கேள்வி-பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2012
00:00

கேள்வி: என்னுடைய ஜிமெயிலில் சில காண்டாக்ட் முகவரிகள், ஒன்றுக்கு மேலாக உள்ளன. இவை எப்படி நேர்ந்தது என்று தெரியவில்லை. இவற்றை எப்படி ஒன்று சேர்த்து, ஒருவருக்கு ஒன்று என்ற வகையில் முகவரிகளை ஏற்படுத்தி வைப்பது?
சி. சோனா கலா, சென்னை.

பதில்: ஜிமெயிலில் டூப்ளிகேட் காண்டாக்ட் முகவரிகள் பல வழிகளில் ஏற்படுகின்றன. சில பிரச்னைகளால், அனைத்து காண்டாக்ட் முகவரிகளும் டூப்ளிகேட் ஆகின்றன என்று ஒருமுறை நான் படித்திருக்கிறேன். சில வேளைகளில், நாமே அவசரப்பட்டு, ஒரே முகவரியை, ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் ஏற்படுத்துகிறோம். தொலைபேசி எண், முகவரி மாற்றம் இவற்றை அப்டேட் செய்கையிலும், இவை டூப்ளிகேட் ஆகின்றன. சரி, இவற்றை எப்படி இணைத்து ஒன்றாக்குவது எனப் பார்க்கலாம்.
ஜிமெயில் திறக்கப்பட்டவுடன், Gmail என்பதற்கு அருகே வலது பக்கமாக உள்ள சிறிய அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Contacts என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Contacts பிரிவில் More பட்டன் அழுத்தி Find & merge duplicates என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் merge duplicates என்ற டயலாக் பாக்ஸில் merge என்பதில் கிளிக் செய்திடவும். ஒரே முகவரிக்கு இரண்டு தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் இருந்தால், அவை அடைப்புக் குறிக்குள் வைத்துக் காட்டப்படும்.

கேள்வி: என்னிடம் HP p6210f Quad Core (Win 7 7) சிஸ்டம் உள்ளது. இதில் 6 ஜிபி மெமரி இன்ஸ்டால் ஆகியுள்ளது. ஆனால், சிஸ்டம் இன்போ (System Info)வில் பார்க்கையில், “Installed Memory 6GB (2 GB Usable)” என்று காட்டுகிறது. மெமரியைச் சோதனை செய்திடுகையில், மிகச் சரியாகவே செயல்படுகிறது. ஸ்லாட் மாற்றிக் கூடப் பார்த்தேன். இதே செய்தியே கிடைக்கிறது. எங்கு பிரச்னை? சி.பி.யுவிலா?
டி.ஜெயசிங் டேனியல், மதுரை.

பதில்: இது சிஸ்டம் தகவலைக் காட்டுவதில் உள்ள பிரச்னையாக இருக்கலாம்; அல்லது இது ஒரு வேறுவகையான பிரச்னையாக இருக்கலாம். இரண்டு வழிகளையும் இங்கு பார்க்கலாம். முதல் வேலையாக, டாஸ்க் பாரில், வலது கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் டாஸ்க் மேனேஜர் தேர்ந்தெடுத்துக் கிளிக் செய்திடவும். இங்கு performance டேப் தேர்ந்தெடுக்கவும். இதில் Physical Memory என்பதில் என்ன காட்டப்படுகிறது எனப் பார்க்கவும். இதில் Total 6000 (or about) எனக் காட்டினால், அனைத்தும் சரியாக உள்ளது என்று பொருள். நீங்கள் காண்பது, உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம், தினம் அதன் பயன்பாட்டில், காட்டப்படும் மெமரியைப் பயன்படுத்திகிறது என்று பொருள்.
மொத்த மெமரி 2048 GB என்று காட்டப்பட்டால், ஸ்டார்ட் அப் செட்டிங் அமைந்ததில் சிக்கல் உள்ளது. மெமரியை 2 ஜிபி மட்டுமே பயன்படுத்த செட்டிங்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நாம் மாற்ற வேண்டும். இதற்கு Run விண்டோவில் msconfig என டைப் செய்து என்டர் செய்திடவும்.
msconfig விண்டோவில், boot என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். மீண்டும் கிடைக்கும் விண்டோவில் Advanced options என்பதில் கிளிக் செய்திடவும். இங்குள்ள Maximum memory என்ற செக்பாக்ஸில் எந்தவித டிக் மார்க் அடையாளம் இல்லாதபடி அமைக்கவும். அநேகமாக, உங்கள் கம்ப்யூட்டரில் இது செக் செய்யப்பட்டிருக்கும்; அதனால் தான், முழு மெமரி காட்டப்படவில்லை. டிக் மார்க் எடுத்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும். கம்ப்யூட்டரை இப்போது ரீ பூட் செய்திடவும். இனி, முழு மெமரி கிடைக்கும்.

கேள்வி: என்னுடைய கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குகிறது. இப்போதெல்லாம் அடிக்கடி சிஸ்டம் தானாக, ரீ பூட் ஆகிறது. வேறு தொல்லை இல்லை. குறிப்பிட்ட புரோகிராம் என்றில்லாமல், ரீ பூட் ஆகும்போது பல புரோகிராம்கள் இயங்குகின்றன. மேலும் இன்டர்நெட் இணைப்பில் (பிராட்பேண்ட்) இருக்கும் போதும் இவ்வாறு ஏற்படுகிறது? என்ன காரணம்?
சி. முத்துராஜ், காரைக்கால்.
பதில்:
நம் வீட்டுக்கு விருந்தினர் வந்தால், நாம் அடிக்கடி, வீட்டைச் சுத்தப்படுத்துவோம். மேஜை நாற்காலிகளை இடம் மாற்றுவோம். அது போல் தான் இதுவும். உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டருக்குள் விருந்தினர் வந்திருக்கின்றனர். இங்கு அவர்களே வீட்டைப் புதுப்பிக்கின்றனர். என்ன புரியவில்லையா? உங்கள் கம்ப்யூட்டரில் Blaster, Sasser அல்லது வேறு ஏதேனும் வைரஸ் ஒன்று வந்திருக்கலாம். வந்திருக்கலாம் என்று ஏன் சொல்கிறேன் என்றால், வேறு காரணங்களாலும் இது ஏற்படலாம். ஆனால், பெரும்பாலும் வைரஸ்களே இந்த பிரச்னையை ஏற்படுத்துகின்றன. இந்த வைரஸ்கள் வந்தால், என்ன விளைவு இருக்கும், நாம் என்ன செய்திட வேண்டும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் கீழ்க்குறித்த இரு தளங்களில் தெளிவாக விளக்குகிறது. படித்துப் பார்த்து, அதன்படி செயல்படவும். அல்லது, மீண்டும் ஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்து விண்டோஸ் எக்ஸ்பி அல்லது வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பதிப்பிக்கவும்.
http://www.microsoft.com/security/incident/blast.asp
http://www.microsoft.com/security/inceident/sasser.asp

கேள்வி: என் நண்பரின் பெர்சனல் கம்ப்யூட்டரில், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினை ரீ ஸ்டார்ட் செய்திட ஐகான் ஒன்று உள்ளது. அவர் நண்பர் ஒருவர் பயன்படுத்தும்போது உருவாக்கினார் என்று கூறுகிறார். இதனை எப்படி உருவாக்குவது? அதற்கென தர்ட் பார்ட்டி புரோகிராம் உள்ளதா? தகவல் தரவும்.
சி. யோகலஷ்மி, சென்னை.
பதில்:
விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தை ரீ ஸ்டார்ட் செய்திட, ஸ்டார்ட் பட்டன் அழுத்தி, கிடைக்கும் விண்டோவில், அதற்கான ரீஸ்டார்ட் பட்டனை அழுத்த, சோம்பல் படுபவர்கள், அல்லது தலைக்கு மேல் வேலை உள்ளவர்கள், இது போல ஐகானை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். இதில் “New” என்பதனையும் அடுத்து “Shortcut” என்பதிலும் கிளிக் செய்திடவும். இப்போது “Create Shortcut” டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் “Type the location of the item” என்று உள்ள இடத்தில் shutdown r t 01 என அப்படியே சரியாக டைப் செய்திடவும். அடுத்து டயலாக் பாக்ஸில் “Next” பட்டனைக் கிளிக் செய்திடவும். அடுத்து டயலாக் பாக்ஸ் “Select a Title for the Program” என மாறும்.
அங்கு “Type a name for this shortcut” என்று உள்ள இடத்தில் நீங்கள் விரும்பும் பெயரைக் கொடுக்கவும். இது புரிந்து கொள்ளும் விதத்தில் Restart or Restart Computer அல்லது Shut It Down அல்லது Bring It Up! என இருக்கலாம். அடுத்து டயலாக் பாக்ஸில் உள்ள "Next” பட்டனைக் கிளிக் செய்திடவும். இப்போது நீங்கள் கொடுத்த பெயரில் ஒரு ஐகான், டெஸ்க்டாப்பில் கிடைக்கும்.
இதனை டபுள் கிளிக் செய்தால், கம்ப்யூட்டர் “ரீ பூட்” ஆகும். ஆனால், எப்போதும் ரீ ஸ்டார்ட் செய்வதாக இருந்தால், இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களை சேவ் செய்து, மூடிவிட்டுப் பின்னர் ரீ ஸ்டார்ட் செய்வது நல்லது.

கேள்வி: என் தந்தை (69)க்கு கம்ப்யூட்டர் கற்றுக் கொடுத்தேன். வேர்ட், நோட்பேடில் சின்ன சின்ன கடிதங்களை அமைக்கிறார். ஆனால், கர்சர் துடிக்காமல், நிலையாக இருக்குமாறு கேட்கிறார். இதனை மாற்ற முடியுமா? அவர் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் எக்ஸ்பி இயங்குகிறது.
ஆர். சங்கர், திருப்பூர்.
பதில்:
உங்கள் இருவருக்குமே என் பாராட்டுக்கள். டெஸ்க்டாப்பில் எழுதும் முனை எங்கிருக்கிறது என அறியத்தான், கர்சரைத் துடிக்கும் (blinking) வகையில் அமைத்திருக்கின்றனர். குறிப்பாக, உங்கள் தந்தை வயது உள்ளவர்களுக்கு இது உதவியாக இருக்கும். இருப்பினும், உங்கள் தந்தையின் ஆசையை நிறைவேற்ற விரும்பும் உங்கள் ஆவலுக்கு விடை தருகிறேன். “Start” பட்டன் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் “Settings” என்பதனைத் தேர்ந்தெடுத்து அதில் “Control Panel”ல் கிளிக் செய்திடவும்.
கண்ட்ரோல் பேனலில் நீங்கள் Category Viewல் இருந்தால், “Printers and Other Hardware”, என்பதில் கிளிக் செய்திடவும். அல்லது Keyboard” ஐகானில் கிளிக் செய்திடவும். இப்போது பல டேப்களுடன், “Keyboard Properties” என்ற டேப் உள்ள விண்டோ கிடைக்கும். இதில் “Speed” என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு “Cursor blink rate” என்பதில் உள்ள ஸ்லைடரை, இடது புறம் ஓரமாக (“None”) என்று இருக்கும் இடத்திற்குக் கொண்டு வரவும். அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி கர்சர் அனிமேஷன் இருக்காது. ஆனால், இதனை செட் செய்த பின்னர், உங்கள் தந்தை, கர்சர் துடிப்பதனைத்தான் விரும்புவார். அவ்வாறு விரும்பினால், மீண்டும் மேலே காட்டியபடி சென்று, “Cursor blink rate”ல் தேவையான அளவில் ஸ்லைடரை அமைக்கவும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சிவா - chennai,இந்தியா
22-நவ-201220:29:51 IST Report Abuse
சிவா நான் வாரம் வாரம் கம்ப்யூட்டர் மலர் படித்து வருகிறேன் ... அதில் கேள்வி பதில் பகுதி உள்ளது நான் அதில் எப்படி கேள்வி கேட்பது என்று தெரியவில்லை .... ப்ளீஸ் ஹெல்ப் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X