கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 நவ
2012
00:00

கேள்வி: வெகுநாட்களாக நான் பயன்படுத்தி வரும் லேப்டாப் கம்ப்யூட்டரில், டாஸ்க் பாரில், கம்ப்யூட்டரில் உள்ள மின்சக்தியைக் காட்டும் ஐகான் காணப்படும். தற்போது அது காணப்படுவதில்லை. என் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ்பி. இதனை எப்படிப் பெறுவது?
என். கார்த்திகா, திருப்பூர்.
பதில்:
விண்டோஸ் எக்ஸ்பி எப்போதும், லேப்டாப் கம்ப்யூட்டரின் பேட்டரி பவர் எவ்வளவு உள்ளது என்று காட்டும் பவர் மீட்டரைக் கொண்டுள்ளது. லேப்டாப்பினை மின் இணைப்புடன் சேர்த்துவிட்டால் மட்டுமே இது காட்டப்பட மாட்டாது. எப்போதும் இது காட்டப்பட வேண்டும் என வலியுறுத்தி அமைத்தாலே, இது எப்போதும் காட்டப்படும். இதனைப் பெற கீழ்க்காணும் வழிகளில் செயல்படவும்.
1. “Start” கிளிக் செய்து, “Control Panel” ஐத் தேர்ந்தெடுக்கவும்.
2. இங்கு “Power Options” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இப்போது பல டேப்கள் கொண்ட “Power Options Properties” என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் “Advanced” என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்.
4. இங்கு Always show icon on the taskbar என்ற வரியில் முன் உள்ள செக் பாக்ஸில் டிக் செய்திடவும்.
5. அடுத்து, ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: என் சிஸ்டத்தில் உள்ள வேர்டில், டேபிள் அமைக்க சுருக்கு வழியைப் பயன்படுத்தினேன். இடது புற மார்ஜின் அருகே நான்கு ப்ளஸ் அடையாளம் ஏற்படுத்தி என்டர் செய்தேன். ஆனால் டேபிள் கிடைக்கவில்லை. முன்பு நான் பயன்படுத்திய சிஸ்டத்தில் இது கிடைத்தது. இதற்கான காரணம் என்ன?
சி.ஆர். செல்வகுமாரி, பொள்ளாச்சி.
பதில்:
நீங்கள் பயன்படுத்தும் வேர்ட் தொகுப்பின் பதிப்பு எண் என்ன என்று எழுதவில்லை. நீங்கள் சொல்லும் முறை சரியே. வேர்ட் புரோகிராமில், புதிய வரி ஒன்றில், இடது மார்ஜின் சென்று, அதில் நான்கு + அடையாளம் அமைத்து என்டர் செய்தால், சிறிய அளவிலான டேபிள் கிடைக்கும். பின்னர், இதனைத் தேவைக்கேற்ப விரித்துக் கொள்ளலாம். வெர்டிகல் பார் மற்றும் டேஷ் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.
இது உங்கள் சிஸ்டத்தில் இயங்கவில்லை எனில், அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். சில வேர்ட் புரோகிராமில், ஒவ்வொரு + அடையாளம் அல்லது நெட்டுக்கோடு அடையாளத்தினை (vertical bar) அடுத்து ஒரு ஸ்பேஸ் விட்டு அமைக்க வேண்டியதிருக்கும். இதனைப் பின்பற்றிய பின்னரும், டேபிள் கிடைக்கவில்லை எனில், வேர்ட் புரோகிராமில், இந்த செயல்பாடு முடக்கப்பட்டிருக்கும். இதனை இயக்க, கீழ்க்கண்டபடி செயல்படவும்.
1. Office பட்டன் கிளிக் செய்து, பின்னர் Word Options என்பதனைக் கிளிக் செய்திடவும். இப்போது Word Options டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.
2.பாக்ஸின் இடது புறம் உள்ள பகுதியில் உள்ள Proofing என்பதில் கிளிக் செய்திடவும்.
3. அடுத்து இங்கு AutoCorrect என்பதில் கிளிக் செய்திடவும்.
4. AutoCorrect டயலாக் பாக்ஸில் AutoFormat As You Type என்ற டேப் தேர்ந்தெடுக்கவும்.
5. இங்கு Tables செக் பாக்ஸில் டிக் அடையாளம் இருப்பதனை உறுதி செய்திடவும்.
6. அதன் பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
வேர்ட் 2003 பயன்படுத்தினால், நேராக Tools மெனுவில், AutoCorrect ஆப்ஷன்ஸ் பெற்று, அதில் இந்த மாற்றங்களை மேற்கொள்ளலாம்.

கேள்வி: என்னுடைய கம்ப்யூட்டரில் Rapport என்ற பெயரில் ஒரு புரோகிராம் அண்மையில் காணப்படுகிறது. இதனை நான் டவுண்லோட் செய்திடவில்லை. இது தானாக இயங்குவது போலவும் தெரியவில்லை. இது வைரஸ் வகையைச் சேர்ந்ததா? என் கம்ப்யூட்டரில் ஷேர் மார்க்கட் பரிமாற்றத்தினை மேற்கொண்டு வருகிறேன். இந்த புரோகிராம் அதனைச் சேர்ந்ததாகவும் தெரியவில்லை. இது குறித்து அறிவுரை தரவும்.
எஸ். ஜெகதீஷ் ராஜ், கோவை.
பதில்:
ஒரு நல்ல தகவலைத் தங்கள் கேள்வி வெளியே கொண்டு வருகிறது. எனவே கேள்விக்கு நன்றி. Rapport என்பது Trusteer என்னும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட, கம்ப்யூட்டருக்குப் பாதுகாப்பு கொடுக்கும் புரோகிராம். நிதி நிறுவனங்கள், இணைய தள வழி வர்த்தகம் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு, கூடுதல் பாதுகாப்பினை மிகச் சிறந்த முறையில் இது தருகிறது. நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில், மிகச் சிறந்த ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோகிராம்களை வைத்து இயக்கிவரலாம். ஆனால், மிக அண்மைக் காலத்தில் வெளியாகும் வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்களிடமிருந்து இவை உங்களை உடனடியாகப் பாதுகாக்காது. அப்படிப்பட்ட நேரத்தில் Rapport புரோகிராம் உங்களுக்கு உதவுகிறது.
நீங்கள் நிதி பரிமாற்றப் பரிவர்த்தனைகளை மேற்கொள்கையில், வேறு எந்த செயல்பாட்டினையும் இந்த புரோகிராம் அனுமதிக்காது. அதாவது, உங்கள் கம்ப்யூட்டரின் கதவினை மூடி, நீங்கள் நிதி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவன இணைய தளத்திற்கு மட்டுமே இணைப்பினை இந்த புரோகிராம் அனுமதிக்கும். இத்தகைய இணைப்பினை, Trusteer நிறுவனம் “tunnel” வழிப் போக்குவரத்து என அழைக்கிறது. அதாவது, நீங்கள் வீட்டுக்குள் ஒருவரை அழைத்து, வர்த்தக நடவடிக்கை மேற்கொள்கையில், வீட்டிற்கு முன்னால் நின்று, வேறு யாரேனும் வருகிறார்களா என்று கண்காணிப்பதைக் காட்டிலும், குறிப்பிட்ட வர்த்தகம் முடியும் வரை வீட்டின் கதவை மூடுவதற்குச் சமமாகும் இது.

கேள்வி: நான் இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் பயன்படுத்தி வருகிறேன். எக்ஸ்பியுடன் வரும் கால்குலேட்டரில், கிராப் தரும் வசதி இல்லை. கம்ப்யூட்டரில் பதிந்து பயன்படுத்தும் வகையில் இலவச தர்ட் பார்ட்டி கால்குலேட்டர் எந்த தளத்தில் கிடைக்கும்?
என்.கிருஷ்ணராஜ், விருதுநகர்.
பதில்:
நீங்கள் கேட்கும் கிராப் வசதியைத் தரும் கால்குலேட்டர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தாலேயே தரப்படுகிறது. எக்ஸ்பியுடன் கிடைக்கும் கால்குலேட்டர், பல அறிவியல் சார்ந்த கணக்குகளுக்கும் பயன்படும் வகையில் இருந்தாலும், கணிதக் கோட்பாடுகளை வரைபடம் தரும் வகையில் அதன் செயல்பாடு இருப்பதில்லை. அத்தகைய கிராபிக் கால் குலேட்டரைப் பெற, முதலில் http://www.microsoft.com/windowsxp/downloads/powertoys/xppowertoys.mspx என்ற முகவரியில் கிடைக்கும் இணைய தள முகவரிக்குச் செல்லவும். பின்னர், “PowerCalc.exe” அங்கு என்பதில் கிளிக் செய்திடவும். இனி “PowerCalcPowertoy Setup.exe” என்ற பைல் டவுண்லோட் செய்யப்படும். தொடர்ந்து “Next” பட்டனை அழுத்தி, இந்தக் கால்குலேட்டரை இன்ஸ்டால் செய்திடவும். அடுத்தடுத்து பல நிலைகளுக்கும்
விதிகளுக்கும் ஒப்புதல் கொடுத்து, நிறுவனத்தின் பெயர் போன்றவற்றையும் உள்ளீடு செய்த பின்னர் இன்ஸ்டால் செய்யப்படும். இன்ஸ்டால் செய்த பின்னர், “Start”, > “All Programs” சென்று “Powertoys for Windows XP” என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு மீண்டும் “PowerToy Calculator” என்பதில் கிளிக் செய்திட வேண்டியதிருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் கிராப் சரியாகக் கிடைக்கிறதா என்பதனைக் கீழ்க்காணும் பார்முலாக்களைக் கொடுத்துப் பார்க்கவும்.
U formation: f(x)=x^2
V formation: f(x)=abs(x)
Rising Curve: f(x)=exp(x)
Sine wave: f(x)=sin(x)
இது மட்டுமின்றி, கால்குலேட்டர் மெனுவில் “Conversions” என்பதனைத் தேர்ந்தெடுத்த பின்னர், கீழ்க்காணும் பார்முலாக்களைக் கொடுத்து விடைகளைப் பெறலாம்.
Converts 5 inches to feet: 5[in>ft]
Converts 0 degrees Celsius to Fahrenheit: 0[c>f]
Converts 23 days to minutes: 23[d>min]
Converts 100 pounds to ounces: 100[lb>oz]

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X