப்பங்களில், நாம் விரும்பும் டாகுமெண்ட்களை ஒரே திரையில் விரித்து வைத்துக் காணும் வசதியை வேர்ட் தருகிறது.
இந்த வசதியை, வேர்ட் 2003ல் பெற, முதலில் நீங்கள் காண விரும்பும் டாகுமெண்ட்களைத் திறக்கவும். பின்னர், Window என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து, Compare Side by Side என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது இரண்டு டாகுமெண்ட்களும், திரையில்சரி பாதியை எடுத்துக் கொண்டு காட்சி அளிக்கும். ஒன்றை ஸ்குரோல் செய்தால், இன்னொன்றும் ஸ்குரோல் ஆகும். இந்த வசதியை நிறுத்த வேண்டும் என்றால், Compare Side by Side டூல்பாரில் இடது பக்கம் இருக்கும் சிறிய ஐகானில் கிளிக் செய்திடவும்.
வேர்ட் 2007/2010ல், View என்பதில் கிளிக் செய்து, பின்னர் View Side by Side கிளிக் செய்திடவும். மேலே காட்டியபடி, டாகுமெண்ட்கள், அருகருகே கிடைக்கும். ஆனால் கூடுதல் டூல்பார்கள் காட்டப்பட மாட்டாது. எனவே, இரண்டு டாகுமெண்ட்களும் ஒரே நேரத்தில் ஸ்குரோல் ஆவதைத் தடுக்க, View கிளிக் செய்து, அடுத்து Synchronous Scrolling என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் 2007ல் இது ஒரு ஐகானாகக் கிடைக்கும்.
அருகருகே டாகுமெண்ட்கள் காட்டப்படுவதனை முடித்து வைக்க, வேர்ட் 2003ல், Window கிளிக் செய்து, பின்னர் Close Side by Side என்பதனைக் கிளிக் செய்திடவும். வேர்ட் 2007/2010ல் View கிளிக் செய்து, தொடர்ந்து View Side by Side என்பதனைக் கிளிக் செய்திடவும்.

5. ஹெடர் மற்றும் புட்டர் இணைக்க:


டாகுமெண்ட் பக்கங்களில், மேலாகவும், கீழாகவும் சில டெக்ஸ்ட், படங்கள் தொடர்ந்து வரவேண்டும் என விரும்புவோம். இவற்றை அமைக்கும் இடங்களே ஹெடர் மற்றும் புட்டர் என அழைக்கப்படுகின்றன. குறிப்பாக நூல்கள் தயாரிக்கும்போதும், பெரிய அளவில் ஆய்வுக் கட்டுரைகள் அமைக்கும் போதும், அத்தியாய தலைப்புகள், பக்க எண்கள் ஒவ்வொரு பக்கத்திலும், குறிப்பிட்ட இடத்தில் அமைப்பது வழக்கமான முறை. இவற்றை எப்படி அமைக்கலாம் என்பதனைப் பார்க்கலாம்.
வேர்ட் 2003ல், View என்பதைக் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Header and Footer என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பக்கத்தின் மேலாகவும் கீழாகவும் புள்ளிகளில் உருவான பாக்ஸ் ஒன்று காட்டப்படும். Header and Footer டூல்பார் ஒன்றும் கிடைக்கும். இந்த டூல்பாரில் Insert Auto Text என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். இதில் பல பிரிவுகள் கிடைக்கும். இதில் சில தானாகவே சில விஷயங்களை அமைத்துத் தரும். எடுத்துக்காட்டாக, டாகுமெண்ட்டை அமைப்பவர் மற்றும் நாள் ஆகியவற்றை அமைக்க விரும்பினால், Author, Page# and date என்பதில் கிளிக் செய்திடவும். இவை தானாக அமைக்கப்படும். தானாக, பக்கங்களின் எண்கள் மட்டும் அமைக்கப்பட வேண்டும் எனத் திட்டமிட்டால், Auto Text என்ற பட்டன் அருகே உள்ள ஐகானை அழுத்தவும். பலவகைகளில் பக்க எண்களை அமைப்பதற்கான பார்மட்கள் காட்டப்படும். இதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுத்த பின்னர், இதில் உள்ள Close பட்டனை அழுத்தி டாகுமெண்ட்டுக்குத் திரும்பலாம்.
வேர்ட் 2007/2010ல், Insert மற்றும் Header (or Footer) அழுத்தி, பின்னர் ஏதேனும் ஒரு style தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது Design tab தானாகத் திறக்கப்படும். அடுத்து ‘Type text’ என்ற பகுதியில் கிளிக் செய்திட வேண்டும்.
இப்போது நாம் அமைக்க விரும்பும் டெக்ஸ்ட்டை அமைக்கலாம். அடுத்து Page Numbers அல்லது Date and Time தேர்ந்தெடுத்தால், இதில் நாம் விரும்பும் பார்மட்டினைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். மீண்டும் டாகுமெண்ட் திரும்ப Close Header and Footer என்பதில் கிளிக் செய்திட வேண்டும். மீண்டும் ஹெடர் அல்லது புட்டரில் உள்ளதைத் திருத்த வேண்டும் எனில், ஹெடர் அல்லது புட்டரில், டபுள் கிளிக் செய்தால் போதும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X